Chennai News Updates: ‘திரைத்துறையில் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் முதலமைச்சர் கனவு காண்கிறார்கள்’ - விஜயை மறைமுகமாக சாடிய திருமா

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Thirumavalan vck

Today Latest News Updates: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment
  • Oct 03, 2025 21:42 IST

    ‘திரைத்துறையில் விருப்ப ஓய்வு பெறுபவர்கள் முதலமைச்சர் கனவு காண்கிறார்கள்’ - விஜயை மறைமுகமாக சாடிய திருமா

    சென்னையில் பேராண்டி பட விழாவில் பேசிய வி.சி.க தலைவர் திருமாவளவன், “உண்மையான அதிகாரம் பிரதமர் இருக்கையில்தான் இருக்கிறது; தமிழர்களுக்கு தாங்கள் பிரதமராக வேண்டும் என்ற எண்ணம் இல்லை. முதல்வர் அலுவலகம் என்பது, தாசில்தார் அலுவலகம் போலத்தான். முதல்வர் பதவியை குறைத்து மதிப்பிடவில்லை நான். ஆனால் பிரதமர் பதவியோடு அதை ஒப்பீடு செய்வது அவசியம். சரி படத்திலாவது நாம் முதலமைச்சராக இருக்கலாமே என்று ஒரு படத்தில் நடித்தேன்; ராணுவத்தில் ஓய்வு பெறுவோர், காவலாளி போன்ற வேலைகளுக்கு செல்கின்றனர். திரைத்துறையில் விருப்ப ஓய்வு பெறுபவர்களோ, முதலமைச்சர் கனவு காண்கின்றனர். தமிழ்நாட்டு அரசியல் அப்படி உள்ளது,”  என்று விஜயை மறைமுகமாகச் சாடினார்.



  • Oct 03, 2025 21:20 IST

    ‘உலக வரைபடத்தில் இருக்க வேண்டுமா என பாகிஸ்தான் சிந்திக்க நேரிடும்’: இந்திய ராணுவத் தளபதி எச்சரிக்கை

    ராஜஸ்தான் எல்லையோரப் பகுதிகளில் ராணுவத் தளபதி உபேந்திர திவேதி ஆய்வு செய்தபோது, ‘ஆபரேஷன் சிந்தூர்’ போது காட்டிய நிதானத்தை அடுத்த முறை இந்தியா கடைப்பிடிக்காது என்று கூறினார்.

    பாகிஸ்தானுக்கு ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி வெள்ளிக்கிழமை கடுமையான எச்சரிக்கை விடுத்தார். ராஜஸ்தானின் எல்லையோரப் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அவர், மீண்டும் ஒரு மோதல் ஏற்பட்டால், "ஆபரேஷன் சிந்தூர் 1.0-இன் போது இந்தியா காட்டிய நிதானத்தை அடுத்த முறை கடைப்பிடிக்காது" என்று கூறினார். ஸ்ரீகங்காநகர் மாவட்டத்தில் உரையாற்றிய ஜெனரல் திவேதி, இந்தியாவின் உறுதியைச் சோதிப்பதைத் தவிர்க்குமாறு பாகிஸ்தானை வலியுறுத்தியதுடன், பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். “அடுத்த முறை, ஆபரேஷன் சிந்தூர் 1.0-இன் போது இந்தியா காட்டிய நிதானம் இருக்காது. அதன் விளைவாக பாகிஸ்தான், உலக வரைபடத்தில் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கும்,” என்று அவர் எச்சரித்தார். 



  • Advertisment
    Advertisements
  • Oct 03, 2025 20:17 IST

    விஜய் கைது செய்யப்படுவாரா? தி.மு.க பயப்படுகிறதா? அமைச்சர் துரைமுருகன் பதில்!

    த.வெ.க தலைவர் விஜய் கைது செய்யப்படுவாரா? தி.மு.க பயப்படுகிறதா? என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராணிப்பேட்டையில் பதிலளித்துப் பேசிய துரைமுருகன், “யாரையும் பார்த்து தி.மு.க பயப்படாது.” என்று கூறினார்.



  • Oct 03, 2025 19:42 IST

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் நிர்வாகத்துக்கும் வடகலை பிரிவினருக்கும் இடையே மோதல்; போலீசில் புகார்

    காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் தேசிகர் சாற்று முறை உற்சவத்தில், “நம்மாழ்வார் சன்னதிக்கு வடகலை பிரிவினர் செல்லக்கூடாது” என தடுத்த கோவில் நிர்வாகத்திற்கும், வடகலை பிரிவினருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருவரையொருவர் தாக்கியதால் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.



  • Oct 03, 2025 18:48 IST

    2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்கக்கூடாது – மத்திய அரசு

    குழந்தைகளுக்கு இருமல் சிரப் பரிந்துரைப்பது குறித்து அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது. அதில், 2 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இருமல் சிரப் வழங்கக்கூடாது. பொதுவாக 5 வயது மற்றும் அதற்கு உட்பட்ட வயதினருக்கு, இருமல், சளி சிரப் பரிந்துரைக்கப்படுவதில்லை. மருத்துவர்களின் பரிந்துரைகளை பின்பற்றுவது குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மத்திய பிரதேசத்தில் இருமல் சிரப் சாப்பிட்டதால் 9 குழந்தைகள் இறந்ததாக கூறப்படும் நிலையில் மத்திய அரசு இந்த அறிவுரைகளை வழங்கியுள்ளது



  • Oct 03, 2025 18:12 IST

    முசாஃபராபாத் மனித உரிமை மீறல்கள்; பாக். பொறுப்பேற்க வேண்டும் - இந்திய வெளியுறவுத்துறை

    பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5ஆவது நாளாக வன்முறை நடைபெற்று வருகிறது. முசாஃபராபாத்தில் போராடும் மக்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது. முசாஃபராபாத் மனித உரிமை மீறல்களுக்கு பாகிஸ்தான் பொறுப்பேற்க வேண்டும் என இந்திய வெளியுறவுத்துறை கருத்து தெரிவித்துள்ளது



  • Oct 03, 2025 17:40 IST

    குறைந்தபட்ச சமூக பொறுப்பைக் கூட த.வெ.க.,வினர் பின்பற்றவில்லை – ஐகோர்ட்

    அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பைக் கூட தவெகவினர் பின்பற்றவில்லை என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் கூறியுள்ளார்



  • Oct 03, 2025 17:38 IST

    அக்.6ம் தேதி அதிகாலையில் மின்சார ரயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும்

    ஆயுதப் பூஜை விடுமுறை முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக அக்டோபர் 6 ஆம் தேதி அதிகாலையில் காட்டாங்குளத்தூர் முதல் தாம்பரத்திற்கு மின்சார ரயில் சிறப்பு சேவைகள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது



  • Oct 03, 2025 17:37 IST

    ஜடேஜா அபார சதம்

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான முதல் டெஸ்டில் 168 பந்துகளில் சதம் அடித்து ஜடேஜா அசத்தியுள்ளார். முதல் டெஸ்டில் ராகுல், துருவ் ஜுரல், ஜடேஜா ஆகியோர் சதம் விளாசியுள்ளனர்



  • Oct 03, 2025 17:17 IST

    கரூரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு - ஐகோர்ட்

    கரூரில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட பேரழிவு நிகழ்ந்துள்ளது. நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களோ? பிரச்சார வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. பைக் மீது பேருந்து மோதியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யாவிட்டால் மக்கள் எப்படி நம்புவார்கள். கரூர் கூட்டநெரிசல் வீடியோக்களை பார்க்கும்போது வேதனை அளிக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் கூறியுள்ளார்



  • Oct 03, 2025 17:15 IST

    முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில்

    அக்டோபர் 5ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நெல்லை – தாம்பரம் இடையே முன்பதிவு இல்லாத சிறப்பு ரயில் இயக்கப்படும். இந்த ரயில் நெல்லையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை 4.50 மணிக்கு புறப்படும். மேலும் 18 முன்பதிவு இல்லாத பெட்டிகளுடன் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது



  • Oct 03, 2025 16:50 IST

    தமிழ் நிலத்திலிருந்து வரலாறு தொடங்கப்பட வேண்டும்: ஸ்டாலின்



  • Oct 03, 2025 16:45 IST

    தவறிழைத்தவர்களை அரசு பாதுகாக்கவில்லை: கரூர் வழக்கில் அரசு தரப்பு வாதம்

    தவெக கேட்ட இடத்தை தான் ஒதுக்கினோம்; த.வெ.க. நிகழ்ச்சிக்கு 559 போலீசார் பாதுகாப்பு பணிக்கு அமர்த்தப்பட்டனர்; டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி திடீரென செப்டம்பருக்கு மாற்றப்பட்டுள்ளது.

    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அதே இடத்தில் பிரச்சாரம் செய்துள்ளார் - கரூர் வழக்கில் அரசு தரப்பு வாதம்



  • Oct 03, 2025 16:43 IST

    குழந்தைகள், பெண்கள் என பலர் இறந்துக் கிடந்தபோதும், தவெக நிர்வாகிகள் சென்றுவிட்டனர்

    கரூர் துயரம், மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரழிவு. விபத்து தொடர்பான வீடியோக்களைப் பார்த்து வேதனையடைந்தேன்

    சம்பவ இடத்தில் குழந்தைகள், பெண்கள் என பலர் இறந்துக் கிடந்தபோதும், தவெக நிர்வாகிகள் சென்றுவிட்டனர். ஒரு அரசியல் கட்சியின் இத்தகைய செயலை நீதிமன்றம் கடுமையாகக் கண்டிக்கிறது

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார்



  • Oct 03, 2025 16:41 IST

    உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்காக விஜய் காத்திருப்பா?

    கரூர் செல்வதற்கு உயர் நீதிமன்றத்தின் அனுமதிக்காக விஜய் காத்திருப்பதாக தவெக தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், அப்படி ஒரு கோரிக்கையுடன் இன்று எந்த மனுவும் உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படவில்லை



  • Oct 03, 2025 16:40 IST

    தங்கம் விலை உயர்வு

    இன்று (03 OCT 2025) காலையில் ஒரு சவரன் ரூ.880 குறைந்திருந்த நிலையில், தற்போது ஒரு சவரன் ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.87,200 ஆகவும், ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10,900 ஆகவும் இருக்கிறது.

     



  • Oct 03, 2025 16:16 IST

    ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் மனுகள் மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

    கரூர் விவகாரத்தில் தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல்குமார் தொடர்ந்த முன்ஜாமீன் மனுக்கள் மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக்கிளை



  • Oct 03, 2025 16:15 IST

    விபத்தை கொலையாக மாற்றுவதா? தவெக ஆனந்த் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்

    4 மணி நேரம் எங்கள் தலைவர் தாமதமாக வந்தார்; 3 மணிக்கு வருவதாகச் சொன்னவர், 7 மணிக்கு வந்து நின்றது கிரிமினல் குற்றமா? மொத்த வழக்கும் அரசால் திரிக்கப்பட்டுள்ளது.

    சொந்தக் கட்சியினரைக் கொல்லும் எண்ணம் எங்களுக்கு இல்லை. என் மீது பதிவு செய்யப்பட்ட BNS பிரிவு 105 மற்றும் 110 ஆகியவை, குற்றவாளிக்கு ஆதரவு செய்யும் நோக்கம் இருக்க வேண்டும். ஒரு விபத்தை கொலையாக மாற்ற முடியாது

    - தவெக ஆனந்த் தரப்பு நீதிமன்றத்தில் வாதம்



  • Oct 03, 2025 16:10 IST

    என்ன மாதிரியான கட்சி இது? நீதிபதி செந்தில் குமார் காட்டம்

    கரூர் துயரத்துக்கு தவெக வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. இது அக் கட்சித் தலைவரின் மனநிலையைக் காட்டுகிறது. 

    ஆதவ் அர்ஜுனா ஏதோ புரட்சியை ஏற்படுத்துவது போல கருத்துப் பதிவிட்டுள்ளார். இதன் பின்னணியை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். 

    இது போல பொறுப்பற்ற பதிவுகளை காவல்துறை கவனத்துடன் விசாரித்து வழக்குப்பதிவு செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவுக்கு காத்திருக்கிறீர்களா? அரசியல் கட்சிக்கு இருக்க வேண்டிய குறைந்தபட்ச சமூக பொறுப்பைக் கூட தவெகவினர் பின்பற்றவில்லை.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார்



  • Oct 03, 2025 16:08 IST

    கரூரில் நடந்தது மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு- நீதிபதி செந்தில் குமார்

    கரூரில் மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவு (Man made Disaster) நிகழ்ந்துள்ளது.  தவெக தலைவர் விஜயிடம் தலைமைத்துவ பண்பே இல்லை.

    பரப்புரை ஏற்பாட்டாளர்கள், தலைவர் என அனைவரும் சம்பவம் நடந்ததும் தொண்டர்களையும், அவர்களை பின் தொடர்ந்தவர்களையும் கைவிட்டு அங்கிருந்து மறைந்துவிட்டனர். கரூர் துயர சம்பவத்தில் நீதிமன்றம் கண்மூடி வேடிக்கை பார்க்க முடியாது. சட்டத்துக்கு முன் அனைவரும் சமம். அரசு அமைதியாக இருக்க முடியாது. 
     
    அனைத்துக் கட்சிகளும் மீட்புப் பணியில் இருந்தபோது, நிகழ்ச்சியை நடத்திய கட்சியினர், ஒட்டுமொத்தமாக அங்கிருந்து வெளியேறியுள்ளனர். தமிழக வெற்றிக் கழகத்திற்கு கடுமையான கண்டனத்தை இந்த நீதிமன்றம் தெரிவிக்கிறது.

    சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார்

     



  • Oct 03, 2025 16:04 IST

    கரூர் சம்பவம்: ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு

    கரூர் சம்பவம் தொடர்பாக விசாரிக்க வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்தது உயர் நீதிமன்றம். கரூர் மாவட்ட எஸ்.பி.யை குழுவில் இணைத்தும், வழக்கு ஆவணங்களை உடனடியாக ஒப்படைக்க கரூர் போலீசாருக்கு உத்தரவிட்டது.



  • Oct 03, 2025 15:39 IST

    புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வாதம்!

    தலைமறைவாவது ஏற்கத்தக்கது அல்ல. விசாரணை செய்தால்தான் மட்டுமே உண்மை தெரியவரும். விசாரணை தொடக்க நிலையில் உள்ளதால் முன் ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் உயிரிழந்துள்ளனர். முன் ஜாமீன் வழங்கக்கூடாது

    புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோரின் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் அரசு தரப்பு வாதம்!



  • Oct 03, 2025 15:35 IST

    2 பேர் மட்டும் கைது ஏன்? - உயர்நீதிமன்ற நீதிபதி

    2 பேர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது; வழக்குப்பதிவில் என்ன தடை? புகார் இல்லாவிட்டாலும் வழக்குப்பதிவு வேண்டும்.
    நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு கருணை காட்டுகிறீர்களே?; கரூர் நெரிசல் விவகாரத்தில் சேதங்களைக் கணக்கிட்டீர்களா? ஏன் இவ்வளவு தாமதம்?

    - நீதிபதி செந்தில்குமார் கேள்வி



  • Oct 03, 2025 15:33 IST

    தப்பி ஓடிய தவெகவினர் - அரசுத் தரப்பு வாதம்

    கரூரில் சம்பவம் நடந்தவுடன் தவெகவினர் தப்பி ஓடிவிட்டனர். காத்திருந்தவர்களுக்கு தவெக சார்பில் குடிநீர் வழங்கப்படவில்லை. பெரும்பாலானவர்கள் நீர்ச்சத்துக் குறைபாடு காரணமாகவே உயிரிழந்திருப்பதாக உடற்கூராய்வில் தெரியவந்துள்ளது

    - அரசுத் தரப்பு



  • Oct 03, 2025 15:31 IST

    விஜய் பரப்புரை வாகனம் மோதி இருவர் விழுந்த விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

    விஜய் பரப்புரை வாகனம் மோதி இருவர் விழுந்த விவகாரத்தில், வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. பரப்புரை வாகனத்தை பறிமுதல் செய்திருக்க வேண்டாமா? ஒரு கட்டுப்பாடில்லாத கலவரம் போல இது நடந்துள்ளது.

    - கூட்டங்களுக்குக் கட்டுப்பாடு கோரிய வழக்கில் நீதிபதி செந்தில்குமார் கருத்து



  • Oct 03, 2025 15:27 IST

    தொண்டர்களை கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இல்லை

    தொண்டர்களை கொல்ல வேண்டுமென்ற எண்ணம் இல்லை; இது திட்டமிட்ட செயல் அல்ல; காலணி மற்றும் சில ரசாயனங்களை கூட்டத்தில் இருந்த சிலர் வீசி எறிந்தனர்

    - முன்ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமார் தரப்பு வாதம்



  • Oct 03, 2025 15:26 IST

    மக்கள் அதிகமாக வருவர் என போலீஸ் கணித்திருக்க வேண்டும்: தவெக நிர்வாகிகள் தரப்பு வாதம்

    மக்கள் அதிகமாக வருவர் என போலீஸ் கணித்திருக்க வேண்டும்; நாங்கள் அதில் புலமை பெற்றவர்கள் அல்ல. 

    வேலுச்சாமிபுரம் குறுகிய சாலை எனில் போலீசார் அனுமதி மறுத்திருக்கலாமே?; வேலுச்சாமிபுரத்தை பற்றி எங்களுக்குத் தெரியவில்லை - 

    கரூரில் ஒட்டுமொத்த மக்களும் கூடிய நிலையில் காவல்துறை தடியடி நடத்தியுள்ளது. கூட்டத்திற்குக் காவல்துறை பாதுகாப்புக் கோருவது எதனால்? உரிய பாதுகாப்பு வழங்கவே கூட்டங்களை மேலாண்மை செய்யும் பொறுப்பு முழுக்க அரசுக்கே உள்ளது. 

    - முன்ஜாமீன் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தவெக நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமார் தரப்பு வாதம்



  • Oct 03, 2025 15:17 IST

    தவெக நிர்வாகிகள் என். ஆனந்த், நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்

    கரூர் விஜய்யின் பரப்புரைக் கூட்டத்தில் ரவுடிகள் புகுந்துள்ளனர். காவல்துறை ஏன் தடியடி நடத்தியது? வேலுச்சாமிபுரத்திற்கு பதில் வேறு இடத்தில் அனுமதி கேட்டு முறையாக வந்தோம். நீதிமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டிருந்ததால் முறையிட முடியவில்லை. முறையிட முடியாததால் வேலுச்சாமிபுரத்திலேயே பரப்புரை நடத்தினோம். விஜய்யின் பரப்புரைக்கு காலியான ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டது. அதற்காக தவெக பொதுச்செயலாளர் மீது எப்படி வழக்கு பதிவு செய்ய முடியும்? கூட்டத்தை கட்டுப்படுத்துவது அரசியின் கடமை

    என். ஆனந்த், நிர்மல்குமார் தரப்பு வழக்கறிஞர் வாதம்



  • Oct 03, 2025 15:14 IST

    புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை

    கரூர் உயிரிழப்புகள் தொடர்பாக புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடங்கியது.  நீதிபதி ஜோதிராமன் இம்மனுக்களை விசாரிக்கிறார்.

    கூட்டத்தின் ஏற்பாட்டாளர் மாவட்ட செயலாளர் மதியழகன்தான். அவர் கைது செய்யப்பட்டுள்ளார். உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு மீதான விசாரணையில் புஸ்ஸி ஆனந்த் தரப்பு வாதம்



  • Oct 03, 2025 14:58 IST

    சினிமாவில் நடிப்பதுபோல் அரசியலிலும் நடிக்க அமித்ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் - சபாநாயகர் அப்பாவு

    சினிமாவில் நடிப்பதுபோல் அரசியலிலும் நடிக்க அமித்ஷாவிடம் விஜய் ஒப்பந்தம் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தலைவனாக இருந்தால் நெஞ்சில் உறுதி வேண்டும்; ஈவு, இரக்கம் வேண்டும். கரூர் கொடுந்துயரத்துக்கு காரணமான விஜய் பனையூரில் பதுங்கி உள்ளார்.



  • Oct 03, 2025 14:57 IST

    கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் - மா. செ-களுக்கு விஜய் அறிவுறுத்தல்

    த.வெ.க நிர்வாகிகளை வாட்ஸ்அப் கால் மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு பேசிய விஜய், கரூர் துயரத்தால் துவண்டுவிட வேண்டாம் என நிர்வாகிகளுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். இறந்தவர்களின் குடும்பத்தினரை நான் விரைவில் சந்திக்க வேண்டும் என்றும், அதற்கான ஏற்பாடுகளை செய்யவும் விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். 

    மேலும், இது போன்ற ஒரு சூழலை சந்திப்போம் என நினைத்துக்கூட பார்த்ததில்லை. அனைவரும் நம்பிக்கையுடன், புதிய வேகத்துடன் செயல்படுங்கள். துயரத்தில் இருந்து வெளிவர வேண்டிய முயற்சிகளை செய்யுங்கள் எனவும் த.வெ.க மாவட்ட செயலாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தி இருக்கிறார். 



  • Oct 03, 2025 14:30 IST

    தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும் - செல்வப்பெருந்தகை

    தமிழ்நாட்டை அவமதிக்கும் வகையில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி மன்னிப்பு கோர வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் "பட்டியலின மக்களின் நிலையை தவறாக சித்தரித்த ஆளுநரின் கருத்துகள் பொறுப்பில்லாத கூற்று. தமிழ்நாட்டை அவமதிக்கும் எந்த சொல்லையும் நாங்கள் கடுமையாக நிராகரிக்கிறோம். ஆளுநர் ஆர்.என்.ரவி தனது வார்த்தைகளை உடனடியாக வாபஸ் பெற வேண்டும்" என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.



  • Oct 03, 2025 13:48 IST

    பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது -இந்திய விமானப்படை தளபதி

    ஆப்ரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் 10 போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக இந்திய் அவிமானப்படை தளபதி ஏ.பி.சிங் பேட்டி.



  • Oct 03, 2025 13:18 IST

    பொதுக்கூட்டங்களில் 'Exit' கட்டாயம் -உயர்நீதிமன்ற மதுரை கிளை

    பொதுக் கூட்டங்களின் போது அதில் பங்கேற்பவர்கள் வெளியில் செல்வதற்கான வழியை கட்டாயம் ஏற்படுத்தி தர வேண்டும்.



  • Oct 03, 2025 12:57 IST

    கரூர் கூட்ட நெரிசல் - பொதுநல வழக்கில் நீதிபதிகள் கேள்வி

    மாநில நெடுஞ்சாலையில் எவ்வாறு அனுமதி வழங்கினார்கள்? விஜய் பரப்புரைக்கு அனுமதி கொடுத்ததற்கான கடிதம் எங்கே? விஜய் பரப்புரைக் கூட்டத்தில் குடிநீர் வழங்கப்பட்டதா? குடிநீர் சுகாதார வசதிகளை சட்டம் ஒழுங்கு காவலர்கள் கண்காணித்தார்களா?  என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.



  • Oct 03, 2025 12:42 IST

    கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள் -முதலமைச்சர் விமர்சனம்

    அடுத்தவர் முதுகில் சவாரி செய்து பழக்கப்பட்ட பா.ஜ.க., கரூர் நெரிசலை பயன்படுத்தி யாரை தன் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.



  • Oct 03, 2025 11:38 IST

    ஆந்திராவின் நடைபெற்ற தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன்

    ஆந்திராவின் குண்டூரில் நடந்த 62வது தேசிய செஸ் போட்டியில் தமிழக வீரர் இனியன் சாம்பியன் பட்டம் வென்றார். 14 கிராண்ட் மாஸ்டர்கள் உள்பட 394 பேர் பங்கேற்ற தேசிய செஸ் போட்டியில் முதலிடம் பிடித்து இனியன் சாம்பியன்.



  • Oct 03, 2025 11:28 IST

    கோல்டுரிஃ இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிப்பு

    ம.பி, ராஜஸ்தானில் 8 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த விவகாரத்தில், அவர்கள் குடித்த இருமல் மருந்து காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கோல்டுரிஃ இருமல் சிரப் தமிழ்நாட்டில் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உடற்கூராய்வில் சிறுநீரக திசுவில் டிஎதிலேனே கிளைகோல் எனும் ரசாயனம் இருப்பது கண்டுபிடிப்பு. இது மை, பெயிண்ட் தயாரிக்க பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Oct 03, 2025 11:02 IST

    ராமேஸ்வரம் மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்

    இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட, தமிழ்நாட்டைச் சேர்ந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர், இன்று காலை இலங்கையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். 



  • Oct 03, 2025 09:42 IST

    மோடி மிகவும் புத்திசாலித்தனமான தலைவர் - புதின்

    பிரதமர் மோடி தனது நாட்டின் நலனை முதலில் சிந்திக்கும் மிகவும் புத்திசாலித்தனமான தலைவர். ரஷ்யாவில் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு 10 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படும். பிரதமர் மோடியை நான் அறிவேன், அமெரிக்காவின் எந்த அழுத்த‌த்திற்கும் மோடி அடிபணிய மாட்டார் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்துள்ளார்.



  • Oct 03, 2025 09:41 IST

    ஆந்திராவில் தடியடி திருவிழாவில் 3 பேர் உயிரிழப்பு

    ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியில் விஜயதசமி நாளில் நடைபெற்ற தடியடி திருவிழாவில் ஒருவரை ஒருவர் தடிகளால் தாக்கியதில் 3 பேர் பலியான நிலையில், 8 பேர் படுகாயம் அடைந்தனர்.



  • Oct 03, 2025 09:38 IST

    ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி - முதல்முறையாக இந்தியா வரும் தாலிபான் தலைவர்

    ஆப்கானிஸ்தான் தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் அமீர்கான் முத்தகி வரும் 9ம் தேதி இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக ஆப்கான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகிறார். தாலிபான் தலைவர்களுக்கு பயண தடை உள்ள நிலையில், அமீர்கான் முத்தகி இந்தியா வர ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் அனுமதி அளித்துள்ளது.



  • Oct 03, 2025 08:53 IST

    யூடியூபருக்கு மிரட்டல் - தவெக உறுப்பினர் கைது

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து வீடியோ வெளியிட்ட யூடியூபரை தாக்கியதாக யூடியூபர் கிரன்புரூஸ் அளித்த புகாரில் சென்னை ஆழ்வார் திருநகரை சேர்ந்த தவெக உறுப்பினர் கோகுல் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 



  • Oct 03, 2025 08:51 IST

    டிராக்டர் விபத்தில் 11 பேர் உயிரிழப்பு - இரங்கல் தெரிவித்த பிரதமர் நிவாரணம் அறிவிப்பு

    மத்திய பிரதேசம் காண்ட்வா-வில் டிராக்டர் ஏரியில் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்த 11 பேருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேசம், காண்ட்வா-வில் நேர்ந்த விபத்தில் மக்கள் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.



  • Oct 03, 2025 07:59 IST

    நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

    சென்னை தேனாம்பேட்டையில் உள்ள நடிகை திரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நிலையில், மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை நடைபெற்றது. சென்னையில் ஆளுநர் மாளிகை, முதலமைச்சர், பாஜக தலைமை அலுவலகம், நடிகர் எஸ்வி சேகர் இல்லத்திற்கும் மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீசார் சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரியவந்த‌து.



  • Oct 03, 2025 07:55 IST

    விடுமுறை முடிந்து சென்னை திரும்பும் மக்கள் - தாம்பரத்தில் பயணிகள் கூட்டம்

    தசரா விடுமுறை முடிந்து அலுவலகங்கள் இன்று திறக்கப்படும் நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள்,சென்னை திரும்பியதால் தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.



  • Oct 03, 2025 07:25 IST

    காலை 10 மணி வரை மழை தொடரும்

    சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
    காலை 10 மழை வரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது,



  • Oct 03, 2025 07:24 IST

    இந்தியா, சீனாவுக்கு நன்றியுடன் இருக்கும் ரஷ்யா: புதின் பேச்சு

    பி.ஆர்.ஐ.சி.எஸ் அமைப்பை நிறுவ உதவிய இந்தியா சீனா போன்ற நாடுகளுக்கு ரஷ்யா நன்றியுடன் இருக்கிறது, இந்த நாடுகள் பக்கச்சார்பாக செயல்பட மறுத்து, உண்மையில் ஒரு நியாயமான உலகத்தை உருவாக்க விரும்புவதாக, ரஷ்ய அதிபர் புதின் பேசியுள்ளார்.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: