/tamil-ie/media/media_files/uploads/2017/09/jeyalalitha.jpg)
இன்றைய பெட்ரோல் டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலையில் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை, ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும், எரிவாயு கேஸ் விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
-
Feb 23, 2025 17:08 IST
கிரையப்பத்திரம், பட்டா பெற சிறப்பு முகாம்
சென்னையில் வீட்டு மனைகளுக்கான கிரையப்பத்திரம் மற்றும் பட்டா பெறுவதற்காக வரும் 24-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
-
Feb 23, 2025 16:40 IST
தெலங்கானாவில் சுரங்கம் இடிந்து விபத்து
தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூரில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டு ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில், சிக்கிய 40 பேரில் 32 பேர் மீட்கப்பட்டனர். மீதமுள்ள 8 பேரை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
Feb 23, 2025 15:42 IST
கூகுள் மேம் மூலம் கொள்ளையடித்ததாக வாக்குமூலம்
கூகுள் மேப் மூலமாக, பள்ளிக்கரணையில் சொகுசு பங்களாக்களை நோட்டமிட்டு கொள்ளையடித்ததாக ஞானசேகரன் வாக்குமூலம் அளித்துள்ளார். ஞானசேகரனிடம் இருந்து 100 சவரன் நகைகளை பறிமுதல் செய்த போலீசார், மீதமுள்ள 150 சவரன் நகைகள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருட்டு வழக்குகளில் 3 நாள் காவல் நாளையுடன் முடியும் நிலையில், நீதிமன்றத்தில் ஞானசேகரனை ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
-
Feb 23, 2025 15:07 IST
வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதா; திரும்பப் பெற ஸ்டாலின் வலியுறுத்தல்
வழக்கறிஞர்கள் சட்டத்திருத்த மசோதாவை முழுமையாக திரும்பப் பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். சட்டத்தொழிலின் சுயாட்சியின் மீதான நேரடி தாக்குதல் என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்
-
Feb 23, 2025 14:41 IST
சமூக வலைதள கணக்கை பெண்களிடம் ஒப்படைப்பேன் - மோடி
சர்வதேச மகளிர் தினத்தன்று, தனது சமூக வலைத்தள கணக்குகளை நாட்டின் சில முன்மாதிரி பெண்களிடம் ஒப்படைப்பேன் என மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி அறிவித்துள்ளார்
-
Feb 23, 2025 14:21 IST
25-ம் தேதிக்கு பிறகு வெயிலின் தாக்கம் குறையலாம்
தமிழகத்தில் வரும் 25ம் தேதிக்கு பின் வெப்பநிலை குறைய வாய்ப்பு உள்ளது. இன்றும், நாளையும் வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
Feb 23, 2025 14:02 IST
கிருஷ்ணகிரி கூட்டு பாலியல் வன்கொடுமை - திடுக்கிடும் தகவல்கள்
கிருஷ்ணகிரி பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் இளைஞர் சுட்டு பிடிக்கப்பட்ட விவகாரத்தில், கைது செய்யப்பட்ட இளைஞரின் செல்போனில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பல பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து வீடியோ எடுத்திருப்பதும், விசாரணையில் அம்பலமாகியுள்ளது. எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். வழிப்பறி, பாலியல் வன்கொடுமை தொடர்பாக கலையரசன், அபிஷேக், சுரேஷ், நாராயணன் ஆகியோரை கைது போலீசார் செய்துள்ளனர்
-
Feb 23, 2025 13:30 IST
கொளத்தூரில் புதிய அரசு மருத்துவமனைக்கு பெரியார் பெயர்
சென்னை கொளத்தூரில் ரூ.210 கோடி மதிப்பில் 6 தளங்களுடன் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனைக்கு பெரியாரின் பெயரைச் சூட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே இருந்த புறநகர் மருத்துவமனையை சிறப்பு மருத்துவமனையாக தரம் உயர்த்த கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்
-
Feb 23, 2025 13:14 IST
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலிக்க அமைச்சர்கள் அடங்கிய குழு; ஸ்டாலின் உத்தரவு
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகளை பரிசீலித்து அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க அமைச்சர்கள் அடங்கிய குழுவை அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கயல்விழி ஆகியோர் இக்குழுவில் உள்ளனர்
-
Feb 23, 2025 12:46 IST
நடுத்தர மக்களின் சுமையை நீக்க முதல்வர் மருந்தகம் தொடங்கப்படுகிறது
“முதல்வர் மருந்தகம் கடைகள் திறக்கப்படுவதால், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் மருந்துகளோ, மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் வழங்கப்படும் மருந்துகளோ நிறுத்தப்படாது. அவை தொடரும்..! நடுத்தர மக்களின் மருத்து செலவுக்கான சுமையை 75% வரை குறைக்கும் நோக்கோடு முதல்வர் மருந்தகம் தொடங்கப்படுகிறது” என்று மருத்துவர் எழிலன், திமுக எம்.எல்.ஏ கூறியுள்ளார்.
-
Feb 23, 2025 12:34 IST
நாடாளுமன்ற தொகுதிகளை குறைக்க முயற்சி: முதல்வர்
நாம் அளவோடு பெற்றதனால்தான் நாடாளுமன்ற தொகுதிகள் குறையும் சூழல் ஏற்படுகிறது; மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பில் நாடாளுமன்ற தொகுதிகள் குறைகின்றன குழந்தைகளை அதிகளவில் பெற்றுக் கொள்ள நினைத்தால், நம்மோடு யாரும் போட்டி போட முடியாது; குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயர்களை சூட்ட வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 23, 2025 12:30 IST
பெசன்ட் நகர், மெரினா கடற்கரைகளில் இந்தியா - பாக் போட்டி நேரலை
சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இந்தியா - பாகிஸ்தான் போட்டி சென்னை பெசன்ட் நகர் மற்றும் மெரினா கடற்கரையில் பெரிய திரை அமைத்து நேரலை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று பிற்பகல் 2.30 மணியளவில் துபாயில் தொடங்க இருக்கும் போட்டி முழுவதும் நேரலை செய்யப்படுமென தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது.
-
Feb 23, 2025 12:17 IST
“விண்வெளித் துறையில் பெண்களின் பங்கு அதிகரிப்பு”
"விண்வெளித் துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது; 400க்கும் மேற்பட்ட செயற்கைக் கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. மகளிர் தினத்தன்று எனது சமூக வலைதள கணக்குகள் மகளிரிடம் ஒரு நாள் ஒப்படைக்கப்படும்; மகளிர் தங்களுடைய பதிவுகளை பகிரலாம்" என்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.
-
Feb 23, 2025 11:52 IST
மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட்
சென்னை கீழ்ப்பாக்கம் பவன் பள்ளியில் இந்தி கவிதை சொல்ல முடியாததால் 3ஆம் வகுப்பு மாணவனை அடித்த இந்தி ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சிறுவனை பள்ளிக்குள் நுழைய அனுமதிக்க மாட்டேன் என்று கூறி மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகத்திடம் பெற்றோர் அளித்த புகாரையடுத்து ஆசிரியை பத்மலட்சுமி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
-
Feb 23, 2025 11:44 IST
"ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா"
“ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா? களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா? விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா? முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது" என்று ஜெயலலிதாவின் பிறந்த நாளை ஒட்டி தொண்டர்களுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.
-
Feb 23, 2025 11:42 IST
காஞ்சிபுரம்: கார் மோதி பெண் உயிரிழப்பு
17 வயது சிறுவன் வீட்டிலிருந்து காரை வெளியே எடுத்தபோது கார் மோதி பெண் உயிரிழந்துள்ளார். வீட்டின் அருகில் வாசலில் கோலம் போட்டுக் கொண்டிருந்த சரஸ்வதி மீது கார் மோதியுள்ளது. 17 வயது சிறுவனை விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் காவல் துறையினர்.
-
Feb 23, 2025 11:32 IST
சென்னை கொளத்தூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
“குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடித்ததால்தான் இன்றைக்கு நாடாளுமன்றத் தொகுதிகள் குறையும் ஆபத்து உள்ளது. எனினும் நீங்கள் அளவோடு குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்று சென்னை கொளத்தூரில் திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Feb 23, 2025 10:46 IST
ஆளுனருக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எழுத்துப்பூர்வ வாதம்
அரசியல் சாசனப்படி ஆளுனர் செயல்படாததால், அவர் ஜனாதிபதிக்கு அனுப்பிய மசோதாக்கள்,பல்கலைகழக மசோதாக்கள், உட்பட 10 மசோதாக்களையும், ஆளுனர் ஒப்புதல் பெற்றதாக கருதுவதாக தனது தனி அதிகாரத்தை பயன்படுத்தி, உச்சநீதிமன்றம், அறிவிக்க வேண்டும் என்று ஆளுனருக்கு எதிராக வழக்கில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தில் தெரிவித்துள்ளது,
-
Feb 23, 2025 10:41 IST
சென்னையில் அ.ம.மு.க.வின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு
சென்னை அடையாறில் அமமுகவின் புதிய தலைமை அலுவலகத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் திறந்து வைத்தார்
-
Feb 23, 2025 10:14 IST
த.வெ.க முதல் ஆண்டுவிழா: நுழைவு அட்டை விநியோகம்
சென்னை மாமல்லபுரத்தில், வருகிற 26ம்தேதி நடைபெறும் த.வெ.க ஆண்டு விழாவில் பங்கேற்கும் த.வெ.க நிர்வாகிகளுக்கு நுழைவு அட்டை விநியோகம் செய்யும் பணி தொடங்கியுள்ளது. கட்சியின் தலைமை நிலைய அலுவலகத்தில் பொதுச் செயலாளர் ஆனந்த் வழங்கினார்.
-
Feb 23, 2025 10:13 IST
சென்னையில் போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர் கைது
சென்னை தண்டையார்பேட்டையில், போலீஸ் வாகனங்களை அடித்து நொறுக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கு மண்டல காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகுந்து 3 காவல் வாகனங்கள் சூறையாடப்பட்ட நிலையில்,சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் காரையும் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு
-
Feb 23, 2025 09:29 IST
தாம்பரத்தில் ஏசி புறநகர் ரயில் சோதனை ஓட்டம்
தாம்பரம் பணிமனையில்ஏ.சி புறநகர் ரயிலின் சோதனை ஓட்டம் தொடங்கியுள்ள நிலையில், வரும் மார்ச் மாதம் முதல், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இந்த ரயில் பயன்பாட்டுக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது,
-
Feb 23, 2025 09:26 IST
இறுதிக்கட்டத்தில் மகா கும்பமேளா: இதுவரை 60 கோடி பேர் புனித நீராடியதாக தகவல்
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திரிவேணி சங்கமத்தில் இதுவரை 60 கோடி பேர் புனித நீராடினர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
-
Feb 23, 2025 08:22 IST
மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல்
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனின் ஜீப் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு பகுதிகளில் அவர் திருடி விற்ற 100 சவரன் தங்க நகைகளும் 2 வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
-
Feb 23, 2025 08:00 IST
சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று ரத்து
சிக்னல் சீரமைப்பு பணி காரணமாக சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில் ரயில் சேவைகள் இன்று ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Feb 23, 2025 07:53 IST
மகளிர் ப்ரீமியர் லீக்: டெல்லியை வீழ்த்தியது உ.பி. வாரியர்ஸ்
மகளிர் ப்ரீமியர் லீக் தொடரின் 8-வது லீக் போட்டியில்
டெல்லி அணியை வீழ்த்திய உ.பி.வாரியர்ஸ் அணி...உ.பி.வாரியர்ஸ் அணி வீராங்கனை க்ரேஸ் ஹேரிஸ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை -
Feb 23, 2025 07:48 IST
போப் பிரான்சிஸ் உடல்நிலையில் பின்னடைவு
போப் பிரான்சிஸ் (88) உடல்நிலை மிகவும் மோசமடைந்து வருவவதாக தகவல் வெளியாகியுள்ளது, நிமோனியா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர், தற்போது மருத்துவர் கண்காணிப்பில் உள்ள நிலையில், இந்த வாரம் அவர் பங்கேற்க இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
Feb 23, 2025 07:33 IST
சாம்பியன் லீக் கிரிக்கெட்: இந்தியா - பாகிஸ்தான் இன்று மோதல்
பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வரும் சாம்பியன் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 5-வது லீக் ஆட்டத்தில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன. முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி இந்த போட்டியில் வெற்றி பெற்றால் தான் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க முடியும். அதே சமயம் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யலாம்.
-
Feb 23, 2025 07:13 IST
ஒரே நாளில் 32 மீனவர்கள், 5 படகுகள் சிறை பிடிப்பு: இலங்கை கடற்படை அட்டகாசம்
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, 14 ராமேஸ்வரம் மீனவர்களை சிறை பிடித்துள்ள இலங்கை கடற்படை, ஒரே நாளில் 32 மீனவர்களையும், 5 படகுகளையும் சிறை பிடித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.