/tamil-ie/media/media_files/uploads/2023/08/thir.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை: சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.25 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906 இல் இருந்து ரூ.1881 ஆக குறைந்தது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50க்கு விற்பனையாகிறது.
-
Jun 01, 2025 22:21 IST
வி.சி.க-வுக்கு பா.ம.க போட்டி இல்லை - திருமாவளவன்
வி.சி.க-வுக்கு பா.ம.க போட்டி இல்லை - திருமாவளவன் வி.சி.க தலைவர் திருமாவளவன்: “பா.ம.க ஒருபோதும் வி.சி.க-வுக்கு போட்டி இல்லை; பா.ம.க-வில் நடப்பது உட்கட்சி விவகாரம், அது பற்றி கருத்து சொல்ல ஏதுமில்லை” என்று கூறினார்.
-
Jun 01, 2025 20:46 IST
தேசிய கல்விக் கொள்கை அவசியமானது; நாடு வேகமாக முன்னேறும்- ஆளுநர் ஆர்.என். ரவி
ஆபரேஷன் சிந்தூர் வெற்றி நிகழ்வில் ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு: “நம் தேசம் பற்ரிய ஒரு சரியான தெளிவை பிரதமர் மோடி கொண்டுள்ளார். நம் நாட்டின் ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு தனிமனிதனும் முக்கியம் என்பதில் பிரதமர் மோடி கவனமாக உள்ளார். தேசிய கல்விக் கொள்கை அவசியமானது; இதனால் நாடு வேகமாக முன்னேறும்” என்று கூறினார்.
-
Jun 01, 2025 20:14 IST
போர் என்றால் இழப்புகள் இருக்கத்தான் செய்யும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி: “ஆபரேஷன் சிந்தூர் பற்றி எதிர்க்கட்சிகள் கேள்விகள், சந்தேகங்கலை எழுப்புகின்றனர்; போர் என்றால் சில இழப்புகள் இருக்கத்தான் செய்யும்; அதைப் பற்றி கவைப்படக் கூடாது” என்று கூறினார்.
-
Jun 01, 2025 20:10 IST
சென்னையில் நீச்சல் குளத்தில் தவறி விழுந்து ஒருவர் பலி
சென்னை பெரியமேட்டில் மைலேடி மாநகராட்சி பூங்கா நீச்சல் குளத்தில் 40 வயது மதிக்கத்தக்க நபர் குடிபோதையில் தவறி விழுந்து பலியானார்.
-
Jun 01, 2025 18:57 IST
மதராசி பகுதியில் தமிழர்களின் வீடுகள் இடிப்பு - பிரேமலதா கண்டனம்
மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், "தமிழ் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் வீடுகளை இடிப்பது எவ்விதத்தில் நியாயம்? மதராசி பகுதி தமிழர்களுக்கு உடனடி தீர்வு, நீதி கிடைக்க வேண்டும். அந்த பகுதியில் சுமார் 3 தலைமுறைகளாக வாழும் தமிழர்களின் வீடுகளை, கால்வாய் அகலப்படுத்தும் திட்டத்திற்காக இடிப்பதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். அந்த மக்களுக்கு டெல்லி ஆட்சியாளர்கள் உடனடியாக மாற்று இருப்பிடத்தையும், வீடுகளையும், வசதிகளையும், ஏற்படுத்தித் தந்து பாதுகாக்க வேண்டியது அவர்களின் கடமை" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
-
Jun 01, 2025 18:32 IST
மம்தா மீது அமித் ஷா குற்றச்சாட்டு
முஸ்லிம் ஓட்டு வங்கியை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக 'ஆபரேஷன் சிந்தூர்' மற்றும் வக்ப் சட்டத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி எதிர்க்கிறார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார்.
-
Jun 01, 2025 18:29 IST
தமிழக ரயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதா? - விளக்கம்
தமிழக ரயில் திட்ட நிதி திருப்பி அனுப்பப்பட்டதாக எழுந்த சர்ச்சைக்கு தெற்கு ரயில்வே விளக்கமளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நிதியை அடுத்த காலாண்டுகளுக்கு மாற்றுவது தொடர்பான தகவல் தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் நிதிப்பற்றாகுறை இல்லை. தேவைக்கேற்ப திட்டங்களுக்கு நிதி கிடைக்கிறது. காலாண்டிற்குள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிதி பிற திட்டங்களுக்கு மாற்றப்படுகிறது. தமிழ்நாடு, கேளராவிற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவே பயன்படுத்தப்படுகிறது." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 18:02 IST
அஞ்சலை அம்மாள் சிலைக்கு விஜய் மரியாதை
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் அஞ்சலை அம்மாள் சிலைக்கு தவெக தலைவர் விஜய் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதுகுறித்து விஜய் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள். விடுதலைப் போராட்டக் களத்தில் அவரது போர்க்குணம் போற்றுதலுக்கு உரியது என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 01, 2025 17:11 IST
234 தொகுதிகளுக்கு உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கு உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்துள்ளனர். தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி அதிகாரிகள் நியமனம். தொகுதிக்கு 3 அதிகாரிகள் வீதம் 700க்கும் மேற்பட்டோர் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகளாக நியமனம். தேர்தல் ஆணைய உத்தரவுப்படி விவரங்களை அரசிதழில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டார்.
-
Jun 01, 2025 17:10 IST
தமிழகத்தில் 6ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம்
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக 6ம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும். தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் இப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
Jun 01, 2025 17:09 IST
சி.என்.ஜி சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழப்பு
டெல்லியில் சி.என்.ஜி சிலிண்டர் வெடித்த விபத்தில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர். பழைய சி.என்.ஜி சிலிண்டர்கள் வைக்கும் குடோனில் நேற்று நள்ளிரவில் நேர்ந்த விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 3 பேரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் 2 சிறார்கள் உயிரிழந்தனர்.
-
Jun 01, 2025 17:06 IST
நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் பெட்டி குறைப்பு
நெல்லை, பொதிகை விரைவு ரயில்களில் ஸ்லீப்பர் வகுப்பு பெட்டிகளின் எண்ணிக்கை 8ல் இருந்து 7ஆக குறைக்கப்படுகிறது. அதற்கு மாற்றாக ஒரு 3AC பெட்டி சேர்க்கப்படவுள்ளது. இந்த மாற்றம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது
-
Jun 01, 2025 16:39 IST
திட்டுவது தற்கொலை தூண்டுதல் ஆகாது - உச்சநீதிமன்றம்
ஒரு புகாரின் அடிப்படையில் ஆசிரியர் திட்டியதால், மாணவன் தன் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவுக்கு துயரம் நடக்கும் என்று, எந்த சாதாரண மனிதனும் நினைத்துப் பார்த்திருக்க முடியாது. மாணவனைத் தற்கொலைக்குத் தூண்டியதாக ஆசிரியர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
Jun 01, 2025 16:38 IST
அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை - இ.பி.எஸ்.
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “திமுக தான் நாட்டிற்கு துரோகம் செய்துள்ளது. அதிமுக யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. அதிமுக ஆட்சி காலத்தில் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்தோம். தமிழகத்தில் நாள்தோறும் குற்றச் செயல்கள் நடக்கின்றன.16 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது ஏன் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றவில்லை. தூர்வாராததால் பந்தல்குடி கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடினர். கால்வாயை திரைச்சீலை கொண்டு மூடும் அளவுக்கு அவல ஆட்சி நடைபெறுகிறது” என்று அவர் கூறினார்.
-
Jun 01, 2025 16:37 IST
விஜய் என்னுடன் பேசவில்லை - எடப்பாடி பழனிசாமி
கோவையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது எடப்பாடி பழனிசாமியிடம் ஆதவ் அர்ஜுனா பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “அவரே மறுபடி டிவிட் செய்துவிட்டார். ஆதவ் அர்ஜுனா விவகாரம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் என்னுடன் தொலைபேசியில் பேசவில்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
Jun 01, 2025 16:34 IST
5 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன்படி தென்காசி, தேனி, திண்டுக்கல், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் லேசான இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 16:07 IST
தே.மு.தி.க உடன் சுமூக உறவு உள்ளது – இ.பி.எஸ்
தே.மு.தி.க உடன் சுமூக உறவு உள்ளது. எதையாவது சொல்லி பிரேக் பண்ண நினைக்காதீங்க. அது ஒருபோதும் நடக்காது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவையில் பேட்டி அளித்தார்.
-
Jun 01, 2025 15:09 IST
"மதராஸி கேம்ப்" - உதவிக் கரம் நீட்டும் தமிழக அரசு
தெற்கு டெல்லி, நிஜாமுதீன் பராப்புல்லா ஜங்க்புரா வடிகாலின் கரையில் அமைந்துள்ள குடிசை பகுதியான மதராஸி கேம்ப் குடியிருப்பாளர்கள் சொந்த மாவட்டங்களுக்கு திரும்ப விரும்பினால் அனைத்து உதவிகளும் செய்யப்படும். வாழ்வாதாரம் மற்றும் தேவையான பிற அடிப்படை உதவிகளும் வழங்கப்படும். உதவிகள், சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களின் அலுவலகம் மூலம் சரியான நேரத்தில் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
Jun 01, 2025 14:02 IST
அன்புமணி தலைமையில் 3-வது நாளாக ஆலோசனை கூட்டம்
சென்னை, சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பா.ம.க நிர்வாகிகளோடு, அன்புமணி மூன்றாவது நாளாக ஆலோசனை கூட்டம் நடத்தி வருகிறார்.
-
Jun 01, 2025 13:23 IST
இ.பி.எஸ் தொடர்பான விமர்சனம் - வருத்தம் தெரிவித்த ஆதவ் அர்ஜூனா
எடப்பாடி பழனிசாமியை விமர்சனம் செய்த வீடியோ வெளியான நிலையில், அதற்கு வருத்தம் தெரிவித்து த.வெ.க தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதன்படி, "அந்த காணொளியில் வெளியான வார்த்தைகள் எனது இயல்பை மீறியது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அதற்காக, உண்மையாகவும், நேர்மையாகவும் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 01, 2025 12:51 IST
தே.மு.தி.க கூட்டணி குறித்து ஜனவரியில் தான் அறிவிப்போம் - பிரேமலதா திட்டவட்டம்
தே.மு.தி.க கூட்டணி குறித்து 2026-ஆம் ஆண்டு ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெற இருக்கும் மாநாட்டில் தான் அறிவிப்போம் என்று பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியில் தே.மு.தி.க தொடரும் என்று அ.தி.மு.க கூறியது குறித்த கேள்விக்கு, அதனை அக்கட்சியினரிடம் தான் கேட்க வேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
-
Jun 01, 2025 12:03 IST
குடும்பம், கட்சியில் வழக்கமாக நடப்பதுதான்; ராமதாஸ்
பாமக நிர்வாகிகள் நியமனம், நீக்கம் விவகாரத்தை பெரிதுபடுத்த வேண்டாம் இந்த விவகாரத்தை நாங்களே பெரிதுபடுத்தவில்லை; ஒவ்வொரு கட்சியிலும் குடும்பத்திலும் நடப்பதுதான் பாமகவிலும் நடக்கிறது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Jun 01, 2025 11:15 IST
2026இல் ஸ்டாலினை முதல்வராக்க தீர்மானம்: திமுக
2026 தேர்தலில் வென்று ஸ்டாலினை மீண்டும் முதல்வராக்க திமுக பொதுக்குழுவில் தீர்மானம் ஸ்டாலினை முதலமைச்சராக்க அனைவரும் அயராது உழைப்போம் என பொதுக்குழுவில் தீர்மானம் திமுக கூட்டணி முழுமையான வெற்றிபெற அயராது உழைப்போம் என திமுக தீர்மானம் நிறைவேற்றம்
-
Jun 01, 2025 10:22 IST
“ஆளுநருக்கு தமிழக அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்” - மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
ஆளுநருக்கு தமிழகஅரசு ஒத்துழைப்பு தந்தால் மாநிலத்தின் வளர்ச்சிக்கு உதவும். மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைப்பதால் பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள் திமுகவை ஒழிக்க கட்சி தொடங்கிய கமல் தனது நன்மைக்காக திமுகவை புகழ்கிறார் மஹாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்
-
Jun 01, 2025 10:09 IST
சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு
கச்சா எண்ணெய் மீதான அடிப்படை சுங்கவரி குறைப்பால் சமையல் எண்ணெய் விலை குறைய வாய்ப்பு. கச்சா பாமாயில், சோயாபீன், சூரியகாந்தி எண்ணெய் மீதான சுங்க வரி 20%இல் இருந்து 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 09:44 IST
வேகமெடுக்கும் கொரோனா
இந்தியாவில் புதிதாக 685 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தமாக 3395 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக கேரளாவில் 1336 பேருக்கு பாதிப்பு என தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 01, 2025 09:07 IST
சின்னத்திரை நடிகை மீது வழக்கு
மதுபான பார் தகராறு தொடர்பாக கணவரை கைது செய்த போலீசார் மீது அவதூறு பேசியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சின்னத்திரை நடிகை ரோஜா ஸ்ரீ மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 09:04 IST
சுட சுட தயாராகும் காலை உணவு
திமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்காக சுடசுட சைவ உணவு தயாராகிறது.
-
Jun 01, 2025 08:43 IST
குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி
குற்றாலம் அருவிகளில் 7 நாட்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகளுக்கு குளிக்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருந்ததால் பாதுகாப்பு காரணங்களுக்காக தடை விதிக்கப்பட்டிருந்தது.
-
Jun 01, 2025 08:42 IST
ராஜ்யசபா சீட்டுக்காக கமல் மாறிவிட்டார்: நயினார்
மாநிலங்களவை சீட் கொடுத்தவுடன் திமுக எதிர்ப்பு நிலையில் இருந்து கமல் மாறிவிட்டார். ஆரம்பத்தில் வாரிசு அரசியலை எதிர்த்த கமல் இப்போது வாரிசு அரசியலை ஆதரிக்கிறார் என்று தமிழக பாஜக தலைவர் நியினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.
-
Jun 01, 2025 08:10 IST
மதுரையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை
மதுரையில் இன்று ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவிடப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் மதுரையில் முகாமிட்டுள்ளதையொட்டி ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 08:09 IST
டெல்லியில் தமிழர்கள் வசித்த மதராஸி முகாம் இடிப்பு
டெல்லியில் 4 தலைமுறைகளாக தமிழர்கள் வசித்து வந்த மதராஸி முகாம் இடிக்கப்பட்டு வருகிறது. கால்வாயை ஒட்டியுள்ள குடிசை பகுதிகளை அகற்றும் பணியில் ஒரு பகுதியாக இடிக்கப்பட்டு வருகிறது. முகாம் பகுதியில் வசித்த 370 குடும்பங்களில் 189 குடும்பங்களுக்கு மட்டுமே மாற்று இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
-
Jun 01, 2025 07:31 IST
3 ஆவது நாளாக பாமக தலைவர் அன்புமணி இன்று ஆலோசனை
கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 12 மாவட்ட நிர்வாகிகளுடன் பனையூர் அலுவலகத்தில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
-
Jun 01, 2025 07:29 IST
மதுரையில் இன்று திமுக பொதுக்குழு கூட்டம்
மதுரை உத்தங்குடியில் திமுக பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணிக்கு தொடங்குகிறது. பொதுக்குழு வளாகத்தில் 100 அடி உயர கொடிக்கம்பத்தில் திமுக கொடியை ஏற்றுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இன்று காலை 10.30 மணியளவில் திமுக பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
-
Jun 01, 2025 07:27 IST
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை உயர்வு
சென்னையில் வணிக பயன்பாட்டிற்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை ரூ.25 குறைந்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை ரூ.1906 இல் இருந்து ரூ.1881 ஆக குறைந்தது. வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.868.50க்கு விற்பனையாகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.