Chennai News Updates: சென்னையில் 130 இடங்களில் வாகன தணிக்கை

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Bike taxi

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • May 25, 2025 20:55 IST

    ஓய்வு குறித்து மனம் திறந்த தோனி

    ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு எப்போது? என்பது குறித்து மனம் திறந்த சி.எஸ்.கே கேப்டன் தோனி. ராஞ்சிக்கு செல்வேன். 4, 5 மாதங்கள் இருக்கின்றன. யோசித்து சொல்வேன். ஓய்வு குறித்து பேச இப்போது அவசரம் இல்லை. நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து தோனி ஓய்வு பெறுவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், தோனி விளக்கம்



  • May 25, 2025 20:52 IST

    ஆளுநர் மாளிகைக்கு மீண்டும் வெடிகுண்டு மிரட்டல்

    புதுச்சேரியில் 6வது முறையாக ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுகக்ப்பட்டுள்ளது. மிரட்டல் விடும் மர்ம நபரை பிடிக்க முடியாமல் புதுச்சேரி மற்றும் மத்திய சைபர் கிரைம் போலீசார் திணறல்



  • Advertisment
  • May 25, 2025 19:33 IST

    சென்னையில் 130 இடங்களில் வாகன தணிக்கை

    சென்னை மாநகரில் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டு வரும் நிலையில், தெற்கு மண்டலத்தில் போலீசார் ரெட் பாதுகாப்பு ஒத்திகை பார்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சென்னையில் திருவான்மியூர், அடையாறு, தி.நகர், பரங்கிமலை உள்ளிட்ட 130 இடங்களில் வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது.



  • May 25, 2025 18:54 IST

    விஷவாயு தாக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் மயக்கம்

    சென்னை காவாக்கரையில், தங்கியிருந்த வீட்டின் கழிவுநீர் தொட்டியில் அடைப்பை சரி செய்ய  ஒன்றன்பின் ஒருவராக கழிவுநீர் தொட்டியில் இறங்கிய போது விஷவாயு தாக்கி 3 வடமாநில தொழிலாளர்கள் மயங்கிய நிலையில், மூவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.



  • Advertisment
    Advertisements
  • May 25, 2025 18:51 IST

    மூத்த மகன் தேஜ் பிரதாப்பை நீக்கினார் லாலு பிரசாத்

    மூத்த மகன் தேஜ் பிரதாப்பை குடும்பத்தில் இருந்தும், கட்சியில்  இருந்தும் நீக்குவதாக லாலு பிரசாத் யாதவ் அறிவித்துள்ளார். குடும்பத்தின் நன்மதிப்பை கெடுக்கும் வகையில் தேஜ் பிரதாப் செயல்படுவதால் அவரை நீக்கியுள்ளதாக கூறியுள்ள,ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவ் குடும்ப பாரம்பரிய மரபுகளை மீறுவதால், குடும்பத்தில் இருந்து தேஜ் பிரதாப்பை விலக்கி வைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.



  • May 25, 2025 18:49 IST

    மரம் விழுந்து உயிரிழந்த சிறுவன்: அமைச்சர் நேரில் அஞ்சலி

    ஊட்டியில் மரம் முறிந்து விழுந்து இறந்த கேரளாவை சேர்ந்த  சிறுவன். ஊட்டியில் தற்போது வரை பெரியளவில் பாதிப்பு இல்லை ,மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உயிரிழந்த சிறுவனின் உடல் ​சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் சாமிநாதன் கூறியுள்ளார்.



  • May 25, 2025 17:25 IST

    அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்

    தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . அதன்படி குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, திருப்பூர், கோவை, நீலகிரி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, வேலூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • May 25, 2025 17:24 IST

    மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம்

    பிரதமர் மோடி தலைமையில் தேசிய ஜனநாய கூட்டணி முதல்வகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாய கூட்டணியில் இடம்பெற்றுள்ள 20 மாநில முதல்-மந்திரிகள் பங்கேற்றனர். அதேபோல், 18 மாநில துணை முதல்-மந்திரிகளும் பங்கேற்றனர். அதேபோல், பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், உள்துறை மந்திரி அமித்ஷா உள்பட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.



  • May 25, 2025 16:40 IST

    'குபேரா' படத்தின் டீசர் வெளியீடு

    ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வருகிற ஜூன் மாதம் 20-ம் தேதி திரையரங்குகளில் குபேரா திரைப்படம் வெளியாக உள்ளது. தனுஷ் கதாநாயகனாக நடித்துள்ள இப்படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தெலுங்கு முன்னணி நடிகர் நாகார்ஜுனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.



  • May 25, 2025 16:07 IST

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ரூ.9.60 லட்சம் அபராதம்

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு ரூ.9.60 லட்சம் அபராதம் விதித்து தமிழ்நாடு கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையம் உத்தரவிட்டது. இ.சி.ஆர் சாலையில் உள்ள ஒடியூர் குளத்தில் விதிகளை மீறி மண் கொட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது. பாலபணிகளின்போது கடலோர மண்டல விதிகளை மீறி மண்ணை கொட்டி வைத்ததாக குற்றச்சாட்டப்பட்டது. செங்கல்பட்டு ஆட்சியரின் புகார் அடிப்படையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பரிந்துரையை ஏற்று நடவடிக்கை மேற்கொண்டனர்.



  • May 25, 2025 16:01 IST

    கோவை, நீலகிரியில் இன்று அதிகனமழைக்கு வாய்ப்பு

    கோவை மற்றும் நீலகிரியில் இன்று கன முதல் அதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்காசி, தேனி மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களில் இன்று கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருப்பூர், திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • May 25, 2025 15:30 IST

    'சுயநலத்திற்காக பா.ஜ.க-விடம் அடைக்கலம் புகுந்த தி.மு.க'; விஜய்

    குடும்ப சுயநலத்திற்காக பா.ஜ.க-விடம் தி.மு.க அடைக்கலம் புகுந்ததாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். குறிப்பாக, நிதி ஆயோக் கூட்டத்தை காரணம் காண்பித்து, அமலாக்கத்துறை சோதனைகள் தொடர்பாக பிரதமர் மோடியை ஸ்டாலின் சந்தித்ததாக அவர் விமர்சித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.



  • May 25, 2025 14:40 IST

    யு.பி.எஸ்.சி கேள்வி சர்ச்சை - தமிழிசை கருத்து

    யு.பி.எஸ்.சி தேர்வு கேள்வியில் பெரியாரின் பெயருடன் சாதிப்பெயர் இடம்பெற்றுள்ளதாக சர்ச்சை எழுந்த நிலையில், இது குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதன்படி, "சாதிப் பெயர் குறிப்பிட்டது தவறு; அதை நான் ஏற்கவில்லை" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • May 25, 2025 14:20 IST

    பைக் சாகசத்தில் ஈடுபடும் இளைஞர்கள் - பொதுமக்கள் அச்சம்

    சென்னையில், கோயம்பேடு முதல் அடையாறு பகுதி வரை ஏராளமான இளைஞர்கள் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களில் சாகசத்தில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • May 25, 2025 13:02 IST

    யு.பி.எஸ்.சி தேர்வில் பெரியாரின் பெயருக்குப் பின் சாதிப் பெயர் இடம்பெற்றதால் சர்ச்சை!

    மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி) நடத்திய தேர்வில், சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியவர் யார் என்ற கேள்விக்குரிய விடைகளில், பெரியாரின் பெயரான "பெரியார் ஈ.வெ.ரா. ராமசாமி நாயக்கர்" என சாதிப் பெயருடன் குறிப்பிடப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    யு.பி.எஸ்.சி தேர்வு வினாத்தாளில் இடம்பெற்றிருந்த இந்தக் கேள்விக்கு, பெரியார் ஈ.வெ. ராமசாமி நாயக்கர், டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், பாஸ்கரராவ் ஜாதவ் மற்றும் தின்கர்ராவ் ஜவல்கர் என நான்கு விருப்பத் தேர்வுகள் வழங்கப்பட்டிருந்தன. இதில் பெரியாரின் பெயருக்குப் பின் "நாயக்கர்" என்ற சாதிப் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    1925 ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கிய பெரியார், 1929 ஆம் ஆண்டு தனது சாதிப் பின்னொட்டை நீக்கினார். இத்தகைய வரலாற்று உண்மையைப் புறந்தள்ளி, பெரியாரின் பெயருடன் சாதிப் பெயரைச் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது, திட்டமிட்ட செயல் என்றும், பெரியாரின் சமூக நீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் நோக்கில் நடந்திருப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.



  • May 25, 2025 12:53 IST

    தி.மு.க-வோடு பா.ஜ.க நெருங்கிவிடக் கூடாது; அ.தி.மு.க-வில் பதற்றம் வெளிப்ப்டுகிறது - திருமாவளவன் 

    தி.மு.க-வோடு பா.ஜ.க நெருங்கிவிடக் கூடாதே என்ற பதற்றம் அ.தி.மு.க-வில் வெளிப்படுவதாக வி.சி.க தலைவர் திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார். 

    செய்தியாளர்களிடம் பேசிய விசிக தலைவர் திருமாவளவன், “தி.மு.க பா.ஜ.க-வுடன் நெருங்காது என்பதை அ.தி.மு.க அறியும். தி.மு.க மீது சந்தேகம் எழுப்புவதற்கே இந்த விமர்சனம் எழுப்பப்படுகிறது" என்று கூறினார். மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் கலந்துகொள்ளாதது ஒரு அடையாளப் போராட்டம் என்றும், இது மத்திய அரசுக்கு எதிரான ஒரு நிலைப்பாடு என்றும் திருமாவளவன் விளக்கமளித்தார். 



  • May 25, 2025 12:20 IST

    நாடு தேசபக்தியில் மூழ்கியுள்ளது: மோடி பெருமிதம்!

    பயங்கரவாதத்தை முழுமையாக ஒழிக்க வேண்டும் என வலியுறுத்திய பிரதமர் நரேந்திர மோடி, நாடு தற்போது தேசபக்தியில் மூழ்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தேசியக் கொடியேந்தி பேரணிகள் நடைபெற்று வருவதை அவர் சுட்டிக்காட்டினார். இது குறித்து இன்று பேசிய பிரதமர் மோடி, "ஆபரேஷன் சிந்தூர்" போன்ற இராணுவ நடவடிக்கைகள் மட்டுமல்லாது, மக்களின் ஒட்டுமொத்த உணர்வையும் வெளிப்படுத்தும் நடவடிக்கைகளே முக்கியம் எனத் தெரிவித்தார். நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட பகுதிகளில் தேசபக்தி உணர்வு மேலோங்கியுள்ளதாகவும், இது ஒரு ஆரோக்கியமான வளர்ச்சி என்றும் அவர் கூறினார்.

    "ஆபரேஷன் சிந்தூர்" குறித்த முழுமையான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை என்றாலும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாகவே இது குறிப்பிடப்படுகிறது. மக்களின் இந்த தேசபக்தி உணர்வு, பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் நாட்டுக்கு மேலும் பலம் சேர்க்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். தேசத்தின் பாதுகாப்பு மற்றும் ஒருமைப்பாட்டை உறுதி செய்வதில் அரசு உறுதியுடன் இருப்பதாகவும், பயங்கரவாதத்தை வேரோடு களைய பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.



  • May 25, 2025 12:01 IST

    தலைமை காஜி மறைவுக்கு ஸ்டாலின் அஞ்சலி

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாகிபு-வின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்



  • May 25, 2025 12:01 IST

    அண்ணா பல்கலை. பாலியல் வழக்கு - தீர்ப்பு தேதி அறிவிப்பு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் தொந்தரவு செய்ததாக கைது செய்யப்பட்ட ஞானசேகரன் வழக்கில் மே 28 ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது



  • May 25, 2025 11:28 IST

    யு.பி.எஸ்.சி தேர்வு: ஹிந்தி அறிவிப்பு பலகையால் சர்ச்சை

    நாடு முழுவதும் யு.பி.எஸ்.சி முதல்நிலைத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், சென்னை மண்ணடியில் உள்ள தேர்வு மையத்தில் ஹிந்தியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருப்பதால் சர்ச்சை எழுந்துள்ளது



  • May 25, 2025 10:50 IST

    92% அதிக அளவு மழை - வானிலை ஆய்வு மையம்

    இயல்பை விட இந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் 92% அதிக அளவு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 25, 2025 10:49 IST

    தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

    தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை பெய்யும். தேனி, தென்காசி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் மிதமான மழை பெய்யும். குமரி, நெல்லை, விருதுநகர் மற்றும் மதுரையில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • May 25, 2025 10:16 IST

    நாடு முழுவதும் UPSC முதல்நிலை தேர்வு தொடக்கம்

    மத்திய அரசின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் உள்ளிட்ட பதவிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம்(யு.பி.எஸ்.சி.) சிவில் சர்வீசஸ் முதல்நிலை தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தேர்வு மையங்களில் எழுத்து முறையில் யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வு நடத்தப்படுகிறது. சென்னையில் 69 மையங்களில் காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை யு.பி.எஸ்.சி. தேர்வு நடக்கிறது. இதில் மாற்றுத் திறனாளிகள் உள்பட 24,364 தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வு நடைபெறும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.



  • May 25, 2025 10:15 IST

    கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

    நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு கனமழை முதல் அதிகனமழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுவதால், அந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும் என்பதால் அங்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், திருப்பூர், திண்டுக்கலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யும் என்பதால் மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது.



  • May 25, 2025 09:35 IST

    தலைமை காஜி மறைவுக்கு ஈபிஎஸ் இரங்கல்

    தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவுற்றார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். சலாஹுத்தீன் அயூப் மறைவு இஸ்லாமிய மக்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் ஏற்பட்டுள்ள பேரிழப்பாகும் என எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • May 25, 2025 09:07 IST

    தலைமை காஜி மறைவு - முதல்வர் இரங்கல்

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் மறைவு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • May 25, 2025 09:05 IST

    தலைமை காஜி மறைவுக்கு விஜய் இரங்கல்

    தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாஹுத்தீன் அயூப் மறைவு செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன். தனது தலைமை காஜி பொறுப்பில் நேர்மையோடு அறத்தின் வழியில் பணியாற்றியவர். தனது பொறுப்புக்காக அரசு வழங்கிய கார், வீடு ஆகிய சலுகைகளைப் பெறாமல் சேவையாற்றியவர் என தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.  



  • May 25, 2025 08:29 IST

    பட்டாசு ஆலை வெடி விபத்து

    சிவகாசி அருகே தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்ட நிலையில் சுமார் 10 கிலோமீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு காணப்பட்டது. ஒரு அறை இடிந்து தரை மட்டமான நிலையில் இடிபாடுகளில் சிலர் சிக்கி இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • May 25, 2025 08:27 IST

    விபத்தால் 4 பேருக்கு நேர்ந்த சோகம்

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சாலையை கடக்க முயன்ற 7 பேர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 



  • May 25, 2025 08:04 IST

    உதகையில் சுற்றுலாத் தலங்கள் மூடல்

    உதகையில் மழை பெய்து வரும் நிலையில் தொட்டபெட்டா, பைன் பாரஸ்ட், அவலாஞ்சி, உதகை படகு இல்லம் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்கள் மூடப்பட்டுள்ளன. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி சுற்றுலாத் தலங்கள் இன்று தற்காலிகமாக மூடல் என அறிவிக்கப்பட்டுள்ளது. 



  • May 25, 2025 08:02 IST

    டெல்லியை புரட்டி போடும் கனமழை!

    டெல்லியில் பலத்த காற்றுடன் கொட்டித் தீர்த்த கனமழையால் 25 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. 100 விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளதால் சாலை போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. 



  • May 25, 2025 08:00 IST

    சதுரகிரி செல்ல தடை

    கனமழை எச்சரிக்கை காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2 நாட்கள் கோயிலுக்கு வர தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது. 



  • May 25, 2025 07:58 IST

    24 மணிநேரத்தில் 21.5 செ.மீ. மழை

    நீலகிரி, அவலாஞ்சியில் கடந்த 24 மணிநேரத்தில் 21.5 செ.மீ மழை பதிவு நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதகை, கூடலூர், பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் விட்டுவிட்டு மழை பெய்தது. எமரால்டு, பந்தலூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.



  • May 25, 2025 07:44 IST

    பட்டாசு ஆலையில் வெடி விபத்து

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அம்மாபட்டியில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து விபத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் அச்சம். சம்பவ இடத்திற்கு தீயணைப்புத்துறையினர் விரைந்துள்ளனர்.



  • May 25, 2025 07:43 IST

    குற்றாலத்தில் குளிக்க தடை

    மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கோவை குற்றாலத்தில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை இந்த தடை நீடிக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. 



  • May 25, 2025 07:42 IST

    நீலகிரியில் மழை- அவசர எண் அறிவிப்பு

    நீலகிரியில் இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில் உதவிக்கான அவசர எண் அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் தொடர்பான பாதிர்ப்பு இருந்தால் 94987 94987 எண்ணில் தெரிவிக்கலாம். 



  • May 25, 2025 07:35 IST

    புறநகர் மின்சார ரயில்கள் இன்றும் ரத்து

    கவரப்பேட்டை - பொன்னேரி இடையே சிக்னல் பராமரிப்புப் பணி காரணமாக புறநகர் ரயில்கள் இன்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. பகல் 1.20 முதல் மாலை 5.20 மணி வரை புறநகர் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 19 புறநகர் ரயில்கள் முழுவதுமாகவும் 2 ரயில்கள் பகுதியாகவும் ரத்து என ரயில்வே அறிவிக்கப்பட்டுள்ளது.



news updates Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: