/indian-express-tamil/media/media_files/2025/01/11/OIpPOBEkBTZWv5fTl5Io.jpg)
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
Jun 08, 2025 22:25 IST
அன்புமணி உடனான பிரச்சனை சரி செய்யப்படும் - ராமதாஸ் தகவல்
அன்புமணி உடனான பிரச்சனை சரி செய்யப்படும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், "சென்னைக்கு வந்த 2 நாள் பயணம் வெற்றிகரமாக முடிந்தது. அன்புமணி உடனான பிரச்சினை சரி செய்யப்படும். சரி செய்தால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி பெறும் என அமித்ஷா சரியாகத் தான் சொல்லி இருக்கிறார். எந்தக் கட்சி குறித்தும் குறை சொல்ல வேண்டிய நேரம் இது கிடையாது, கூட்டணி குறித்து நேரம் வரும் போது சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 08, 2025 21:35 IST
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை, மணிப்பூராக மாற்றி விடுவார்கள் - ஆர்.எஸ். பாரதி
பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தை, மணிப்பூராக மாற்றி விடுவார்கள் என ஆர்.எஸ். பாரதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், "தி.மு.க கூட்டணி 2026 தேர்தலில் மட்டுமல்ல, அதன் பிறகு வரும் தேர்தல்களிலும் தொடர் வெற்றியை பெறும். அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் ’ஒரே ஆள் ஒரே பேச்சு’ என்ற ரீதியில் பேசி வருகிறார். கடந்த ஆண்டு நடந்த ஒடிசா சட்டமன்றத் தேர்தலை தமிழர்கள் எப்படி மறப்பார்கள்?" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
Jun 08, 2025 20:52 IST
போலி பத்திரப் பதிவு - 9 பேர் மீது வழக்குப் பதிவு
சென்னை, முகப்பேர் பகுதியில் ராமநாதன் என்பவர் குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு சொந்தமான 125 சென்ட் நிலத்தை அபகரிக்க முயற்சி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் துணை வட்டாட்சியர், சார்பதிவாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
-
Jun 08, 2025 20:14 IST
சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்து விபத்து
பூந்தமல்லியில் இருக்கும் பூங்காவின் மின்கம்பத்தில் ஏற்பட்ட மின் கசிவால், அங்கு விளையாடிக் கொண்டிருந்த 2 சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து, அங்கிருந்த பொதுமக்கள் உடனடியாக மின்சாரத்தை நிறுத்தி, சிறுவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
Jun 08, 2025 20:09 IST
மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறதா? - அன்புமணி கேள்வி
மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறதா? என்று அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், "நாமக்கல் தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். மக்கள் வாழ தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறுகிறதா? சில வாரங்களுக்கு முன்னர் கைதானோர் உண்மை குற்றவாளிகள் எனில், இந்தக் கொலையை செய்தது யார்? குற்றவாளிகளை பிடித்து விட்டதாக நாடகமாடிய தி.மு.க அரசின் முகமூடி கிழிந்து விட்டது" என்று அவர் தெரிவித்துள்ளார்.
-
Jun 08, 2025 19:27 IST
ராட்சத துளையில் சிக்கிய லாரி
தூத்துக்குடி, தருவைகுளம் மீன்பிடி துறைமுகத்தில் படகுகளுக்கு ஐஸ் கட்டிகள் ஏற்றி வந்த லாரி, சிமெண்ட் தளத்தின் மைப்பகுதியில் இருந்த ராட்சத துளையில் சிக்கி நின்றது. இதனால், படகுகளில் ஐஸ் கட்டிகள் நிரப்ப முடியாமல் மீனவர்கள் தவித்தனர்.
-
Jun 08, 2025 18:22 IST
”தமிழ்நாடு முதல்வரை பார்த்துதான் மத்திய அரசுக்கு பதற்றம்”
தமிழ்நாடு முதலமைச்சரை பார்த்துதான் ஒன்றியமே இன்று பதற்றத்தில் உள்ளது என்பதற்கு அமித்ஷாவின் வருகையே ஒரு எடுத்துக்காட்டு என புளியந்தோப்பில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு கூறியுள்ளார். சென்னை சூளையில் உள்ள அகண்ட தண்டு மாரியம்மன் கோயில் மற்றும் பட்டாளத்தில் உள்ள 40 ஆண்டு பழமையான சிவசுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழா இன்று நடைபெற்றது.
-
Jun 08, 2025 18:09 IST
பெங்களூரு 11 பேர் பலி - சித்தராமையா பதவி விலக கோரி போராட்டம்
கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்த விவகாரத்தில் காங்கிரஸ் அரசை கண்டித்து, இன்று கர்நாடக பா.ஜனதா தலைவர்கள் பெங்களூருவில் உள்ள சட்டசபை முன்பு முன்பு போராட்டம் நடத்தினர். அங்குள்ள மகாத்மா காந்தி சிலையின் படிகளில் அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது காங்கிரஸ் அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
-
Jun 08, 2025 17:50 IST
நாட்டில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 போ் பலி
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடா்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
-
Jun 08, 2025 17:46 IST
ஓசூர் அருகே 3 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்
ஓசூர் அருகே வீட்டின் முன் விளையாடி கொண்டிருந்த சிறுவனை தெருநாய் கடித்து குதறியது. இதில் பலத்த காயம் அடைந்த சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
-
Jun 08, 2025 16:59 IST
சென்னையில் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னையில் அசோக் நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Jun 08, 2025 16:36 IST
அரசியலில் விஜய் வெற்றி பெற முடியாது: துரை வைகோ
2026 தேர்தல் கூட்டணியில் எந்த மாற்றமும் வராது என்பதே ம.தி.மு.க-வின் நிலைப்பாடு. ஜூன் 22இல் மதிமுக பொதுக்குழு கூடுகிறது. தேர்தல் வியூகம் பற்றி முடிவு எடுக்கப்படும். சினிமா கவர்ச்சியை மட்டும் வைத்து அரசியலில் விஜய் வெற்றி பெற முடியாது என்று துரை வைகோ கூறி உள்ளார்.
-
Jun 08, 2025 16:36 IST
தஞ்சை: மின் கம்பம் விழுந்து முதியவர் உயிரிழப்பு
தஞ்சை பெரிய கோயில் அருகே பயன்பாட்டில் இல்லாத பழைய மின் கம்பம் விழுந்து, இளநீர் குடிக்க வந்த சுப்ரமணியன் (56) என்பவர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது
-
Jun 08, 2025 16:01 IST
ஸ்டாலின் தலைமையில் பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு பல்வேறு துறைகள் சார்பாக ஆய்வுக்கூட்டம் நடைபெறவுள்ளது. நெடுஞ்சாலை, பதிவுத்துறை, கூட்டுறவு ஆகிய துறைகளின் சார்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சர்கள் எ.வ.வேலு, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன், துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. முக்கிய திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து செயல்படுத்துவது பற்றி முதல்வர் அறிவுறுத்தல்களை வழங்க உள்ளார்.
-
Jun 08, 2025 15:33 IST
சென்னையில் சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை
சென்னையில் அசோக் நகர், மேற்கு மாம்பலம், வடபழனி, கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இன்று(ஜூன்.8) சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Jun 08, 2025 14:43 IST
கூட்டணி குறித்து 3 மாதங்களில் முடிவு -ராமதாஸ்
விரைவில் நல்ல செய்தி வரும்; நல்ல செய்திக்காக காத்திருப்போம் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு வயது கிடையாது. எல்லா தலைவர்களையும் நான் நேசிப்பவன். பிரதமர் மோடி எனக்கு நெருங்கிய நண்பர்; தமிழ்நாடு வந்துள்ள ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவுக்கு வாழ்த்துக்கள். பா.ம.க. கூட்டணி குறித்து இரண்டு, மூன்று மாதங்களில் முடிவு தெரிவிக்கப்படும். தேசிய கட்சியோடு இருக்கலாம் அல்லது மாநில கட்சியோடு பாமக கூட்டணி இருக்கலாம் என்று கூறினார்.
-
Jun 08, 2025 14:39 IST
நல்ல செய்திகள் விரைவில் வரும்: ராமதாஸ்
நல்ல செய்திகள் விரைவில் வரும்; அதுவரை நாம் காத்திருக்கலாம்; எங்கிருந்து வரும் எனத் தெரியாது அரசியலுக்கு வயது வரம்பு கிடையாது; இதற்கு கலைஞர் ஒரு உதாரணம்; சக்கர நாற்காலியிலேயே இருந்து முதலமைச்சர் ஆனவர் கலைஞர் கருணாநிதி என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-
Jun 08, 2025 13:54 IST
முருகனை வைத்து பா.ஜ.க அரசியல் செய்ய முடியாது - சீமான்
முருகனை வைத்து அரசியல் செய்ய பா.ஜ.க நினைக்கிறது; அதற்கெல்லாம் வாய்ப்பில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க-வினர் முருகனை ஒப்புக்குத் துதிக்கிறார்கள் என்றும், ஆனால் தான் உள்மனதார துதிப்பதாகவும் சீமான் கூறியுள்ளார்.
மேலும், உத்தரப் பிரதேசம், கேரளாவில் ஜயப்பனைத் தொட்டவர்கள் தமிழகத்தில் முருகனைத் தொட்டுள்ளனர் என்றும், இதற்கெல்லாம் ஏமாறும் கூட்டம் நாங்கள் இல்லை என்றும் சீமான் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
-
Jun 08, 2025 13:49 IST
எடப்பாடி பழனிச்சாமி பொய் கனவு காண்கிறார் - எ.வ.வேலு காட்டம்
தமிழகத்தில் திமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறும் என்ற முதலமைச்சரின் கனவு, நிச்சயிக்கப்பட்ட கனவு என்றும், அது வெற்றிபெறப் போகும் கனவு என்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, '200க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்' எனப் பொய்க் கனவு கண்டு வருவதாக அமைச்சர் எ.வ. வேலு விமர்சித்துள்ளார்.
-
Jun 08, 2025 13:46 IST
சென்னையில் இருந்து புறப்பட்ட விமானத்தில் இயந்திரக்கோளாறு
சென்னையில் இருந்து துபாய்க்கு 326 பேருடன் புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் திடீர் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. விமானத்தின் இயந்திரக்கோளாறு ஓடுபாதைக்கு செல்லும் முன்பாகவே கண்டுபிடிக்கப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்தில் இருந்த பயணிகள் செல்ல மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்படும் என அதிகாரிகள் தகவல்
-
Jun 08, 2025 12:42 IST
டாக்டர் ராமாதாஸ் உடன் பேரன் முகுந்தன் சந்திப்பு
சென்னை அபிராமபுரம் இல்லத்தில் பா.ம.க நிறுவனர் ராமதாஸ் உடன் முகுந்தன் சந்தித்தார். பா.ம.க-வின் இளைஞரணி தலைவராக ராமதாஸால் நியமிக்கப்பட்டு பின் அந்தப்பொறுப்பை ராஜினாமா செய்தவர் முகுந்தன். முகுந்தனுக்கு கொடுக்க கட்சியில் நிறைய பெரிய பதவிகள் இருந்தும் அவர் தொழில் செய்யவே விரும்புகிறார் என ராமதாஸ் பேசியிருந்தார்.
-
Jun 08, 2025 12:39 IST
மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறித்து உத்தரவாதம் தர அமித்ஷா தயாரா? - தயாநிதி மாறன்
தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்: “ஒன்றிய அரசின் சதியை முதல்வர் ஸ்டாலின் ஆரம்பம் முதலே எதிர்த்து வருகிறார். தமிழ்நாட்டின் எம்.பி தொகுதிகளின் எண்ணிக்கை குறையாது என்ற ஏமாற்று வார்த்தைகள் எங்களுக்கு வேண்டாம். மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை சட்டப்படி அளிக்க உள்துறை அமைச்சர் அமித்ஷா தயாரா?” என்று கேள்வி எழுப்பினார்.
-
Jun 08, 2025 12:15 IST
அருவியில் சிக்கிய இளைஞரை பாதுகாப்பாக மீட்ட மக்கள்
மதுரையை சேர்ந்த இளைஞர்கள் இடுக்கி அருகே அருவியில் குளிக்கச் சென்றனர். அருவியில் செல்பி எடுக்க முயன்றபோது இளைஞர் ஒருவர் பாறை இடுக்குகளில் சிக்கினார். அருகிலிருந்த பொதுமக்கள் பாறையில் சிக்கிய இளைஞரை கயிறுகட்டி பாதுகாப்பாக மீட்டனர்
-
Jun 08, 2025 11:44 IST
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு 1,66,540 பேர் பயணித்துள்ளனர் – போக்குவரத்துத் துறை
சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கு இன்று (ஜூன் 08) அதிகாலை 2 மணி வரை 936 சிறப்பு பேருந்துகள் உட்பட மொத்தம் 3028 அரசுப்பேருந்துகள் இயக்கம்; அதில் 1,66,540 பேர் பயணித்துள்ளனர் என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது
-
Jun 08, 2025 11:03 IST
ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார்; அ.தி.மு.க கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இடம்பெறும் – இ.பி.எஸ்
அ.தி.மு.க தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு விட்டது. இன்னும் பல கட்சிகள் இடம்பெறும். 200 தொகுதிகளில் வெல்வோம் என ஸ்டாலின் பகல் கனவு காண்கிறார் என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்
-
Jun 08, 2025 10:38 IST
தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மறுசீரமைப்பு
தமிழ்நாடு மாநில நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலை மறுசீரமைப்பு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. உணவுத்துறை அமைச்சர் தலைமையில் 23 பேர் கொண்ட கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த், தஞ்சை எம்.பி.முரசொலி உள்ளிட்டோர் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர். நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள கவுன்சில் நுகர்வோர் நலன் சார்ந்த பணிகளை மேற்கொள்ளும்.
-
Jun 08, 2025 10:31 IST
விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் உயிரிழப்பு
கழிவு நீர் உறிஞ்சும் வாகனம் மூலம் பாதாள சாக்கடை கழிவுநீரை அகற்றும் போது தவறி விழுந்து விஷவாயு தாக்கி தூய்மை பணியாளர் மணி என்பவர் உயிரிழந்தார்.
-
Jun 08, 2025 10:00 IST
அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு
இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆயிரத்தை நெருங்கியது. நேற்று ஒரே நாளில் மட்டும் 391 பேருக்கு தொற்று உறுதியானதாக மத்திய சுகாதாரத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுவரை கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 5788 ஆக உயர்ந்த நிலையில் நேற்று மட்டும் 4 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
-
Jun 08, 2025 09:04 IST
எலான் மஸ்க்கிற்கு மனம் பிறழ்ந்துவிட்டது - ட்ரம்ப்
டெஸ்லா தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கிடம் பேச நான் தயாராக இல்லை. அவருக்கு மனம் பிறழ்ந்துவிட்டது. என்னிடம் பேச அவர்தான் விரும்புகிறார். அந்த உரையாடலுக்கு நான் தயாராக இல்லை. அவருடனான என் உறவு முடிந்துவிட்டது என ட்ரம்ப் கூறியுள்ளார்.
-
Jun 08, 2025 08:33 IST
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4753 கன அடியில் இருந்து 6119 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 113.89 அடியாக உயர்ந்துள்ளது. குடிநீர்த் தேவைக்காக வினாடிக்கு 1000 கன அடி வெளியேற்றம்.
-
Jun 08, 2025 08:13 IST
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்...
கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி, நெல்லை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் காலை 10 மணி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
-
Jun 08, 2025 08:10 IST
ராகுல் குற்றச்சாட்டுக்கு தேர்தல் ஆணையம் மறுப்பு
2024 மகாராஷ்டிரா பேரவைத் தேர்தலில் பாஜக முறைகேடு செய்தே வென்றது. இதே உத்தியை பீகார் தேர்தலிலும் பின்பற்ற பாஜக திட்டமிட்டுள்ளது. இம்முறையும் மேட்ச் ஃபிக்ஸிங் நடக்கும் என ராகுல்காந்தி கூறியுள்ளார். இது அபத்தமானது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டு மேலும் சட்டத்தின் ஆட்சிக்கு இது அவமானம் என தேர்தல் ஆணையம் சாடியுள்ளது.
-
Jun 08, 2025 07:50 IST
மணிப்பூரில் மீண்டும் பதற்றம்-இணைய சேவை துண்டிப்பு
மணிப்பூரில் மெய்தி சமூகத்தை சேர்ந்த ஆரம்பை டெங்கோல் அமைப்பின் உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து இம்பாலில் ஆங்காங்கே போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு சம்பவங்கள், போராட்டங்கள் தலைதூக்கியதால் பதற்றம் அதிகரித்துள்ளது. அடுத்தடுத்த கிளர்ச்சிகளால் மீண்டும் அமைதியின்மை. குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் உள்ள மணிப்பூரில் வன்முறை காரணமாக ஜூன் 7 நள்ளிரவில் இருந்து இம்பால் மேற்கு, தவுபால், காக்சிங், விஷ்னுபூரில் 5 நாட்களுக்கு இணையச்சேவை தடை செய்யப்பட்டுள்ளது.
-
Jun 08, 2025 07:37 IST
இன்று தமிழக பாஜக நிர்வாகிகள் கூட்டம்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மதுரை வேலம்மால் திடலில் இன்று மாலை 3 மணியளவில் நடைபெறுகிறது. பாஜக மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், கோட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தோழமைக் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது.
-
Jun 08, 2025 07:32 IST
பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.