Chennai News Highlights: தமிழ்நாடு உரிமை பறிபோகாமல் ஆட்சி நடத்தினோம் - இ.பி.எஸ் எக்ஸ் பதிவு

இன்றைய அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இபிஎஸ்

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ100.80-க்கும், டீசல் விலை, ரூ92.39-க்கும் எரிவாயு விலை ரூ90.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

  • Mar 12, 2025 22:23 IST

    "இந்தி திணிப்பில் நாடகம் ஆடும் தி.மு.க": இ.பி.எஸ் குற்றச்சாட்டு

    இந்தி திணிப்பில் தி.மு.க நாடகம் ஆடுகிறது என அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார். குறிப்பாக, "இந்தி திணிப்பை முதன்முதலில் கொண்டு வந்த காங்கிரஸுடன், தி.மு.க கைகோர்த்தது. டெல்லியில் தமிழ்நாட்டை அடகு வைத்தது யார்? இந்தி திணிப்பில் நாடகம் ஆடும் தி.மு.க-விற்கு, அ.தி.மு.க குறித்து பேச எள்ளளவாவது தகுதி இருக்கிறதா?" என்று அவர் தெரிவித்துள்ளார்.



  • Mar 12, 2025 20:57 IST

    சென்னையில் கார் வாங்குபவர்களுக்கு புதிய விதி

    சென்னையில் புதிதாக கார் வாங்குபவர்கள் அதனை பதிவு செய்ய வேண்டுமென்றால், தனது வீட்டிலோ அல்லது தனியார் இடத்திலோ காரை நிறுத்த இடம் உள்ளது என்ற ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும் எனக் கூறப்படுகிறது. இந்த புதிய விதி விரைவில் அமலுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.



  • Advertisment
  • Mar 12, 2025 20:30 IST

    பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிப்பு

    தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 22-ஆம் தேதியில் இருந்தும், 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 25ஆம் தேதியில் இருந்தும் கோடை விடுமுறை தொடங்குகிறது.



  • Mar 12, 2025 20:03 IST

    தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க முடிவு

    சென்னையில் தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழில் பெயர் பலகை கட்டாயம் வைக்க வேண்டும் என்றும், அவ்வாறு செயல்படாத கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிநாடு அரசின் அறிவுறுத்தலின்பேரில் செயல்படவுள்ளதாக கூறப்படுகிறது.



  • Advertisment
    Advertisements
  • Mar 12, 2025 19:40 IST

    முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

    1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முழு ஆண்டுத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மூன்றாம் பருவ முழு ஆண்டுத் தேர்வு ஏப்ரல் 9 முதல் 21ஆம் தேதி வரை நடைபெறும். 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு ஏப்ரல் 8 முதல் 24ஆம் தேதி வரை நடத்தப்படும்.



  • Mar 12, 2025 18:58 IST

    வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பா.ஜ.க முயற்சி - ஸ்டாலின்

    தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சி நடப்பதாக மத்திய அரசே அறிக்கைகள் மூலம் சொல்கிறது. கொள்ளைப்புறம் வழியாக வலதுசாரி சிந்தனைகளை தமிழ்நாட்டில் புகுத்த பா.ஜ.க முயற்சி செய்கிறது. ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும் மக்களுக்கான குரலாக தி.மு.க எப்போதும் ஒலிக்கும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்



  • Mar 12, 2025 18:44 IST

    வீரப்பன் தேடுதல் வேட்டை; தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

    வீரப்பன் தேடுதல் வேட்டையின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டு பாக்கியை 3 வாரங்களில் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது



  • Mar 12, 2025 18:18 IST

    த.வெ.க இறுதி மாவட்ட செயலாளர்கள் பட்டியல்; நாளை வெளியிடுகிறார் விஜய்

    தமிழக வெற்றிக் கழகத்தின் இறுதிக்கட்ட மாவட்ட செயலாளர்கள் பட்டியலை த.வெ.க தலைவர் விஜய் நாளை (மார்ச்.13) வெளியிடுகிறார் 



  • Mar 12, 2025 17:52 IST

    ரயில்வே திட்டங்களுக்கு நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது - தமிழ்நாடு அரசு

    தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்குத் தேவையான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது என மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி. தம்பிதுரை எழுப்பிய புகாருக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது



  • Mar 12, 2025 17:38 IST

    பெரியார் தமிழர்களை பற்றி சொன்னது அக்கறையோடு... அவமானப்படுத்த அல்ல; நிர்மலா சீதாராமனுக்கு கனிமொழி பதில்

    தந்தை பெரியார் தமிழர்களை பற்றி சொன்னது அக்கறையோடு... அவமானப்படுத்த அல்ல என தமிழை காட்டுமிராண்டி மொழி எனக்கூறியவர் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதற்கு தி.மு.க நாடாளுமன்ற குழு தலைவர் கனிமொழி பதில் அளித்துள்ளார்



  • Mar 12, 2025 17:20 IST

    நடிகை சௌந்தர்யா குறித்து பரவும் தகவல் உண்மை இல்லை – கணவர் விளக்கம்

    நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, கொலை. இதில் நடிகர் மோகன் பாபுவுக்கு தொடர்பு உள்ளதாக சிட்டிமல்லு என்பவர் புகார் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், சௌந்தர்யா-மோகன் பாபு விவகாரத்தில் உண்மை இல்லை. மோகன் பாபு, செளந்தர்யாவிடம் இருந்து சட்டவிரோதமாக எந்த சொத்தும் வாங்கவில்லை. மோகன் பாபு உடன் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் நல்ல நட்புடன் உள்ளோம். ஆதாரமற்ற செய்திகள் தொடர்பாக மறுப்பு தெரிவிக்க விரும்புகிறேன் என சௌந்தர்யாவின் கணவர் ரகு விளக்கம் அளித்துள்ளார்



  • Mar 12, 2025 17:02 IST

    தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் எடுப்பதில் தி.மு.க அரசு தாமதம் - ராஜ்யசபாவில் தம்பிதுரை பேச்சு

    அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி தம்பிதுரை, தமிழ்நாட்டில ரயில்வே திட்டங்களுக்கு நிலம் எடுப்பு செய்வதில் தி.மு.க அரசு தாமதிப்பதாக மாநிலங்களவையில் குற்றம் சாட்டிப் பேசினார். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், தமிழ்நாட்டில் ரயில்வே திட்டங்களுக்கான நிலங்கள் விரைந்து கையகப்படுத்தப்பட்டு வருகின்றன என்று விளக்கம் அளிக்கப்பட்டது.



  • Mar 12, 2025 16:10 IST

    அண்ணா இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார் - டி.டி.வி. தினகரன்

    அ.ம.மு.க பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன்: “அண்ணா இருந்திருந்தால் மும்மொழிக் கொள்கையை ஆதரித்திருப்பார். மும்மொழிக் கொள்கை குறித்து அரசுப்பள்ளி மாணவர்களிடையே வாக்கெடுப்பு நடத்த வேண்டும்; 3-வது மொழி கற்பதில் தவறில்லை என கூலித் தொழிலாளிகளின் பிள்ளைகள் கூறுகின்றனர்.” என்று கூறியுள்ளார்.



  • Mar 12, 2025 16:07 IST

    தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த ஆலோசனை: மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு தமிழக தேர்தல் அதிகாரி அழைப்பு

    தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த யோசனைகளை தெரிவிப்பது தொடர்பாக மார்ச் 18ம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி  அர்ச்சனா பட்நாயக் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள அங்கீகரிக்கப்பட்ட தேசியக் கட்சிகளான காங்கிரஸ், சி.பி.எம், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட கட்சிகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சிகளான தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 12 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 



  • Mar 12, 2025 15:57 IST

    மும்மொழிக் கொள்கையில் தி.மு.க இரட்டை வேடம் - அன்புமணி விமர்சனம்

    பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ்: “மும்மொழிக் கொள்கையில் தி.மு.க இரட்டை வேடம் போடுகிறது. தேசிய கல்விக் கொள்கையின் பல அம்சங்களை தமிழக அரசு செயல்படுத்தி இருக்கிறது. மாநில கல்விக் கொள்கையை செயபடுத் எந்த நடவடிகையும் எடுக்காதது ஏன்?; அனைத்துப் பள்ளிகளிலும் தமிழைக் கட்டாயப் பாடமாக அறிவிக்க நடவடிக்கை தேவை.” என்று வலியுறுத்தியுள்ளார். 



  • Mar 12, 2025 15:50 IST

    பி.எம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மறுப்பு: தமிழ்நாடு அரசின் பக்கம்தான் நியாயம் - டாக்டர் ராமதாஸ்

    பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கருத்து: “பி.எம் ஸ்ரீ பள்ளிகளை ஏற்க மறுப்பதற்காக, தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு மறுப்பது நியாயமல்ல. இவ்விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் பக்கம் தான் நியாயம் உள்ளது” என்று கூறியுள்ளார்.



  • Mar 12, 2025 15:12 IST

    சென்னை தனியார் நிறுனத்தில் அமலாக்கத்துறை சோதனை 

    சென்னை - அசோக் நகரில் உள்ள ஹரிஹந்த் இந்தியா லிமிடெட் என்ற நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை செய்து வருகிறது. இதேபோல், வேப்பேரியில் உள்ள பைனான்சியர் மோகன் என்பவரது வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டுள்ளது. 

     



  • Mar 12, 2025 15:08 IST

    மியான்மர் சைபர் மோசடி மையங்களில் இருந்து 549 இந்தியர்கள் மீட்பு!

    மியான்மர் – தாய்லாந்து எல்லையில் அமைந்துள்ள சைபர் குற்ற மையங்களில் இருந்து விடுவிக்கப்பட்ட 549 இந்தியர்கள், 2 ராணுவ விமானங்கள் மூலம் மீட்கப்பட்டு இந்தியா அழைத்து வரப்பட்டனர். ஐ.டி துறையில் வேலைகள் வாங்கித் தருவதாக ‘ஏஜெண்டுகள்’ அளித்த பொய் வாக்குறுதிகளை நம்பி இந்தியர்கள் பலர் தாய்லாந்து, மியான்மரில் சிக்கித் தவித்துள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில், கம்போடியா, லாவோஸ், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் இதுபோன்ற மோசடி கும்பல்களால் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் சிக்கியுள்ளனர்.



  • Mar 12, 2025 15:05 IST

    "இருவரும் எங்களுக்கு ஆதரவு" - அமைச்சர் பொன்முடி பேட்டி 

    தொகுதி மறுவரையறை குறித்த தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, தமிழ்நாடு அரசின் சார்பில் கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமாருக்கு அழைப்புவிடுத்த அமைச்சர் பொன்முடி, "இருவரும் எங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்கள். கூட்டத்திற்கு கண்டிப்பாக வருவார்கள்" என்று கூறியுள்ளார். 



  • Mar 12, 2025 14:48 IST

    திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன் - ஸ்டாலின் பதிவு  

    தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராகச் செயல்படும் மத்திய அரசுக்கு எதிராக தமிழகம் முழுவதும் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், "திருவள்ளூரில் உங்களைச் சந்திக்கிறேன்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Mar 12, 2025 14:45 IST

    நேற்று ஏர்டெல் - இன்று ஜியோ 

     

    ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்த‌து ஜியோ. ஸ்டார்லிங்குடன் இணைந்து அதிவேக இணைய சேவையை இந்தியாவுக்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளது.



  • Mar 12, 2025 13:56 IST

    இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

    தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கோவை நீலகிரி, ஈரோடு, திருப்பூர் , திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

     



  • Mar 12, 2025 13:36 IST

    மார்ச் 18-ல் அனைத்துக்கட்சி கூட்டம் - தமிழக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

    சென்னையில் மார்ச் 18-ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்க அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில கட்சிகளுக்கு தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார்.



  • Mar 12, 2025 13:25 IST

    வீடு திரும்பிய ஜெகதீப் தன்கர்

    குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். உடல்நலக்குறைவு காரணமாக குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



  • Mar 12, 2025 12:47 IST

    பச்சையப்பன் கல்லூரி - காவல்துறை கடிதம்

    கொரட்டூர் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்ட சம்பவம். மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பச்சையப்பன் கல்லூரிக்கு காவல்துறை கடிதம்



  • Mar 12, 2025 12:45 IST

    “அமைச்சர்களின் பேரன்கள் எங்கு படிக்கின்றனர்?”

    அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் மகன் எங்கு படிக்கிறார்; அமைச்சர்களின் மகன், பேரக் குழந்தைகள் மும்மொழிதான் படிக்கின்றனர்; அவர்கள் அறிவில்லாதவர்களா? அறிவு உடையவர்கள் இதை ஏற்றுக் கொள்வார்களா?” என அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பதில்



  • Mar 12, 2025 12:35 IST

    குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் டிஸ்சார்ஜ்

    டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் வீடு திரும்பினர். நெஞ்சு வலி காரணமாக கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார் ஜெகதீப் தன்கர்; உடல்நலம் தேறிய நிலையில் வீடு திரும்பிய ஜெகதீப் தன்கர் வீட்டில் சில நாட்கள் ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுரை



  • Mar 12, 2025 12:26 IST

    மார்ச் 19இல் ஆட்டோ ஓட்டுநர்கள் வேலைநிறுத்தம்

    சென்னையில் மார்ச் 19 ஆம் தேதி ஆட்டோ தொழிற்சங்கம் வேலைநிறுத்தம் அறிவிப்பு. பைக் டேக்ஸியை தடை செய்ய வலியுறுத்தி வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது; ஆன்லைன் அபராதத்தில் இருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு தரவும் கோரிக்கை. 



  • Mar 12, 2025 12:24 IST

    ஆன்லைன் விளையாட்டுகள் - அரசு பதிலளிக்க அவகாசம்

    ஆன்லைன் விளையாட்டுக்களுக்கான நேரக் கட்டுப்பாடு தொடர்பான வழக்கில் பதிலளிக்க அரசுக்கு அவகாசம். மத்திய - மாநில அரசுகள் பதிலளிக்க மார்ச் 21 வரை அவகாசம் வழங்கிய சென்னை உயர் நீதிமன்றம்; ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி 14இல் விதிகளை வகுத்த தமிழ்நாடு அரசு; தமிழ்நாடு அரசின் விதிகளுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உத்தரவு. 



  • Mar 12, 2025 12:13 IST

    புதுச்சேரியில் மகளிர் உதவித்தொகை ரூ.2,500ஆக உயர்வு

    புதுச்சேரியில் குடும்ப தலைவிக்கு மாதம்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை ரூ.1000ல் இருந்து ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும். 30 வயதை கடந்த திருமணமாகாத/ கணவரை இழந்த, வேலையற்ற ஆதிதிராவிட பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.3,000 உதவித்தொகை - புதுச்சேரி அரசின் பட்ஜெட்டில் அறிவிப்பு. 



  • Mar 12, 2025 12:00 IST

    குழந்தை தவறி விழுந்த இடத்தில் தடுப்புகள் அமைப்பு

    சென்னை துரைப்பாக்கத்தில் மழைநீர் வடிகால்வாயில் தவறி விழுந்த 3 வயது குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி. குழந்தை விழுந்த மழைநீர் வடிகால்வாயை சுற்றி தடுப்புகள் அமைப்பு



  • Mar 12, 2025 11:41 IST

    ரயிலோடு பயணிகளை கடத்திய 27 பேர் சுட்டுக் கொலை

    பாகிஸ்தானில் ரயிலுடன் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட 400 பேரில் 155 பேரை மீட்ட பாதுகாப்புப் படை. பிணைக் கைதிகளாக பிடித்த பலுசிஸ்தான் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த 27 பேர் சுட்டுக் கொலை; மேலும் பிணைக் கைதிகளாக உள்ள 200க்கும் மேற்பட்டோரை மீட்கும் பணி தீவிரம்; பிணைக் கைதிகளை சுற்றி தற்கொலைப் படையினர் இருப்பதால் மீட்புப் பணி தாமதம்



  • Mar 12, 2025 11:40 IST

    சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் பேச்சு

    “இந்தியாவிலேயே கட்சித் தலைவராக பொறுப்பு ஏற்ற பின் நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஒரே தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான்” என்று சென்னையில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் புகழாரம்



  • Mar 12, 2025 11:29 IST

    தென் மாநில அனைத்துக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்க, ஆந்திர மாநிலக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு!

    சென்னையில் வருகிற மார்ச் 22 ஆம் தேதியன்று தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது.  இந்தக் கூட்டத்தில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் கலந்துகொள்ள வேண்டி, தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்புவிடுக்க அமைச்சர் பொன்முடி, அப்துல்லா எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு இன்று மதியம் 12.30 மணிக்கு பெங்களூரு செல்கிறது. விஜயவாடா செல்லும் தமிழ்நாடு அரசு இதேபோல், தொகுதி மறுவரையறை குறித்த கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள கட்சிகளை கலந்துகொள்ள வேண்டி தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பதற்காக, அமைச்சர் எ.வ.வேலு, வில்சன் எம்.பி. ஆகியோர் அடங்கிய குழு இன்று விஜயவாடா செல்கின்றனர்.



  • Mar 12, 2025 11:09 IST

    சென்னையில் மின்சார வாகனங்களுக்கு சார்ஜிங் நிலையம்

    தமிழ்நாட்டில் மட்டும் 1,31,482 மின்சார வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மின்சார வாகனங்களில் கணிசமானவை தலைநகர் சென்னையில் தான் பயன்பாட்டில் உள்ளன. ஒவ்வொரு மண்டலத்திலும் இடத்தை தேர்வு செய்யும் பணிகளை தொடங்கியுள்ளது  மாநாகராட்சி நிர்வாகம். சார்ஜிங் நிலையங்களின் எண்ணிக்கை விரைவில் இறுதி செய்யப்படும். 89 பார்க்கிங் இடங்களில் பெரும்பாலானவற்றில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்க திட்டம். தமிழக மின் வாரியம், 100 துணை மின் நிலையங்களின் வளாகங்களில் சார்ஜிங் மையங்கள் வைக்கப்பட்டுள்ளன.



  • Mar 12, 2025 11:07 IST

    "உடையாததை ஒட்ட வைக்க பார்க்காதீர்"

    “தமிழ்நாட்டின் கல்விமுறை சிறப்பாக உள்ளது, தேசிய கல்விக் கொள்கை சீர்குலைக்கிறது; தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநில கல்வித் திட்டத்தில் பயில்கிறார்கள். 1,635 பள்ளிகள் வெறும் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே சிபிஎஸ்இ பள்ளிகளில் பயில்கின்றனர்; மூன்றாவது மொழியை படிக்க அவசியம் இருந்தால் ஏன் இவ்வளவு பேர் மாநில பாடத்திட்டத்தை தேர்வு செய்துள்ளனர்? தமிழ் என்பது மொழி மட்டுமல்ல, அது எங்களின் ஆணி வேரோடு ஒன்றாக கலந்ததும் கூட" என்று அமைச்சர் அன்பில் மகேஸ் எக்ஸ் தளத்தில் பதிவு



  • Mar 12, 2025 10:25 IST

    புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ.13,600 கோடி

    புதுச்சேரி சட்டபேரவையில் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த முதலமைச்சர் ரங்கசாமி, புதுச்சேரி மாநிலத்தின் 2025-2026ம் நிதி ஆண்டிற்கான பட்ஜெட் தொகை ரூ.13,600 கோடி என்று வெளியிட்டுள்ளதார்.



  • Mar 12, 2025 09:40 IST

    துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் கைது

    ஆந்திர மாநிலம் சித்தூரில் வியாபாரி வீட்டிற்குள் துப்பாக்கியுடன் புகுந்த கொள்ளையர்கள் குறித்து கிடைத்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீஸார் கொள்ளையர்களை மடக்கிப் பிடித்தனர். அவர்களிடம் இருந்து  2 துப்பாக்கிகள், குண்டுகள் ஆகியவற்றை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Mar 12, 2025 09:31 IST

    மத்திய அரசை நேர்மையாக எதிர்க்க கூடிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின்: நீதியரசர் சந்துரு புகழாரம்

    இன்றைக்கு பல முதல்வர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசின், மக்கள் விரோ கொள்கைகளை தொடர்ந்து, திடமாக நேர்மையாக எதிர்க்க கூடிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் என்று முன்னாள் நீதியரசர் கே.சந்துரு புகழாரம் சூட்டியுள்ளார்.



  • Mar 12, 2025 08:46 IST

    சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதல் டோக்கன் ஒதுக்கீடு

    சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களில் கூடுதலாக ஒரு சர்பதிவாளர் அலுவலகங்களில், 100 டோக்கன்களுக்கு பதிலாக இன்று 150 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  இரு சார் பதிவாளர்கள் இருக்கும் அலுவலகங்களில் 200 டோக்கன்களுக்கு பதிலாக 300 டோக்கன்கள் இன்று வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.



  • Mar 12, 2025 08:34 IST

    அவர்கள் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள்: சீமான் அண்ணாமலை குறித்து சேகர் பாபு கருத்து

    அண்ணாமலை மற்றும் சீமானின் நேற்றைய சந்திப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, அவர்கள் நிழலோடு யுத்தம் செய்கிறார்கள். நாங்கள் நிஜத்தோடு யுத்தம் செய்கிறோம் என்று கூறியுள்ளார்.



  • Mar 12, 2025 07:59 IST

    ரஷ்யாவுடன் பேசி விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவர, உக்ரைன் அதிபர் கோரிக்கை

    ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போரை 30 நாட்களுக்குள் முடிக்க உக்ரைன் சம்மதம் தெரிவித்துள்ளது, சவுதி அரேபியாவில் நடைபெற்ற அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில், தற்காலிக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவுடன் பேசி விரைவில் போரை முடிவுக்கு கொண்டுவர, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோரிக்கை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.



  • Mar 12, 2025 07:35 IST

    கள்ளக்குறிச்சியில் அதிகபட்சமாக 12 செ.மீ மழை பதிவு

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 12 செ.மீ மழை பெய்துள்ளது. ராமநாதபுரத்தில் 8 செ.மீ, திருவாரூரில் 7 செ.மீ, குன்னூர் மற்றும் நாகையில் 6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது,



  • Mar 12, 2025 07:16 IST

    மத்திய அரசுக்கு எதிராக தி.மு.க கண்டன பொதுக்கூட்டம்: திருவள்ளூரில் ஸ்டாலின் பங்கேற்பு

    தொகுதி மறுசீரமைப்பு மற்றும் இந்தி திணிப்பை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. சார்பில் இன்று கண்டன பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. திருவள்ளூரில் மு.க.ஸ்டாலினும், வேலூர் குடியாத்தத்தில், அமைச்சர் துரைமுருகனும் பங்கேற்க உள்ளனர். 



Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: