Chennai News Highlights: ஆணவக் கொலைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் பட்டியலின துறை மாநில தலைவர் அறிவிப்பு

Tamil Nadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Live Updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Honour killing protest

Today Latest Live News Update in Tamil 29 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் 

    • Jul 29, 2025 23:08 IST

      தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்

      இலங்கை கடற்படை கைது செய்த 14 தமிழக மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். மேலும், இலங்கை வசம் இருக்கும் அனைத்து தமிழக மீனவர்களின் படகுகளையும் மீட்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.



    • Jul 29, 2025 21:40 IST

      ஆணவக் கொலைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் பட்டியலின துறை மாநில தலைவர் அறிவிப்பு

      அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளை கண்டித்து விரைவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியலின துறை மாநில தலைவர் ரஞ்சன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, நெல்லையில் நடந்த இந்த படுகொலை வழக்கை, முதலமைச்சரின் நேரடி பார்வையின் கீழ் நடத்தினால் மட்டுமே நீதி கிடைக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 



    • Advertisment
      Advertisements
    • Jul 29, 2025 20:27 IST

      ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரி உலக தலைவர்கள் யாரும் இந்தியாவிடம் கூறவில்லை - மோடி 

      ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான பல்வேறு தகவல்களை, பிரதமர் மோடி இன்று (ஜூலை 29) மக்களவையில் தெரிவித்தார். அப்போது, ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரி உலக தலைவர்கள் யாரும் இந்தியாவிடம் கூறவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.



    • Jul 29, 2025 19:58 IST

      முந்தைய காங்கிரஸ் அரசுகளின் தவறுகளால் இந்தியா இன்னும் பாதிக்கப்பட்டுள்ளது - மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, “பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஏன் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்று கேட்பதற்கு முன், அதை யார் விட்டுவிட்டார்கள் என்று காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும். நேரு தொடங்கி முந்தைய காங்கிரஸ் அரசாங்கங்கள் செய்த தவறுகளின் வலியை இந்தியா இன்னும் அனுபவித்து வருகிறது,” என்று கூறினார். 

      “பாகிஸ்தானின் நிலத்தை இந்தியா வைத்திருந்தபோதும், அதன் வீரர்களை காவலில் வைத்திருந்தபோதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகளை அப்போதைய காங்கிரஸ் அரசாங்கங்கள் இழந்தன,” என்று மோடி 1971 இல் வங்கதேசத்தில் பாகிஸ்தான் படைகளின் காவலைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார். 



    • Jul 29, 2025 19:55 IST

      விரக்தியின் காரணமாக, காங்கிரஸ் ஆபரேஷன் மகாதேவ் நேரத்தைக் கூட கேள்வி எழுப்பியது - மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, "விரக்தியின் காரணமாக, நேற்று திங்கள்கிழமை பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்டவர்களைக் கொன்ற ஆபரேஷன் மகாதேவின் நேரத்தைக் கூட காங்கிரஸ் கேள்வி எழுப்பியது," என்று  கூறினார்.



    • Jul 29, 2025 19:52 IST

      'பாகிஸ்தான் ரிமோட் கண்ட்ரோல் மூலம் காங்கிரஸ் செயல்படுகிறது' - மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, "காங்கிரஸ் இப்போது பாகிஸ்தானின் ரிமோட் கண்ட்ரோல் மூலம் செயல்படுகிறது. இளம் தலைவர்களை 'ஆபரேஷன் சிந்தூரை' 'தமாஷா' என்று அழைக்க வைக்கிறது," என்று மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. பிரணிதி ஷிண்டேவின் சர்ச்சைக்குரிய கருத்துக்களைக் குறிப்பிட்டு கூறினார்.



    • Jul 29, 2025 19:50 IST

      'பாகிஸ்தான் ஏவிய 1,000 ஏவுகணைகள், ட்ரோன்கள் நடு வானில் அழிக்கப்பட்டது' - மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் பாகிஸ்தான் தாக்குதல்களை முறியடித்த விதத்திற்காக இப்போது உலகம் முழுவதும் பேசப்படுகிறது. பாகிஸ்தான் இந்தியாவை நோக்கி 1,000 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவியது. ஆனால் அவை நமது ஆயுதப் படைகளால் நடு வானிலே அழிக்கப்பட்டன," என்று கூறினார்.



    • Jul 29, 2025 19:31 IST

      'பயங்கரவாதிகளும் அவர்களின் மாஸ்டர்களும் பாகிஸ்தானில் கண்ணீர் வடிக்கின்றனர்' - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, "பாகிஸ்தானில் பைலட் அபிநந்தன் பிடிபட்டபோது பலர் மகிழ்ச்சியடைந்தனர், இது மோடியை சிக்க வைக்கும் என்று நினைத்தனர்; ஆனால் அவர்களின் நம்பிக்கைகள் தகர்ந்து போயின." என்று கூறினார்.  

      அந்த நிகழ்வுக்கும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது ஒரு பி.எஸ்.எஃப் ஜவான் கடத்தப்பட்டதற்கும் மற்றும் திருப்பி அனுப்பட்டதற்கும் இடையே தொடர்புபடுத்தி, எதிர்க்கட்சிகளை வெளிப்படையாக கேலி செய்த மோடி, "பயங்கரவாதிகளும் அவர்களின் மாஸ்டர்களும் பாகிஸ்தானில் கண்ணீர் வடிக்கின்றனர்; அவர்கள் அப்படிச் செய்வதைப் பார்த்து, சிலர் இங்கேயும் அழுகிறார்கள்" என்று கூறினார்.



    • Jul 29, 2025 19:26 IST

      சி.ஆர்.பி.எஃப் காவலரின் மகளுக்கு பாலியல் தொல்லை 

      சென்னை அடுத்த ஆவடியில் சி.ஆர்.பி.எஃப் காவலரின் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், சக காவலரான சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சி.ஆர்.பி.எஃப் உயரதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றச்சாட்டியுள்ளனர். கராத்தே தெரிந்த அச்சிறுமி சுரேஷ் குமாரை தாக்கி விட்டு, தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். புகாரை அடுத்து சி.ஆர்.பி.எஃப் வளாகத்திற்குச் சென்ற ஆவடி போலீசார், நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.



    • Jul 29, 2025 19:20 IST

      அமெரிக்க துணை அதிபர் எச்சரித்தார் - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, “மே 9 இரவு, அமெரிக்க துணைத் அதிபர் என்னை 3-4 முறை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் நான் ஆயுதப்படைகளுடனான சந்திப்புகளில் மும்முரமாக இருந்தேன். நான் திரும்ப அழைத்தபோது, பாகிஸ்தானில் இருந்து ஒரு பெரிய தாக்குதல் நடத்தப்படும் என்று அவர் எனக்கு எச்சரித்தார். பாகிஸ்தான் இந்தியாவைத் தாக்கினால், எங்கள் தாக்குதல் மிகப் பெரியதாக இருக்கும். தோட்டாக்களுக்கு பீரங்கிகளால் பதிலடி கொடுப்போம் என்று நான் அவரிடம் சொன்னேன், ”என்று  கூறினார்.



    • Jul 29, 2025 19:18 IST

      பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர்களாக மாறிய காங்கிரஸ்  - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி குற்றச்சாட்டு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, “இந்தியா தன்னிறைவு பெற்று வருகிறது, ஆனால் காங்கிரஸ் இப்போது பிரச்சினைகளுக்கு பாகிஸ்தானையே சார்ந்துள்ளது, காங்கிரஸ் தங்கள் பிரச்சினைகளை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. காங்கிரசும் அதன் கூட்டணி கட்சிகளும் துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தானின் செய்தித் தொடர்பாளர்களாக மாறிவிட்டனர்,” என்று அவர் கூறினார்.



    • Jul 29, 2025 19:15 IST

      காங்கிரஸ் ஆயுதப்படைகளிடமிருந்து ஆதாரம் கேட்டது - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி குற்றச்சாட்டு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது பிரதமர் நரேந்திர மோடி, "இந்திய ஆயுதப்படைகள் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தினர், காங்கிரஸ் ஆயுதப்படைகளிடமிருந்து ஆதாரம் கேட்டது. ஆனால் அவர்கள் பொதுமக்களின் மனநிலையைப் படித்தபோது, அவர்கள் தங்கள் அரசாங்கங்களும் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் செய்ததாகக் கூற தங்கள் பேச்சை மாற்றிக்கொண்டனர்," என்று குற்றம் சாட்டியுள்ளார். 



    • Jul 29, 2025 19:13 IST

      3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக நின்றன - ஆபரேஷன் சிந்தூர் குறித்து மோடி பேச்சு

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.வில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக 3 நாடுகள் மட்டுமே பேசியதாக தெரிவித்தார்.

      பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலை இந்தியா கடுமையாக சாடியது. அணு ஆயுத மிரட்டலுக்கு நாங்கள் அடிபணிய மாட்டோம் என்பதை உலகிற்குக் காட்டியது என்று மோடி தெரிவித்தார். 



    • Jul 29, 2025 19:08 IST

      பெரும் இழப்பை சந்தித்த பாகிஸ்தான் கெஞ்சியது - மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, "பெரும் இழப்புகளைச் சந்தித்த பிறகு, பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் ஜெனரல் (டி.ஜி.எம்.ஓ) 'இனி எங்களைத் தாக்க வேண்டாம், நாங்கள் இதற்கு மேல் தாங்க முடியாது' என்று கெஞ்சினார். எந்த நாட்டின் தலைவரும் இந்தியாவை ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தச் சொல்லவில்லை" என்று அவர் கூறினார். 



    • Jul 29, 2025 19:01 IST

      'காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக என்னை குறிவைத்தனர்' - மோடி பேச்சு 

      மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடி, "இந்தியா முழு உலகத்தின் ஆதரவையும் பெற்றது, ஆனால் காங்கிரஸ் நமது வீரர்களின் வீரத்தை ஆதரிக்காதது துரதிர்ஷ்டவசமானது. 

      காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் ஆதாயங்களுக்காக என்னை குறிவைத்தனர், ஆனால் அவர்களின் அற்பமான அறிக்கைகள் நமது துணிச்சலான வீரர்களை ஊக்கப்படுத்தியது. எதிர்க்கட்சிகள் என் மீதான தாக்குதல்களால் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளில் இடம் பெறலாம். ஆனால் இதன் மூலம் நாட்டு மக்களின் இதயங்களில் இடத்தைப் பிடிக்க முடியாது," என்று கூறினார்.



    • Jul 29, 2025 18:50 IST

      பயங்கரவாத மூளையால் இப்போது தூங்க முடியாது: பிரதமர் மோடி

      பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை பாராட்டிய பிரதமர் மோடி, பயங்கரவாத மூளையால் இப்போது தூங்க முடியாது என்றும் குறிப்பிட்டார். இது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்களை விமர்சித்த மோடி, அவர்களால் ஊடகங்களில் தலைப்புச் செய்திகளை மட்டுமே வைக்க முடியும், ஆனால் மக்களின் இதயங்களை வெல்ல முடியாது என்று கூறியுள்ளார். 



    • Jul 29, 2025 18:14 IST

      தாக்குவது என்று முடிவு செய்துவிட்டால் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்: ராகுல்காந்தி

      தாக்குவது என்று முடிவு செய்துவிட்டால் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும். அவர்கள் கையை கட்டிவிட்டு போருக்கு அனுப்ப கூடாது. இந்திய படைகளின் நகர்வு தகவல்களை பாகிஸ்தானுக்கு சீனா கொடுத்துள்ளது, ஆனால் சீனா என்ற பெயரையே பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சொல்லவில்லை என்று மக்களவையில் ராகுல்காந்தி ஆவேசமான பேசியுள்ளார். 



    • Jul 29, 2025 18:11 IST

      பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு: பள்ளி கல்வித்துறை தகவல்

      2025-2026 கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு கால அட்டவணை அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 1 முதல் 12 ஆம் வகுப்புகளுக்கான காலாண்டு தேர்வு, செப்டம்பர் 18 முதல் 26 ஆம் தேதி வரை நடைபெறும். டிசம்பர் 15 முதல் 23 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு நடைபெறும் எனவும், செப்டம்பர் 27 முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு விடுமுறை டிசம்பர் 24 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை எனவும்  பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.



    • Jul 29, 2025 17:09 IST

      தமிழக மீனவர்களை விடுவிக்கக்கோரி முதல்வர் கடிதம்

       இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.



    • Jul 29, 2025 16:49 IST

      பாலியல் வன்கொடுமை நடந்துள்ள செய்தியால் அதிர்ச்சி - நயினார் நாகேந்திரன்

      கிருஷ்ணகிரி வேப்பனம்பள்ளியில் கடந்த 2 வாரத்தில் மட்டும் நான்கு பேருக்கு பாலியல் வன்கொடுமை நடந்துள்ள செய்தியால் அதிர்ச்சி அளிக்கிறது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். 



    • Jul 29, 2025 16:49 IST

      ராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

      சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் பிரதான ஏரிகளில் ஒன்றான கடலூர் வீராணம் ஏரிக்கு தொடர்ந்து கீழணை மூலம் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில் அதன் முழு கொள்ளளவான 47.5 அடியை எட்டி கடல் போல் காட்சியளிக்கிறது.



    • Jul 29, 2025 16:47 IST

      சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதானவருக்கு 4 நாட்கள் விசாரணைக்கு அனுமதி

      திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் பகுதியில் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான அசாமைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மாவை 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு திருவள்ளூர் நீதிமன்றம் அனுமதிஅளித்துள்ளது.



    • Jul 29, 2025 16:09 IST

      CRPF காவலரின் மகளுக்கு பாலியல் தொல்லை புகாரில் சக காவலர் கைது

      ஆவடியில் சிஆர்பிஎஃப் காவலரின் 13 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் சக காவலரான சுரேஷ் குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிஆர்பிஎஃப் உயரதிகாரிகளிடம் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை என குற்றம் சாட்டப்பட்டுள்ளார். கராத்தே தெரிந்த அச்சிறுமி சுரேஷ் குமாரை தாக்கிவிட்டு தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். புகாரை அடுத்து சிஆர்பிஎஃப் வளாகத்திற்குச் சென்ற ஆவடி போலீசார் நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 



    • Jul 29, 2025 16:06 IST

      அக்டோபரில் பொதுத்தேர்வு அட்டவணை: அன்பில் மகேஸ்

      2025 - 2026 கல்வியாண்டுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அக்டோபரில் வெளியீடு மாணவர்கள் மகிழ்ச்சியுடன் தன்னம்பிக்கையோடு தேர்வுக்கு தயாராகுங்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.



    • Jul 29, 2025 15:37 IST

      தமிழ்நாடு மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்

      தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை அடுத்தடுத்து சிறைபிடித்தது. இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 9 பேருக்கு ஆக.7 வரை நீதிமன்ற காவல் விடுக்கப்பட்டுள்ளது.



    • Jul 29, 2025 15:36 IST

      சொந்த வரி வருவாய் அதிகரிப்பு

      தமிழ்நாட்டின் சொந்த வரி வருவாய் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 14.5% வளர்ச்சி அடைந்துள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1) ரூ. 37,605.43 கோடியாக இருந்த சொந்த வரி வருவாய், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் ரூ.43,070,.45 கோடியாக உயர்ந்துள்ளது.



    • Jul 29, 2025 15:19 IST

      செந்தில் பாலாஜி வழக்கு - உச்சநீதிமன்றம் கேள்வி

      அமைச்சரைத் தவிர, இடைத்தரகர்கள் யார்? அமைச்சரின் பரிந்துரையின் பேரில் செயல்பட்டதாகக் கூறப்படும் அதிகாரிகள் யார்? வேலைக்கு எடுக்கும் தேர்வுக் குழு உறுப்பினர்கள் யார்? பணம் பெற்றுக்கொண்டு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நியமனம் வழங்கிய அதிகாரிகள் யார்? அரசு வேலை வாங்கித்தருவதாகக் கூறி, பணமோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளது. 



    • Jul 29, 2025 14:57 IST

      பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்: மக்களவையில் பிரியங்கா காந்தி சரமாரி கேள்வி

      பஹல்காம் தாக்குதலை தடுக்கத் தவறியது ஏன்; 2021க்கு பின் 25 தாக்குதல்கள் நடந்துள்ளன; அதற்கு யார் பொறுப்பு ஏற்கிறது. காஷ்மீரில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் தீவிரவாத அமைப்புகள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள். பஹல்காமில் நடந்த தாக்குதல் உளவுத்துறையின் தோல்வியை காட்டுகிறது. டி.ஆர்.எஃப். தீவிரவாத அமைப்பை கண்காணிப்பதில் ஒன்றிய அரசு தோல்வி அடைந்துவிட்டது



    • Jul 29, 2025 14:56 IST

      காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் இருக்கிறது - அமித்ஷா

      “காங்கிரஸின் தவறால்தான் பாகிஸ்தான் இருக்கிறது. பிரிவினையை அவர்கள் ஏற்றிருக்கவில்லை என்றால், இன்றைக்கு பாகிஸ்தானே இருந்திருக்காது” என்று மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளார். 



    • Jul 29, 2025 14:54 IST

      ஆக.1 முதல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவிப்பு

      ஆக.1 முதல் கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் செய்யப்போவதாக கேஸ் சிலிண்டர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் செந்தில்செல்வன் அறிவித்துள்ளார்.



    • Jul 29, 2025 14:25 IST

      'விஸ்வகுரு என்ன கற்றுக் கொண்டார்?' - பிரதமரை குறிப்பிட்டு கனிமொழி கேள்வி

      பயங்கரவாத தாக்குதலை நீங்கள் தடுத்திருக்க வேண்டாமா?; புல்வாமா தாக்குதல் நடந்தது; ஒவ்வொரு தாக்குதலின்போதும் மீண்டும் நடக்காது என்கிறீர்கள்?; முந்தைய தாக்குதலில் இருந்து நீங்கள் பாடம் கற்றுக் கொண்டிருக்க வேண்டாமா? - ‘விஸ்வகுரு என்ன கற்றுக் கொண்டார்?' என பிரதமரை குறிப்பிட்டு திமுக எம்.பி. கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். 



    • Jul 29, 2025 14:03 IST

      அம்பத்தூர் டோல்கேட் அருகே டிப்பர் லாரி திடீரென தீப்பிடித்து எரிந்தது

      சென்னை மதுரவாயலில் இருந்து புழல் நோக்கி சென்ற டிப்பர் லாரி அம்பத்தூர் டோல்கேட் அருகே சென்ற பொது திடீரென தீப்பிடித்தது. அம்பத்தூர் தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்ததில் டிப்பர் லாரி முழுமையாக எரிந்து சேதமானது. தீ விபத்தால் அம்பத்தூர் டோல்கேட் அருகே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



    • Jul 29, 2025 13:26 IST

      தமிழ்நாட்டில் பஞ்சாயத்துகளுக்கு நிதி குறைப்பு ஏன் - மக்களவையில் கனிமொழி கேள்வி

      தமிழ்நாட்டிற்கு பஞ்சாயத்துகளுக்கு ஒதுக்கப்படும் நிதி அளவு குறைந்து வருவதற்கு காரணம் என்ன என்று தி.மு.க நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கேள்வி எழுப்பினார். தமிழ்நாட்டில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன, மாநில நிதி ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. அப்படியிருந்தும் ஏன் இன்னும் நிதி ஒதுக்கப்படவில்லை? என்றும் 2017-18 ஆண்டுகளில் ரூ.731 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், அதற்கு அடுத்த ஆண்டு ரூ.800 கோடி குறைக்கப்பட்டு, இந்த ஆண்டு மேலும் ரூ.400 கோடி குறைக்கப்பட்டது ஏன்? என்றும் கனிமொழி கேள்வி எழுப்பினார்.

      இதற்கு பதில் அளித்த மத்திய நிதித்துறை இணை அமைச்சர் லால் சிங் பசித்,  “பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெறாததால், தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்கப்படவில்லை. மத்திய அரசுக்கு பல்வேறு நிதி நெருக்கடிகள் உள்ளன. ஜிஎஸ்டி மாதத் தொகுப்பிற்கு சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டிருந்தால் அனைத்து சரிபார்த்தல்களுக்குப் பிறகு நிதி விடுவிப்பு தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூறினார். 



    • Jul 29, 2025 13:14 IST

      'நேரு அசாமுக்கு விடைகொடுத்தார்' - அமித்ஷா

      மக்களவையில் பேசிய அமித்ஷா,  “1962 சீனாவுடனான போரின் போது, அப்போதைய பிரதமர் நேரு ஆகாஷ்வாணியில் ஆற்றிய உரையில் அசாமுக்கு விடைபெற்றார்" என்று கூறினார். மேலும், "1948-ம் ஆண்டில், இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் காஷ்மீரை திரும்பப் பெறுவதில் தீர்க்கமான நிலையில் இருந்தன, ஆனால் அப்போதைய பிரதமர் நேரு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார்" என்று கூறினார்.



    • Jul 29, 2025 13:12 IST

      'காங்கிரஸ் பாகிஸ்தானுக்கு 'குற்றமற்றவர்கள்' என சான்றளிக்கிறது - அமித்ஷா 

      மக்களவையில் பேசிய அமித்ஷா,  “1948-ம் ஆண்டு, இந்திய ஆயுதப்படைகள் பாகிஸ்தான் காஷ்மீரை திரும்பப் பெறுவதில் தீர்க்கமான நிலையில் இருந்தன, ஆனால் அப்போதைய பிரதமர் நேரு ஒருதலைப்பட்ச போர் நிறுத்தத்தை அறிவித்தார்" என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் பி. சிதம்பரம் பாகிஸ்தானுக்கு 'க்ளீன் சிட்' (குற்றமற்றவர்கள் என சான்று) கொடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.



    • Jul 29, 2025 13:10 IST

      'ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை' - மக்களவையில் அமித்ஷா பேச்சு

      லோக்சபாவில் அமித்ஷா கூறுகையில், "ஏப்ரல் 30-ம் தேதி, சி.சி.எஸ் கூட்டம் நடைபெற்றது, அதில் பாதுகாப்புப் படையினருக்கு முழுமையான செயல்பாட்டு சுதந்திரம் வழங்கப்பட்டது. மே 7-ம் தேதி அதிகாலை 1:04 மணி முதல் அதிகாலை 1:24 மணி வரை ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டது. இந்த நடவடிக்கையில், பாகிஸ்தானில் 9 பயங்கரவாத தளங்கள் அழிக்கப்பட்டன. இந்தத் தாக்குதலில் பாகிஸ்தான் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை” என்று கூறினார்.



    • Jul 29, 2025 13:07 IST

      ‘பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும்?’ ப.சிதம்பரம் மீது அமித்ஷா தாக்கு

      அமித்ஷா, “நேற்று அவர்கள் (காங்கிரஸ்) பயங்கரவாதிகள் எங்கிருந்து வந்தார்கள், அதற்கு யார் பொறுப்பு என்று எங்களிடம் கேட்டார்கள். நிச்சயமாக, நாங்கள் ஆட்சியில் இருப்பதால் அது எங்கள் பொறுப்பு. நேற்று, முன்னாள் உள்துறை அமைச்சர் சிதம்பரம் அவர்கள் கேள்வி எழுப்பினார் - பயங்கரவாதிகள் பாகிஸ்தானிலிருந்து வந்தார்கள் என்பதற்கான ஆதாரம் என்ன? பாகிஸ்தானைக் காப்பாற்றுவதன் மூலம் அவருக்கு என்ன கிடைக்கும் என்று நான் அவரிடம் கேட்கிறேன் விரும்புகிறேன். அவர் இதைச் சொல்லும்போது, அவர்கள் பாகிஸ்தானுக்கு ஒரு குற்றச்சாட்டை வழங்குகிறார்கள் என்பதற்கான அர்த்தம்...” என்று அமித்ஷா காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை விமர்சித்துப் பேசினார்.



    • Jul 29, 2025 13:04 IST

      'பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் கைது' - மக்களவையில் அமித்ஷா பேச்சு

      மக்களவையில் அமித்ஷா, "அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை என்.ஐ.ஏ ஏற்கனவே கைது செய்துள்ளது. அவர்களுக்கு உணவளித்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பயங்கரவாதிகளின் இறந்த உடல்கள் ஸ்ரீநகரை அடைந்தபோது, அவர்கள் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதலை நடத்திய 3 பேர் என அடையாளம் காணப்பட்டனர்... பயங்கரவாத தாக்குதலில் இருந்து தோட்டாக்களின் FSL அறிக்கை ஏற்கனவே தயாராக இருந்தது... நேற்று, மூன்று பயங்கரவாதிகளின் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டு FSL அறிக்கைகளுடன் ஒப்பிடப்பட்டன... நேற்று சண்டிகரில் மேலும் சோதனைகள் நடத்தப்பட்டன, அதன் பிறகு இந்த மூவரும் பயங்கரவாத தாக்குதலை நடத்தியவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டது" என்று கூறினார்.



    • Jul 29, 2025 12:48 IST

      மருத்துவ மாணவர் சேர்க்கையில் தி.மு.க சட்டப் போராட்டத்திற்கு வெற்றி - ஸ்டாலினின் பெருமிதம் 

      அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் தி.மு.க.வின் சட்டப் போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றியால் கடந்த 4 ஆண்டுகளில் 20,088 மாணவர்கள் பயன்பெற்றுள்ளதாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

      ஓ.பி.சி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீட்டை மருத்துவ மாணவர் சேர்க்கையில் அமல்படுத்தக் கோரி தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜூன் 29 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்ப்பே ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி வாய்ப்புகளைப் பெற்றுத் தந்ததாகக் கூறப்படுகிறது.



    • Jul 29, 2025 12:43 IST

      கச்சத்தீவு அருகே பாம்பன் மீனவர்கள் 9 பேரை சிறைப்பிடித்தது இலங்கை கடற்படை

      கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 5 மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 9 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்தது.



    • Jul 29, 2025 12:33 IST

      “சுட்டுக்கொல்லப்பட்ட மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் - அமித்ஷா

      ஆபரேஷன் மகாதேவில் கொல்லப்பட்ட 3 பயங்கரவாதிகளும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என்று அமித்ஷா நாடாளுமன்றத்தில் கூறினார். பஹல்காம் பயங்கரவாதிகள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று குற்றம் சாட்டியதற்காக பி. சிதம்பரத்தை அமித்ஷா மேலும் தாக்கினார்.

      மூன்று பயங்கரவாதிகளும் பாகிஸ்தானில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் என்றும், அவர்களின் முகாமில் கண்டெடுக்கப்பட்ட உபகரணங்களும் பாகிஸ்தானிலிருந்து பெறப்பட்டவை என்றும் அமித்ஷா கூறினார்.



    • Jul 29, 2025 12:30 IST

      பஹல்காம் பாயங்கரவாதிகள் 3 பேர் சுட்டுக் கொலை - மக்களவையில் அமித்ஷா பேச்சு

      திங்கட்கிழமை ஜம்மு காஷ்மீரில் ஆபரேசன் மகாதேவில் பஹல்காம் பயங்கரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர்,’ என்று மக்களவையில் அமித்ஷா கூறுகிறார். அன்றைய தினமே ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தைத் தொடங்குகிறார்.

      பஹல்காம் தாக்குதல்களில் ஈடுபட்ட மூன்று பயங்கரவாதிகள் இந்திய ஆயுதப் படைகளால் மகாதேவ் நடவடிக்கையின் ஒரு பகுதியாகக் கொல்லப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார்.

      மக்களவையில் தனது உரையின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களிடம், "பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர், நீங்கள் மகிழ்ச்சியாக இல்லையா? நீங்கள் கொண்டாட வேண்டும்" என்று கூறினார். மேலும், தனது உரையை முடித்து, ஆபரேஷன் மகாதேவ் தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த அனுமதிக்குமாறு எம்.பி. அகிலேஷ் யாதவை அவர் வலியுறுத்தினார்.



    • Jul 29, 2025 11:54 IST

      தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்: இபிஎஸ்

      தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ளது, தேர்தலில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதிமுக கூட்டணியில் யார்? யார்? இடம் பெறுவார்கள் என்பதை தேர்தல் நேரத்தில் தெரிவிப்போம்.

      திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி



    • Jul 29, 2025 11:32 IST

      நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

      விஜய் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் பனையூர் தவெக அலுவலகத்தில் நடைபெற உள்ளது.



    • Jul 29, 2025 11:07 IST

      நிமிஷா தூக்கு தண்டனை ரத்து? சகோத‌ர‌ர் மறுப்பு

      ஏமன் சிறையில் உள்ள கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு கேரளாவில் உள்ள நிமிஷா பிரியாவின் சகோத‌ர‌ர் மறுப்பு தெரிவித்துள்ளார். 



    • Jul 29, 2025 11:05 IST

      விவசாயக் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது: இபிஎஸ் பேட்டி

      விவசாயக் கடன்களுக்கு சிபில் ஸ்கோர் கேட்கக் கூடாது, சிபில் ஸ்கோரால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

      - திருச்சியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பு



    • Jul 29, 2025 10:37 IST

      தேர்தல் கூட்டணி தொடர்பாக ஓபிஎஸ் ஆலோசனை

      என்.டி.ஏ கூட்டணியில் இருந்து ஓபிஎஸ் விலகுவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் தனது ஆதரவாளர்களுடன் நாளை ஓபிஎஸ் அவசர ஆலோசனை நடத்துகிறார்.



    • Jul 29, 2025 10:22 IST

      நயினார் நாகேந்திரன் விளக்கம்

      பிரதமர் மோடியை சந்திக்க ஒபிஎஸ் தரப்பில் நேரம் கேட்டார்களா என்று தெரியவில்லை. என்னிடம் கேட்டிருந்தால் நானே நேரம் வாங்கி தந்திருப்பேன் என நயினார் நாகேந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.



    • Jul 29, 2025 09:51 IST

      இந்தியா-பாக்., சண்டையை நிறுத்தியதாக டிரம்ப் அறிவிப்பு

      அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்காட்லாந்தில் உள்ள தனது இல்லத்துக்கு சென்றார். அங்கு இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், தனது மனைவி உடன் சென்று சந்தித்தார். இருவரும் சேர்ந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, இந்தியா-பாகிஸ்தான் சண்டை உள்பட 6 பெரிய போர்களை, தான் நிறுத்தி இருப்பதாக டிரம்ப் கூறினார். தான் தலையிடாவிட்டால், இந்தியாவும், பாகிஸ்தானும் சண்டையிட்டு கொண்டுதான் இருக்கும் என்று அவர் மீண்டும் கூறினார்.



    • Jul 29, 2025 09:17 IST

      போயிங் டிரீம்லைனர் விமானத்தில் எஞ்சின் கோளாறு

      வாஷிங்டனில் புறப்பட்ட சிறிதுநேரத்திலேயே போயிங் டிரீம்லைனர் விமானத்தில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டுள்ளது. வாஷிங்டனில் இருந்து ஜெர்மனிக்கு புறப்பட்ட விமானத்தில் திடீரென்று எஞ்சின் கோளாறு ஏற்பட்டது. இடதுபக்க எஞ்சின் பழுதானதை அடுத்து விமானிகள் MAYDAY எனக் கூறி அவசர உதவி கோரினர். விமானம் 5000 அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது இடதுபக்கத்தில் உள்ள எஞ்சின் பழுதானது. எஞ்சின் பழுதானதை அடுத்து எரிபொருள் தீர, விமானம் வானில் சிறிது நேரம் வட்டமடித்தது. எரிபொருள் தேவையான அளவுக்கு தீர்ந்த பிறகு விமானம் மீண்டும் வாஷிங்டனிலேயே தரையிறங்கியது.



    Chennai

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us: