Chennai News Highlights : 'தொடர்ச்சியான பயணங்கள் மூலம் உங்களை சந்திப்பேன்; மகத்தான வெற்றி பெறுவோம்' - ஸ்டாலின்

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin speech new

பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  • Jun 02, 2025 21:53 IST

    தொடர்ச்சியான பயணங்கள் மூலம் உங்களை சந்திப்பேன் - ஸ்டாலின்

    மதுரையில் நடைபெற்ற தி.மு.க பொதுக்குழு கூட்டம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பொதுக்குழுவா? கழக மாநாடா? என வியக்கும் வகையில் நடந்தேறியிருக்கிறது தி.மு.க. பொதுக்குழு 2025! கலைஞர்102-ஐ செம்மொழிநாள் எனக் கொண்டாடி மகிழ்ந்து, ஓரணியில் தமிழ்நாடு என கழகத்தின் வலிமையைப் பன்மடங்காக்குவோம்! தொடர்ச்சியான பயணங்களில் உங்களைச் சந்திப்பேன்! களம் 2026-இல் மகத்தான வெற்றியைப் பெற்று, ஆட்சியைத் தொடர்வோம்!" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



  • Jun 02, 2025 20:55 IST

    4 ஆண்டுகளில் பல பாலியல் வழக்குகளுக்கு ஏன் இன்னும் தீர்ப்பு அளிக்கவில்லை? - நயினார் நாகேந்திரன் கேள்வி

    4 ஆண்டுகளில் பல பாலியல் வழக்குகளுக்கு ஏன் இன்னும் தீர்ப்பு அளிக்கவில்லை என்று பா.ஜ.க மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், ஞானசேகரனுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தாம் வரவேற்பதாக கூறிய அவர், ஞானசேகரன் வழக்கில் யாரையோ மறைக்க முதலமைச்சர் இப்படி ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். குறிப்பாக, யார் அந்த சார் என்ற கேள்வி தனக்கு மட்டுமல்ல, எல்லோரிடத்திலும் இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Advertisment
  • Jun 02, 2025 20:03 IST

    குகேஷுக்கு ஸ்டாலின் வாழ்த்து

    உலகின் நம்பர் - 1 செஸ் வீரர் கார்ல்சனை வீழ்த்திய இந்திய வீரர் குகேஷுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். குறிப்பாக, குகேஷின் பயணத்தில் இது ஒரு மைல்கல் என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Jun 02, 2025 19:46 IST

    மோடி தலைமையில் நாளை மத்திய அமைச்சரவை கூட்டம்

    பிரதமர் மோடி தலைமையில் நாளை (ஜூன் 3) மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை குறித்த விவரங்கள், இந்தக் கூட்டத்தில் அமைச்சர்களுக்கு வழங்கப்படலாம் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும், மோடி அரசின் மூன்றாவது பதவிக் காலத்தின் முதலாமாண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் மேற்கொள்ள இருக்கும் திட்டங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



  • Advertisment
    Advertisements
  • Jun 02, 2025 19:11 IST

    ஜூன் 15ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு

    ஜூன் 15-ஆம் தேதி நடைபெற இருந்த முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இரண்டு ஷிஃப்டுகளாக நடைபெற்று வந்த தேர்வை, ஒரே ஷிஃப்டாக நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து, தேசிய மருத்துவ தேர்வு வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது.



  • Jun 02, 2025 18:29 IST

    தமிழகத்தில் சில மாவட்டங்கள் பின்தங்கி உள்ளன: ஆளுநர்

    தமிழ்நாட்டில் ஒருசில மாவட்டங்கள் இன்றும் பெரியளவில் பிண்நங்கி உள்ளன. ஊட்டச்சத்து குறைபாடுகளுடன் மாணவர்கள் ஒருசில மாவட்டங்களில் உள்ளனர் ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.



  • Jun 02, 2025 18:01 IST

    ஞானசேகரனுக்கு வழங்கப்பட்ட தீர்ப்புக்கு வரவேற்பு: கமல்

    ஞானசேகரனுக்கு விதித்திருக்கும் மகளிர் சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன். பெண்களுக்கு எதிரான எந்த செயலையும் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது. அத்தகைய குற்றங்களுக்கு அஞ்சும் வகையில் தண்டனை எனும் நம்பிக்கையை இத்தீர்ப்பு உறுதி செய்கிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.



  • Jun 02, 2025 17:37 IST

    'சார் என்ற வார்த்தையை ஏமாற்றவே பயன்படுத்தினார்' - நீதிபதி

    சார் என்ற வார்த்தையை ஏமாற்றும் நோக்கில்தான் ஞானசேகரன் பயன்படுத்தினார். பாதிக்கப்பட்டவரை ஏமாற்றி,திசைதிருப்ப, மிரட்ட சார் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இது அறிவியல்பூர்வமாகவும் நேரடி சாட்சிகள் மூலமும் உறுதியாகி உள்ளது. 



  • Jun 02, 2025 17:11 IST

    கல்வி நிகழ்வுகளை அன்பரசன் தவிர்க்க வேண்டும்:அண்ணாமலை

    அமைச்சர் தா.மோ.அன்பரசன் கல்வி தொடர்பான நிகழ்வுகளை தவிர்க்க வேண்டும். மூவரசம்பட்டு பள்ளி நிகழ்வில் அமைச்சர் தாமதமாக வந்ததால் மாணவிகள் காத்திருக்க வைக்கப்பட்டனர். அமைச்சர் அன்பரசன் பங்கேற்ற பள்ளி நிகழ்வில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது என்றும் அண்ணாமலை கூறினார்.



  • Jun 02, 2025 16:41 IST

    பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றவும், மிரட்டவும் ‘சார்’ என்ற வார்த்தையை ஞானசேகரன் பயன்படுத்தியுள்ளார் : தீர்ப்பில் தெரிவிப்பு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கில் தீர்ப்பு விவரம் வெளியானது. அதில் “பாதிக்கப்பட்ட பெண்ணை ஏமாற்றவும், மிரட்டவும் ‘சார்’ என்ற வார்த்தையை பயன்படுத்தி, தானும் பல்கலைக்கழக ஊழியர் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது அறிவியல் பூர்வமாகவும் நேரடி சாட்சிகள் மூலமாகவும் தெரிய வந்துள்ளது. அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஞானசேகரன் ஒருவர் மட்டுமே குற்றவாளி என்ற அரசுத் தரப்பு வாதத்தை இந்நீதிமன்றம் திருப்தியுடன் ஏற்றுக்கொள்கிறது” இவ்வாறு தெரிவிக்கப்பட்டது.



  • Jun 02, 2025 16:40 IST

    பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல்

    பூவிருந்தவல்லி முதல் பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பூவிருந்தவல்லி- பரந்தூர் வரை 52.94 கி.மீ. தூரத்துக்கு 2 கட்டங்களாக செயல்படுத்தப்படவுள்ளது. முதற்கட்டமாக ரூ.8,779 கோடியில் பூவிருந்தவல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரை திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.



  • Jun 02, 2025 16:17 IST

    கர்நாடக அமைப்புகளுக்கு முதல்வர் சித்தராமையா ஆதரவு

    கர்நாடக முதல்வரை சந்தித்து தக்லைஃப் பட பிரச்னை குறித்து திரைப்பட வர்த்தக சபை முறையீடு வர்த்தக சபைக்கு சட்டரீதியாக ஆதரவு, ஒத்துழைப்பு தருவதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி; கன்னட மொழி பிரச்னையில் அனைவரும் உறுதியாக நிற்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தல்



  • Jun 02, 2025 15:59 IST

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனை..!!

    சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1120 உயர்ந்தது. காலையில் ஒரு சவரன் தங்கம் ரூ.240 உயர்ந்த நிலையில் மாலையில் மேலும் ரூ.880 உயர்ந்தது. தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1120 உயர்ந்து ரூ.72,480க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.140 உயர்ந்து ரூ.9,060க்கு விற்பனை செய்யப்படுகிறது.



  • Jun 02, 2025 15:57 IST

    ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ வங்கி குறைக்குமா என எதிர்பார்ப்பு!!

    ரெப்போ ரேட் எனப்படும் குறுகிய கால கடன் வட்டி விகிதங்களை ரிசர்வ வங்கி குறைக்குமா என எதிர்பார்க்கப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக் குழு கூட்டம் வரும் 4ல் இருந்து 6 வரை நடைபெறவுள்ளது. பணவீக்கம் 4%-க்கும் கீழ் நீடிப்பால் வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி குறைக்க வாய்ப்பு என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். ஜூன் 6ல் மட்டுமின்றி ஆக., அக்டோபரிலும் தலா 0.25% வட்டி விகிதம் குறைக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறுகிய கால கடன் வட்டியை ஆர்பிஐ 0.25% குறைத்தால், 6%ஆக உள்ள வட்டி விகிதம் 5.75%ஆக குறையும்.



  • Jun 02, 2025 15:57 IST

    டெல்லி மதராசி கேம்ப் இடிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம்!!

    டெல்லி மதராசி கேம்ப் இடிப்புக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது; ஆயிரக்கணக்கான தமிழர்கள் குடியிருப்புகளை இழந்து, வீதிகளில் தங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 70 ஆண்டுக்கும் மேலாக வாழ்ந்த மக்கள், தங்களது உரிமை, இருப்பிடங்களை இழந்து வாழும் நிலை ஏற்பட்டுள்ளது. குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியாகிறது; பெண்கள் பாதுகாப்பின்றி நீர், மின்சாரம் இல்லாமல் அவதிப்படுவதாக அவர் தெரிவித்தார்.



  • Jun 02, 2025 15:44 IST

    ஆசிய தடகளம்-இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

    ஆசிய தடகளப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர்களால் நாடு பெருமை கொள்கிறது தென் கொரியாவில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவின் செயல்பாடு அபாரமானது விளையாட்டு வீரர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள் என்று தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி



  • Jun 02, 2025 15:24 IST

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகர் கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து..!!

    இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நடிகரும் ம.நீ.ம. தலைவருமான கமல்ஹாசன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். உன்னை விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணும் இல்ல என இளையராஜாவுக்கு கமல்ஹாசன் புகழாரம் சூட்டியுள்ளார்.



  • Jun 02, 2025 15:19 IST

    ‘தூய்மை மிஷன்’ல் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்! : முதல்வர் மு.க.ஸ்டாலின்

    தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “யாரோ சுத்தம் செய்கிறார்கள், யாரோ அள்ளுகிறார்கள், யாரோ தரம் பிரிக்கிறார்கள் என்று மானாவாரியாகக் குப்பையை, பிளாஸ்டிக்கை வீசினால், அது மீண்டும் நம்மையே ஏதோ ஒரு வழியில் வந்தடையும். விரைவில் தொடங்கப்படவுள்ள தூய்மை மிஷினில் அனைத்துத் துறைகளுடன் இணைந்து செயல்பட்டு சாதனை படைப்போம்!” இவ்வாறு தெரிவித்தார்.



  • Jun 02, 2025 15:18 IST

    தக் லைஃப் விவகாரம்- கர்நாடகா ஐகோர்ட்டில் கமல் தரப்பில் மனு

    தக் லைஃப் விவகாரம் தொடர்பாக கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில் ரிட் மனு தாக்கல்.  தக் லைஃப் படம் வெளியிட சில கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ரிட் மனு தாக்கல்



  • Jun 02, 2025 15:07 IST

    உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு – சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தல்

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் , அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்று மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால் துணை முதலமைச்சர் அவர்கள் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 02, 2025 15:06 IST

    2026ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை

    2026ல் வெற்றி பெற்று திமுக ஆட்சி தொடரும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார். திமுக பொதுக்குழு நேற்று நடந்து முடிந்த நிலையில் தொண்டர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதில், மொத்த வாக்காளர்களில் குறைந்தபட்சம் 30% பேர் திமுக உறுப்பினர்களாக இருக்க வேண்டும். மதுரையில் நடந்த திமுக பொதுக்குழு கூட்டம் தொண்டர்களின் குரலாக ஒலித்தது”இவ்வாறு தெரிவித்தார்.



  • Jun 02, 2025 14:37 IST

    இ.பி.எஸ் அரசியலை 5 மாதத்தில் முடித்துவிட்டனர் - ஆர்.எஸ்.பாரதி காட்டம்

    தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி: “அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வழக்கை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்துள்ளது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்ததை ஐந்து மாதத்தில் முடித்துவிட்டனர்; இனி அரசியல் செய்ய முடியாது” என்று கூறினார்.



  • Jun 02, 2025 14:34 IST

    கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறப்பு: மாணவிகளுடன் கலந்துரையாடினார் மு.க.ஸ்டாலின்!

    கோடை விடுமுறைக்குப்பின் இன்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். மாணவிகளுக்கு 2025-26ம் கல்வியாண்டுக்கான புதிய பாடநூல்கள், சீருடைகள், நோட்டு புத்தகங்களை வழங்கினார்.



  • Jun 02, 2025 14:21 IST

    இளவரசருக்காக மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் - எல். முருகன்  விமர்சனம்

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இளவரசர் என்று தெரிவிக்க மதுரையில் தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றதாக மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் கடந்த 50 ஆண்டுகளாக குடும்ப ஊழல் ஆட்சியில் மக்கள் சிக்கித் தவிப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த 4 ஆண்டுகளில் திமுக ஆட்சியின் கீழ் மக்கள் அனுபவித்த வன்கொடுமைகள் எண்ணற்றவை.
    மத்திய அரசு மீது எந்த குற்றச்சாட்டுகளும் இல்லை. வருமான வரி மற்றும் அமலாக்கத்துறை விசாரணைகளால் தி.மு.க-வின் கோட்டை ஆட்டம் கண்டுள்ளது. ஊழல் செய்த திமுகவினர் ஒவ்வொருவரும் கண்டிப்பாக சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். சாதிவாரி கணக்கெடுப்பு பற்றி பேச திமுகவுக்கு எந்த தகுதியும் இல்லை. கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து மாற்றியது யார்? தி.மு.க ஆட்சியை வீட்டுக்கு அனுப்பி தமிழ்நாட்டு மக்கள் தயாராகிவிட்டனர். அடுத்த ஆண்டு (2026) சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வரலாறு காணாத வெற்றியைப் பெறும். இந்தக் குற்றச்சாட்டுகள் திமுக மற்றும் அதன் தலைமையின் மீதான விமர்சனங்களை உள்ளடக்கியுள்ளன. மேலும், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கையையும் எல். முருகன் வெளிப்படுத்தியுள்ளார்.



  • Jun 02, 2025 14:17 IST

    ஞானசேகரனுக்கு தண்டனை குறையாத ஆயுள் தண்டனை என்பது ஆறுதல் அளிக்கிறது - தமிழிசை

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் தீர்ப்பு குறித்து பா.ஜ.க மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறுகையில், “தண்டனை குறையாத ஆயுள் தண்டனை என்பது ஆறுதல் அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

     



  • Jun 02, 2025 14:13 IST

    ‘எவ்வளவு வேண்டுமானாலும் வதந்தி பரப்புங்கள்’ - குபேரா இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷ் பேச்சு 

    நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் "குபேரா" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் தனுஷ் பேசுகையில், தன்னைப்பற்றி பரவி வரும் வதந்திகள் குறித்துப் பதிலளித்தார்.

    "நீங்கள் என்னைப்பற்றி எவ்வளவு வேண்டுமானாலும் வதந்திகளைப் பரப்புங்கள். என் நெகட்டிவிட்டியை வேண்டுமானாலும் பரப்புங்கள்," என்று தனுஷ் தெரிவித்தார். மேலும், "தம்பிகளா... கொஞ்சம் தள்ளிப் போய் விளையாடுங்கள் ராஜா. இந்த சர்க்கஸ் எல்லாம் இங்கே வேண்டாம். சும்மா நாணூறு வதந்தியை பரப்பி என்னை காலி செய்து விடலாம் என நினைத்தால், அதைவிட முட்டாள்தனம் எதுவும் கிடையாது; எண்ணம் போல் தான் வாழ்க்கை," என்று அவர் குறிப்பிட்டார்.



  • Jun 02, 2025 14:03 IST

    அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை - ஸ்டாலின் வரவேற்பு

    அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இந்தத் தீர்ப்பு நீதி நிலைநாட்டப்பட்டதற்கு ஒரு சான்றாக அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த வழக்கு விசாரணையின்போது, உயர்நீதிமன்றமே பாராட்டும் வகையில் நியாயமாகவும் விரைவாகவும் செயல்பட்டு குற்றவாளிக்கு கடும் தண்டனை பெற்றுத் தந்திருப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

    "நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு நன்றி கூறி வரவேற்கிறேன்" என்று அவர் தெரிவித்தார். இந்தத் தீர்ப்பு, பெண்களுக்கு எதிரான குற்றங்களை அரசு தீவிரமாக எடுத்துக்கொள்வதையும், குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.



  • Jun 02, 2025 13:55 IST

    நிதி நெருக்கடியில் சென்னை பல்கலை? மே மாத ஊதியம் வழங்கப்படாததால் ஊழியர்கள் போராட்டம்

    சென்னை பல்கலைக்கழகத்தில் மே மாதத்திற்கான ஊதியம் இன்னும் வழங்கப்படாததால், பல்கலைக்கழகப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். துணைவேந்தர் இல்லாததே இந்த நிதி நெருக்கடிக்குக் காரணம் என்று போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    பல்கலைக்கழக நிர்வாகத்தில் நிலவும் குழப்பமான சூழல் காரணமாகவே ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். தங்களின் கோரிக்கைகளை ஏற்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பேராசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



  • Jun 02, 2025 13:46 IST

    இதுபோன்ற தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது - திருமாவளவன்

    பாலியல் குற்றவாளி ஞானசேகரனுக்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்புக்கு விசிக தலைவர் திருமாவளவன் வரவேற்பு தெரிவித்துள்ளார். “இதுபோன்ற தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீதான நம்பகத் தன்மையை உறுதிப்படுத்துகிறது” என்று திருமாவளவன் கூறினார்.



  • Jun 02, 2025 13:44 IST

    Zepto நிறுவனத்தின் உரிமம் ரத்து

    மகாராஷ்டிராவில் உணவு பாதுகாப்புத் தர நிலைகளை பின்பற்றாததால் பிரபல ஆன்லைன் நிறுவனமான Zeptoவின் தாராவி கிடங்கின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலாவதியான உணவுப் பொருட்கள், சுகாதாரமின்மை, அழுக்கான தரைத்தளம் ஆகியவற்றைக் கண்டு
    உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். பாதுகாப்பான தரமான தயாரிப்புகளை வழங்க தங்கள் செயல்முறைகளை வலுப்படுத்துவதற்கு உறுதி பூண்டுள்ளதாக Zepto அறிவித்துள்ளது.



  • Jun 02, 2025 13:42 IST

    அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது - ஸ்டாலின் 

    தலமைச்சர் மு.க. ஸ்டாலின், “இளம்பெண் ஒருவருக்கு நிகழ்ந்த அநீதியில் கூட அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சின்ன புத்தி கொண்ட சிலரின் எண்ணம் இதனால் தவிடுபொடியாகியுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

    பெண்கள் பாதுகாப்பைப் பற்றி கேள்வி எழுப்புபவர்களுக்கு செயல் மூலம் பதிலளிப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றமே பாராட்டும் வகையில், சென்னை மாணவி வழக்கினை நியாயமாகவும் விரைவாகவும் ஐந்து மாதத்தில் நடத்தி முடித்திருப்பதாகவும், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனையை பெற்றுத் தந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

    மேலும், பெண்கள் நீதிமன்றமும் காவல்துறையின் சிறப்பான செயல்பாட்டை பாராட்டியுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். இத்தகைய சம்பவங்களால் அச்சம் கொண்ட சிலரின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.



  • Jun 02, 2025 13:39 IST

    இந்தியாவின் முதல் 33.33 மீ நீள U கிர்டரை 5-ம் வழிதடத்தில் வெற்றிகரமாக நிறுவியது - சென்னை மெட்ரோ நிர்வாகம்!

    இது மெட்ரோ கட்டுமானத்தில் வரலாற்று சிறப்புமிக்க சாதனை எனவும் இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வு எனவும் பெருமிதம். 225 மெட்ரோக் டன் உடையுடன் உருவாக்கப்பட்ட இந்த U கிர்டர், கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஓர் முக்கிய சான்று என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • Jun 02, 2025 13:33 IST

    உதயநிதி ஸ்டாலினுக்கு கடும் காய்ச்சல் பாதிப்பு; சில நாட்கள் ஓய்வில் இருக்க மருத்துவர் அறிவுறுத்தல்

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடும் காய்ச்சல் மற்றும் தொடர் இருமலால் அவதிப்படுவதால் அடுத்த சில நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார். அதனால், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொள்ள இருந்த அரசு நிகழ்ச்சிகள் அனைத்து ஒத்திவைக்கப்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jun 02, 2025 11:58 IST

    அன்பில் மகேஷ் பேட்டி

    “RTE: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறோம்

    - அன்பில் மகேஷ் பேட்டி



  • Jun 02, 2025 11:57 IST

    பிறந்தநாளில் இனிய செய்தி சொன்ன இசைஞானி!

    Credit: Sun News



  • Jun 02, 2025 11:20 IST

    பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை: அன்பில் மகேஷ்

    பள்ளிகளில் மாஸ்க் கட்டாயம் இல்லை. தற்போது பரவும் கொரோனா வீரியம் இல்லாதவை, பள்ளிகளில் மாணவர்களுக்கு மாஸ்க் தேவை இல்லை.

    - அமைச்சர் அன்பில் மகேஷ்



  • Jun 02, 2025 11:19 IST

    ஞானசேகரன் மீதான 11 குற்றங்களிலும் அளிக்கப்பட்டுள்ள தண்டனை விபரங்கள்

    Credit: Sun News 



  • Jun 02, 2025 10:59 IST

    11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை

    சிறையில் ஞானசேகரனுக்கு எந்த சலுகைகளும் வழங்கக் கூடாது. 30 ஆண்டுகள் சிறை தண்டனையை குற்றவாளி ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும்

    குற்றவாளி ஞானசேகரன் மீதான 11 குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டுள்ளதால், 11 குற்றங்களுக்கும் தனித்தனியாக தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்து வருகிறார்



  • Jun 02, 2025 10:45 IST

    ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை

    அண்ணா பல்கலை. மாணவி பாலியல் தாக்குதல் வழக்கில் குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகளுக்கும் குறையாத ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு



  • Jun 02, 2025 10:35 IST

    ஞானசேகரனுக்கு சற்றுநேரத்தில் தண்டனை அறிவிப்பு

    அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஞானசேகரன் புழல் மத்திய சிறையில் இருந்து மகளிர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    சென்னை மகளிர் நீதிமன்ற நீதிபதி ராஜலட்சுமி நீதிமன்றத்திற்கு வருகை



  • Jun 02, 2025 10:25 IST

    இசைஞானி இளையராஜாவுக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து



  • Jun 02, 2025 10:24 IST

    இசைஞானி இளையராஜாவுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து



  • Jun 02, 2025 09:56 IST

    அண்ணா பல்கலை. பாலியல் வழக்கில் சற்று நேரத்தில் தீர்ப்பு

    அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசேகரன் சென்னை மகளிர் நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டார். தண்டனை விபரங்களை இன்னும் சில நேரத்தில் நீதிபதி ராஜலட்சுமி வெளியிட உள்ளார். காலை 10.30 மணிக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.



  • Jun 02, 2025 09:39 IST

    10 ஆண்டுகளில் 18,000 கடைகளுக்கு சீல்வைப்பு

    தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் புகையிலை பொருட்களை விற்பனை செய்த 18,409 கடைகளுக்கு சீல் வைத்து பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். சிறுவர்களுக்கு குட்கா விற்றது, பொது இடங்களில் புகைப்பிடித்ததாக ரூ.4.6 லட்சம் பேருக்கு ரூ.7.97 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.



  • Jun 02, 2025 09:37 IST

    நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் தொடக்கம் 

    கோடை விடுமுறை முடிந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்கமான பணிகள் இன்று முதல் தொடங்குகிறது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு மே 1ம் தேதி முதல் ஜூன் 1-ஆம் தேதிவரை கோடை விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், அவசர வழக்குகளை விசாரிக்க சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டிருந்தன.



  • Jun 02, 2025 09:03 IST

    கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன

    கோடை விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சில தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளி வந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.



  • Jun 02, 2025 09:00 IST

    ”தமிழ்நாட்டில் 2 ஆண்டுகளாக காவல் மரணங்கள் இல்லை”

    தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக (2022 ஆகஸ்ட் மாதம் முதல் இன்று வரை) 22 மாதங்களுக்கும் மேலாக எந்த காவல் மரணங்களும் பதிவாகவில்லை என்று டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது ஒரு தேசிய சாதனையாகும். போதைப் பொருள் விநியோகத்தை கட்டுப்படுத்தும் பணிகளில் காவல்துறையும், அரசும் மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சிறப்பாக உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.



  • Jun 02, 2025 08:59 IST

    மாநகராட்சி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு

    சென்னை மாநகராட்சி பள்ளிகள் மாணவர்கள் சேர்க்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு 6,000 மாணவர்கள் புதிதாக சேர்ந்த நிலையில், தற்போது 16,490 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலை பள்ளிகள், 35 மேல்நிலை பள்ளிகள் உள்ளன.



  • Jun 02, 2025 08:57 IST

    தமிழகத்தில் நேற்று 11 இடங்களில் சதம் அடித்த வெயில்

    தமிழகத்தில் 11 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 105.26 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், சென்னை நுங்கம்பாக்கத்தில் 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், மீனம்பாக்கத்தில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், கடலூரில் 101.12 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும், ஈரோட்டில் 101.48 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பமும் பதிவாகி உள்ளது.



  • Jun 02, 2025 08:56 IST

    ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் சீசன் 5 ரிலீஸ் தேதிகள் அறிவிப்பு

    ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் வெப் சீரிஸின் 5வது சீசன் ரிலீஸ் தேதிகளை நெட்பிளிக்ஸ் அறிவித்தது. மொத்தம் 8 எபிசோட்கள் உள்ள நிலையில், முதல் 4 எபிசோட்கள் நவ.26 ஆம் தேதியும், அடுத்த 3 எபிசோட்கள் கிறிஸ்மஸ் முன்னிட்டு டிச.25 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 8வது மற்றும் இறுதி எபிசோட் 2026 வருட பிறப்பை முன்னிட்டு டிச.31 மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Tamilnadu News Update Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: