Chennai News Highlights: ஸ்டாலின் இன்று ராமநாதபுரம் பயணம்!

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

Tamil Nadu Latest News Update: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Stalin

Today Latest News Update: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.100.80 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 92.39 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது. 

Advertisment

19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை ரூ.16.50 உயர்ந்து, ரூ.1,754.50 -க்கும், 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டர் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.868.50-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் நிலவரம்: 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட புழல் ஏரியில் நீர்இருப்பு 2,924 மில்லியன் கனஅடியாக உள்ளது. 1,081 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட சோழவரம் ஏரியில் நீர்இருப்பு 181 மில்லியன் கனஅடியாக உள்ளது. 500 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட கண்ணன்கோட்டை - தேர்வாய்கண்டிகை ஏரியில் நீர்இருப்பு 436 மில்லியன் கனஅடியாக உள்ளது. 

  • Oct 01, 2025 22:56 IST

    திருவண்ணாமலையில் பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் பணிநீக்கம் - எஸ்.பி உத்தரவு

    திருவண்னாமலையில் இளம்பெண் பாலியல் வன்க்கொடுமை செய்த வழக்கில் கைதான காவலர்கள் சுரேஷ் ராஜ், சுந்தர் ஆகிய இருவரையும் பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். 



  • Oct 01, 2025 21:15 IST

    மாநிலங்களுக்கான வரிப்பகிர்வு நிதியை விடுவித்தது மத்திய அரசு - தமிழ்நாட்டுக்கு ரூ.4144 கோடி விடுவிப்பு

    மாநிலங்களுக்கு அதிகபட்சமாக உ.பி.க்கு ரூ.18,227 கோடியும், பீகாருக்கு ரூ.10,219 கோடியும் மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது.

    மாநில அரசுகளுக்கான மாதாந்திர வரிப் பகிர்வு நிதியை மத்திய நிதியமைச்சகம் விடுவித்துள்ளது. இதன்படி, தமிழக அரசுக்கு ரூ.4,144 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

    உத்தரப் பிரதேசம் (உ.பி.) மாநிலத்திற்கு அதிகபட்சமாக ரூ.18,227 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலத்திற்கு ரூ.10,219 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேசம் (ம.பி.) மாநிலத்திற்கு ரூ.7,676 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்திற்கு ரூ.6,418 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.



  • Advertisment
    Advertisements
  • Oct 01, 2025 20:32 IST

    குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா: நாளை சூரசம்ஹாரம்

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய நிலையில், 9-வது நாளான இன்று பக்தர்கள் கடவுள் வேடங்கள் அணிந்து காணிக்கை பிரித்து வருகின்றனர். தசராவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், நாளை (02.10.2025) நள்ளிரவு குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு நடைபெற உள்ளது.



  • Oct 01, 2025 20:29 IST

    ரூ.4,645 கோடி செலவில் 9 மாநிலங்களில் மறுகட்டமைப்பு திட்டங்கள்: அமித்ஷா தலைமையில் உயர்மட்டக் குழு ஒப்புதல்

    9 மாநிலங்களில் ரூ.4,645 கோடி செலவில் மீட்பு, மறுகட்டமைப்பு திட்டங்களை மேற்கொள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இதனால், "ஆந்திரா, கேரளா, உத்தரப்பிரதேசம், அசாம், ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட 9 மாநிலங்கள் பயனடையும்" என்றும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • Oct 01, 2025 20:26 IST

    சோழவந்தான் பேரூராட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க - தி.மு.க கவுன்சிலர்கள் இடையே கைகலப்பு

    சோழவந்தான் பேரூராட்சிக் கூட்டத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க கவுன்சிலர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது; பெண் கவுன்சிலர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டில், திமுக கவுன்சிலரின் கணவருக்கும் அதிமுக கவுன்சிலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.



  • Oct 01, 2025 20:03 IST

    எஸ்சி மக்களுக்கு எதிராக குற்றங்கள் அதிகரிப்பு: இது தான் ஓரணியில் தமிழ்நாடா? - நயினார் நாகேந்திரன் கேள்வி

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு என்று கேட்டு பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். 

    “தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி உண்மையில் எது ஓரணியில் தமிழ்நாடு?
     
    2021ல் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்றபோது 6,064 ஆக இருந்த குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 2023-இல் 15% அதிகரித்துள்ளது என NCRB அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது - இது தான் ஓரணியில் தமிழ்நாடா? போலி சமூக நீதி பேசும் தி.மு.க ஆட்சியில் 2021 உடன் ஒப்பிடும்போது 2023ல் பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள் 39% அதிகரித்துள்ளன - இது தான் ஓரணியில் தமிழ்நாடா? கருத்துச் சுதந்திரத்தை முடக்கும் தி.மு.க ஆட்சியில், அரியணை ஏறிய மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன - இது தான் ஓரணியில் தமிழ்நாடா? சகட்டுமேனிக்கு சட்டம் ஒழுங்கு சீரழியும் காட்டாட்சியை நடத்தி மக்களின் பாதுகாப்பை நாசமாக்கிவிட்டு நாடு போற்றும் நல்லாட்சி இது என்று நாற்திசையிலும் நாடகமாடுவதற்கு தி.மு.க அரசு வெட்கப்பட வேண்டும்!” என்று நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Oct 01, 2025 19:40 IST

    விஜய்க்கு நெருக்கமான த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு திடீர் பயணம்

    விஜய்க்கு நெருக்கமான த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் விவகாரத்தில் சர்ச்சைப் பதிவு தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி செல்கிறார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.



  • Oct 01, 2025 19:34 IST

    மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு 'காந்தியடிகள் காவலர் விருது அறிவிப்பு

    மதுவிலக்கு அமலாக்கப் பணியில் சிறப்பாக செயல்பட்ட 5 காவலர்களுக்கு 'காந்தியடிகள் காவலர் விருது' அறிவிப்பு
    விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சேலம் மாவட்ட அதிகாரிகளுக்கு 2026 குடியரசு தினத்தன்று விருது வழங்கப்பட உள்ளது.

    மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் (Prohibition Enforcement Wing - PEW) சிறப்பாகப் பணியாற்றி, கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள் கடத்தலைத் தடுத்த ஐந்து காவல் அதிகாரிகளுக்கு 'காந்தியடிகள் காவலர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது.

    மதுவிலக்கு அமலாக்கப் பணியில் மிகச் சிறப்பாகப் பணியாற்றிய ஐந்து காவல் அதிகாரிகளுக்கு, 2026 ஆம் ஆண்டு குடியரசு தினத்தன்று இந்த விருதுகள் வழங்கப்படும். விருது பெறும் ஒவ்வொரு காவலருக்கும் ஒரு தங்கப் பதக்கமும் (8 கிராம்) ரூ.10,000 ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

     



  • Oct 01, 2025 18:49 IST

    தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீசார் சம்மன்

    த.வெ.க பரப்புரை பேருந்து கேமராவில் பதிவான காட்சிகளை ஒப்படைக்கக் கோரி அக்கட்சி தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனாவுக்கு போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. இதேபோல் தவெக துணைப்பொதுச் செயலாளர் நிர்மல் குமாருக்கும் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.



  • Oct 01, 2025 18:48 IST

    "இதுதான் ஓரணியில் தமிழ்நாடா?" - தமிழக பா.ஜ.க கேள்வி

    தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில், தமிழக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தி.மு.க. ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, "இது தான் ஓரணியில் தமிழ்நாடா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: 2021-ல் இருந்து 2023-க்குள் இந்தக் குற்றங்கள் 15% அதிகரித்துள்ளன. பட்டியலின மக்களுக்கு எதிரான குற்றங்கள்: 2021 உடன் ஒப்பிடும்போது 2023-ல் 39% அதிகரித்துள்ளன. சைபர் குற்றங்கள்: தி.மு.க. ஆட்சிக்கு வந்த மூன்றாண்டுகளில் சைபர் குற்றங்கள் 283% அதிகரித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சீரழிந்துள்ள இந்தக் "காட்டாட்சி" குறித்து திமுக அரசு வெட்கப்பட வேண்டும் என்றும், மக்களின் பாதுகாப்பை நாசமாக்கிவிட்டு நல்லாட்சி என நாடகமாடுவதாகவும் நயினார் நாகேந்திரன் கடுமையாக விமர்சித்துள்ளார்.



  • Oct 01, 2025 18:28 IST

    செப்டம்பரில் ரூ.1.89 லட்சம் கோடி ஜி.எஸ்.டி. வருவாய்

    செப்டம்பரில் சரக்கு மற்றும் சேவை வரியால் ரூ.1.89 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி குறைக்கப்பட்டதால் விற்பனை அதிகரித்ததன் காரணமாக வரி வசூல் அதிகரித்ததாக அரசு விளக்கமளித்துள்ளது. 



  • Oct 01, 2025 18:03 IST

    தனுஷின் “தேரே இஷ்க் மெய்ன்” டீசர் வெளியீடு

    தனுஷின் ‘தேரே இஷ்க் மெய்ன்’ டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். காதல், ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவாகும் ‘தேரே இஷ்க் மெய்ன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டெல்லியில் துவங்கியது. ஆனந்த் எல் ராய் 'ராஞ்சனா' மற்றும் 'அட்ராங்கி ரே' போன்ற படங்களை இயக்கிய பிரபல பாலிவுட் இயக்குனர். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிகை கிரித்தி சனோன் நடித்துள்ளார்.



  • Oct 01, 2025 17:52 IST

    தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில் 1ம் எண் கூண்டு ஏற்றம்

    வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் தமிழ்நாட்டின் 9 துறைமுகங்களில்1ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்க துறைமுகங்களில் 3ம் எண் புயல் எச்சரிக்கைக் கூட்டு ஏற்றப்பட்டுள்ளது.



  • Oct 01, 2025 17:50 IST

    "தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகள் பின்னோக்கிய தமிழகம்"

    தமிழகத்தில், பட்டியல் சமூக மக்கள், முதியவர்கள், குழந்தைகள் ஆகியோருக்கு எதிரான குற்றங்கள் மிகவும் அதிகரித்திருப்பதாக, NCRB அறிக்கை தெரிவித்துள்ளது. குறிப்பாக, கடந்த 2023-ம் ஆண்டில் மட்டும், 201 முதியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது, நாட்டிலேயே மிக அதிகம். மேலும், வயது முதியவர்களுக்கு எதிராக 2,104 குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, நாட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது. 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தமிழகம் 50 ஆண்டுகள் பின்னோக்கிப் போய்விட்டது என்பதுதான் உண்மை நிலை. ஆடிக் கொள்ளுங்கள் இன்னும் 6 மாத காலம். உங்கள் அராஜகத்திற்குத் தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் என்று தமிழக பா.ஜ.க முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்து உள்ளார்.



  • Oct 01, 2025 17:17 IST

    ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது

    மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்தது. விசாகப்பட்டினத்திற்கு 400 கிமீ கிழக்கு தென் கிழக்கிலும், ஒடிசாவின் கோபால்பூருக்கு 420 கிமீ தெற்கு தென் கிழக்கிலும், பாரதீப்பிற்கு 500 கிமீ தெற்கிலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • Oct 01, 2025 17:08 IST

    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: மோடி உருக்கமான பதிவு

    பிலிப்பைன்ஸில் நேற்றிரவு அடுத்தடுத்து ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்கள் மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலி 69 ஆக உயர்ந்துள்ளது. கட்டடங்கள் தரைமட்டமானதில் 150க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிலிப்பைன்சில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் சேதம் குறித்து அறிந்து மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுடன் உள்ளன. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன். இந்த கடினமான நேரத்தில் இந்தியா பிலிப்பைன்சுடன் ஒற்றுமையாக நிற்கிறது என்று பிரதமர் மோடி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Oct 01, 2025 16:57 IST

    தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் ரூ.720 உயர்வு

    தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.240 உயர்ந்த நிலையில் தற்போது மேலும் ரூ.480 உயர்ந்துள்ளது. ஒரே நாளில் சவரன் ரூ.720 உயர்ந்து ரூ.87,600க்கு விற்பனை; கிராம் ரூ.90 உயர்ந்து ரூ.10,950க்கு விற்பனையாகிறது.



  • Oct 01, 2025 16:11 IST

    கரூர் துயரம்: சிபிஐ விசாரணை தேவை- நயினார் நாகேந்திரன்

    தி.மு.க. அரசின் நிர்வாகத் தோல்வியால் நிகழ்ந்த பேரிடரே இத்துயரம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெளிவாகத் தெரிகிறது; எனவே, ஒரு நபர் ஆணையத்தின் மீது எந்த நம்பிக்கையுமின்றி, சி.பி.ஐ. விசாரணை வேண்டுமெனக் கோருகிறோம் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.



  • Oct 01, 2025 16:09 IST

    பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும்: மோடி

    பிலிப்பைன்ஸ் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரச்சேதம் குறித்து மிகவும் வருத்தமடைந்தேன். காயமடைந்தோர் குணமடைய வேண்டுகிறேன்; கடினமான நேரத்தில் பிலிப்பைன்ஸ் உடன் இந்தியா துணை நிற்கும் 

    – பிரதமர் நரேந்திர மோடி



  • Oct 01, 2025 16:07 IST

    ஒழுக்கமில்லாத தொண்டர்கள் இருந்ததால்தான் கரூரில் இந்த நிலை: எஸ்.வி.சேகர்

    “அரசியலில் இன்னும் விஜய்க்கு பாலபாடம் கூட தெரியவில்லை. அவருடன் இருப்பவர்கள், அவரை வாழ வைக்க வந்தார்களா இல்லை ஸ்லீப்பர் செல்களா என விஜய்தான் சொல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் ஒன்றும் ரசிகர் மன்றத்தை கட்சியாக்கவில்லை. கட்டுப்பாடின்றி, ஒழுக்கமில்லாத தொண்டர்கள் இருந்ததால்தான் கரூரில் இந்த நிலை...” -

    காக்கா கழுகை குறிப்பிட்டு எஸ்.வி.சேகர் விமர்சனம்



  • Oct 01, 2025 15:29 IST

    முதிர்ச்சி இல்லாமல் பேசுகிறார் விஜய்: தமிமுன் அன்சாரி

    மூன்று நாட்களுக்குப் பிறகு சோகமான முகத்துடன் காணொளியில் பேசிய விஜய், ஏதோ முதலமைச்சர் அவரைப் பழிவாங்குவது போலவும், அதற்கு இவர் சவால் விடுவது போலப் பேசுவதும், தொண்டர்களைத் தூண்டி விடுவதும் அவரது முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது. தனது கையில் ரத்தம் வடிவதை அவர் உணர மறுக்கிறார் என்பதே அவரது பேச்சு உணர்த்துகிறது

    - மஜக தலைவர் தமிமுன் அன்சாரி



  • Oct 01, 2025 15:28 IST

    விஜய் விரைவில் கரூர் வருவார்: தாடி பாலாஜி

    கரூர் சம்பவம் விஜய்க்கு ஒரு புரிதலை ஏற்படுத்தி இருக்கும். விஜய் விரைவில் கரூர் வருவார். தவெக 2ம் கட்ட தலைவர்கள் அஜாக்கிரதை. அவர்களின் செயல்பாடுகள் அதிருப்தி அளிக்கிறது

    - தாடி பாலாஜி



  • Oct 01, 2025 15:26 IST

    கள்ளக்குறிச்சிக்கு ஏன் செல்லவில்லை? செந்தில் பாலாஜி

    “இதே பாஜக-வின் உண்மை கண்டறியும் குழு மணிப்பூருக்கோ, கும்பமேளாவிற்கோ, குஜராத் பாலம் இடிந்து விழுந்த இடத்திற்கோ செல்லவில்லை. ஆனால் கரூருக்கு மட்டும் வந்துள்ளார்கள். அவர்களிடம் பாதிக்கப்பட்டவர் கூட்டம் நடத்திய கட்சியை குறை சொல்லும்போது, மொழிபெயர்ப்பாளர் தவறாக அதை சொல்கிறார். கரூரில் சம்பவத்திற்கும் துணை முதல்வர் நேரடியாக சென்று ஆறுதல் சொன்னார்” - கரூர் வந்த பாஜக குழு குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி



  • Oct 01, 2025 15:22 IST

    அகவிலைப்படி 3% உயர்வு!

    மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 55%இல் இருந்து 58%ஆக 3% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அரசின் முடிவால் 1.15 கோடி மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர். 



  • Oct 01, 2025 15:19 IST

    2 வாரங்களுக்குத் தவெக கூட்டம் ஒத்திவைப்பு

    “விஜயின் அடுத்த இரண்டு வாரங்களுக்கான மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது. இந்த மக்கள் சந்திப்பு தொடர்பான புதிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதை விஜய் ஒப்புதலோடு தெரிவித்துக்கொள்கிறோம்” 

    - தவெக தலைமை



  • Oct 01, 2025 14:39 IST

    விஜயிடம் கேள்விகளை கேளுங்கள் - செந்தில் பாலாஜி

    கடைசிநேரத்தில்கரூருக்குகூட்டத்தைமாற்றியதுஏன்? தாமதமாகவந்ததுஏன்எனவிஜயிடம்கேளுங்கள். காவல்துறைக்குவிஜய்நன்றிசொன்னாரே; அப்படிஎனில்காவல்துறைசரியாகசெயல்பட்டிருக்கிறது. இடங்கள்ஒதுக்குவதில்பாரப்ட்சம்எனஅரசியல்கட்சிகள்சொல்வதில்உண்மையில்லைஎனமுன்னாள்அமைச்சர்செந்தில்பாலாஜிகூறினார்.

     



  • Oct 01, 2025 13:54 IST

    ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? - செந்தில் பாலாஜி

    ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? நாமக்கல்லில் இருந்து விஜய் வரும்போதே 2 ஆம்புலன்ஸ்களும் உடன் வந்துள்ளன; 5 ஆம்புலன்ஸ் வாகனங்களை கரூரில் ஏற்பாடு செய்துள்ளார்கள் அசம்பாவிதத்திற்கு பிறகே மற்ற ஆம்புலன்ஸ்கள் சென்றன என்று  செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.



  • Oct 01, 2025 13:52 IST

    10 ரூபாய் பாட்டில் பாட்டு - செந்தில்பாலாஜி கேள்வி

    பாட்டு பாடிய விஜய்க்கு என்ன நடக்கிறது என்பது தெரியுமா? 10 நிமிடம் பேசி இவ்வளவு பெரிய இழப்பை ஏற்படுத்திவிட்டார். டாஸ்மாக் நிர்வாகத்தில் என்ன நடக்கிறது என்பது விஜய்க்கு தெரியுமா? என்று விஜய்க்கு செந்தில்பாலாஜி சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார்.



  • Oct 01, 2025 13:04 IST

    ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீஸ் - கைது செய்யப்படுகிறாரா?

    த.வெ.க நிர்வாகி ஆதவ் அர்ஜுனா வீட்டில் போலீஸ் குவிந்துள்ள நிலையில் அவர் கைது செய்யப்படுகிறாரா என்ற கேள்வி வலுத்து வருகிறது.



  • Oct 01, 2025 12:36 IST

    கரூர் சம்பவத்தை அரசியலாக பார்க்கவில்லை - செந்தில் பாலாஜி பேட்டி

    கரூர் சம்பவத்தை அரசியலாக நான் பார்க்கவில்லை. யார் மீது தவறு என்று பேசாமல் இனிமேல் இதுபோன்று நடக்காமல் இருக்க முயற்சி எடுக்க வேண்டும்.



  • Oct 01, 2025 11:50 IST

    சரஸ்வதி பூஜை - பங்குச்சந்தைகளில் ஏற்றம்.!

    சரஸ்வதி பூஜை நாளில் இந்திய பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகம் செய்யப்படுகிறது. மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கும் அதிகமாக வர்த்தகம். தேசிய பங்கு சந்தையும் ஏற்றத்துடன் காணப்படுகிறது.



  • Oct 01, 2025 10:50 IST

    "சாலைகளில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம்" - போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள்

    சாலைகளில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம். ஆயுதபூஜையை ஒட்டி சாலைகளில் பூசணிக்காய் உடைக்க வேண்டாம். சாலையில் பூசணிக்காய் உடைப்பது வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தானது என்று சென்னை போக்குவரத்து காவல்துறை வேண்டுகோள் வைத்துள்ளது. 



  • Oct 01, 2025 10:42 IST

    ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ரிசர்வ் வங்கி

    வங்கிகளுக்கான குறுகிய காலக் கடன் வட்டியான ரெப்போவில் மாற்றமில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார். 



  • Oct 01, 2025 10:32 IST

    சிவாஜி சிலைக்கு முதல்வர் மரியாதை

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 98வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் உள்ள சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.



  • Oct 01, 2025 10:22 IST

    "உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை" - அமைச்சர் சிவசங்கர்

    “எண்ணூர் அனல்மின் நிலையத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப நடவடிக்கை. விமானம் மூலம் உடல்களை சொந்த ஊர்களுக்கு அனுப்ப BHEL நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது; விபத்து நடந்தது குறித்து எண்ணூர் அனல்மின் நிலையத்தில் ஆய்வு செய்ய உள்ளோம்" என்று மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் சென்னையில் பேட்டியளித்துள்ளார். 



  • Oct 01, 2025 10:19 IST

    தவெக பொதுச்செயலாளர் ஆனந்தை கைது செய்ய தனிப்படை

    தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமாரை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய மண்டல காவல்துறை தலைவர் ஜோஷி நிர்மல் குமார் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள். கரூரில் விஜயின் பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில் ஆனந்த் உள்ளிட்ட 5 பேர் மீது வழக்கு பதிவாகியுள்ளது. 



  • Oct 01, 2025 10:02 IST

    ரூ.87,000-த்தை கடந்தது தங்கம் விலை

    சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.87,120க்கும் கிராம் ரூ.10,890க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 



  • Oct 01, 2025 09:31 IST

    9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது - எடப்பாடி எக்ஸ் தள பதிவு

    “எண்ணூர் அனல்மின் நிலையத்தில் 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தது வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு ஆறுதல்கள்; படுகாயமடைந்தவர்கள் பூரண நலம்பெற இறைவனை வேண்டுகிறேன் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 



  • Oct 01, 2025 09:23 IST

    மாணவர்கள் பகுத்தறிவோடு செயல்பட வேண்டும் - இயக்குனர் வெற்றிமாறன்

    "நாம் யாரை பின்தொடர வேண்டும், எதற்காக பின்தொடர வேண்டும் என்பதை யோசிக்க வேண்டும். நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்ற பகுத்தறிவோடு செயல்பட வேண்டும்" என்று மாணவர்களுக்கு இயக்குனர் வெற்றிமாறன் அறிவுறுத்தியுள்ளார். 



  • Oct 01, 2025 09:09 IST

    காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது - வானிலை ஆய்வு மையம்

    வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஒடிசா-ஆந்திரா இடையே அக்.3ம் தேதி கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. 



  • Oct 01, 2025 08:54 IST

    திருப்பதி கோயிலில் தேரோட்டம் நடைபெறுகிறது

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடைபெறுகிறது. செப்.24 இல் தொடங்கிய பிரம்மோற்சவத்தில் மாட வீதிகளில் வலம் வந்து சாமி அருள்பாலித்தார்; 8ம் நாளான இன்று ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் மகாரதத்தில் மலையப்பசாமி வலம் வந்து அருள் பாலிப்பு. நாளை சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் திருப்பதி பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது



  • Oct 01, 2025 08:51 IST

    சென்னை எண்ணூர் விபத்து - ஒப்பந்ததாரர்கள் மீது வழக்கு பதிந்தது போலீஸ்!

    எண்ணூர் மின் உற்பத்தி நிலைய கட்டுமானத்தின் போது 9 பேர் உயிரிழந்தது தொடர்பாக ஒப்பந்ததாரர்கள் ரித்தீஷ் குப்தா, அனுப், சுமீத் மணிகண்டன் ஆகியோர் மீது காட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  



  • Oct 01, 2025 08:47 IST

    வேலைவாய்ப்பும், கல்வியுமே துயரத்துக்கு மருத்து - வைரமுத்து வேண்டுகோள்

    கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் வேலை வாய்ப்புக்கு வயதுடையவர்களையும்| கல்வி கற்கும் வாய்ப்புடையவர்களையும் அரசுக்கு நீங்கள் அறிக்கையில் குறித்து அறிவிக்க வேண்டும். வேலைவாய்ப்பும் கல்வியுமே அவர்களின் மாபெரும் துயரத்துக்கு மருந்தாக முடியும்; |இந்தப் பணியை நீங்கள் இப்போதே முடித்திருந்தால் அது சமூக தர்மமாகும் என்று கரூர் கூட்ட நெரிசல் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட தனி நபர் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசனுக்கு கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் 



  • Oct 01, 2025 08:44 IST

    கேரளாவில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் 3 தமிழர்கள் உயிரிழப்பு

    கேரள மாநிலம் இடுக்கி ஓட்டலில் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். முதலில் இறங்கிய ஜெயராமன் என்பவர் உள்ளே சிக்கிய |நிலையில், அவரை மீட்க தொட்டியில் இறங்கிய சுந்தரபாண்டியன், மைக்கேல் ஆகியோரும் மூச்சுத் திணறி உயிரிழந்தனர்.



  • Oct 01, 2025 08:40 IST

    ஆதார் அட்டை சேவை கட்டணம் இன்று முதல் உயர்வு

    ஆதாரில் பெயர், முகவரி மாற்றுவதற்கான சேவை கட்டணம் ரூ.50ல் இருந்து, ரூ.75 ஆக இன்று முதல் உயர்வு. பயோமெட்ரிக் மாற்றம் செய்வதற்கான கட்டணம் ரூ.100ல் இருந்து ரூ.125ஆக உயர்த்தப்பட்டுள்ளது



  • Oct 01, 2025 08:39 IST

    சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் - திருமாவளவன்

    கரூர் விவகாரத்தில் சங் பரிவார்களின் சதி வலையில் விஜய் சிக்கி உழல்கிறார்.  விஜயின் பேச்சு, அவரது அரசியல் நேர்மையைக் கேள்விக்குறியாக்கியுள்ளது; பாஜகவினரின் கருவிதான் விஜய் என்பதை அக்கட்சியின் உண்மையறியும் குழு உணர்த்துகிறது என்று வி.சி.க. தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். 



  • Oct 01, 2025 08:30 IST

    காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 



  • Oct 01, 2025 08:28 IST

    யூடியூபர் பெலிஸ்க்கு நிபந்தனை ஜாமின்

    கரூர் சம்பவம் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக கைதான யூடியூபர் பெலிக்ஸ் ஜெரால்டு நிபந்தனை ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். அக்.3ம் தேதி ஆஜராக சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 



  • Oct 01, 2025 08:27 IST

    மகளிர் உலகக்கோப்பை: இந்தியா வெற்றி

    2025 மகளிர் உலகக்கோப்பை தொடரின் முதல் போட்டியில் இலங்கையை 59 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா வெற்றி படைத்துள்ளது. முதலில் விளையாடிய இந்திய அணி 269 ரன்கள் அடித்த நிலையில், இலங்கை அணி 211 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி; அக்டோபர் 5-ம் தேதி நடக்கும் அடுத்த போட்டியில் பாகிஸ்தானுடன் மோதுகிறது இந்தியா



  • Oct 01, 2025 08:19 IST

    காசா அமைதி ஒப்பந்தம் - ஹமாஸ் அமைப்புக்கு 4 நாள் கெடு விதித்த டிரம்ப்

    காசா போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், 20 அம்சங்கள் கொண்ட திட்டத்தினை டிரம்ப் முன்வைத்துள்ளார். இதற்கு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சம்மதம் தெரிவித்து உள்ளதாக கூறப்படுகிறது. டிரம்புக்கு எகிப்து, ஜோர்டான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், துருக்கி, இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட 8 முஸ்லிம் நாடுகளும் ஆதரவாக நிற்கின்றன. இந்நிலையில், டிரம்ப் நேற்று கூறும்போது, இஸ்ரேல் மற்றும் அரபு நாடுகளின் தலைவர்கள் முன்பே 20 அம்ச திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்து விட்டனர் என்றார். எனினும், இந்த திட்டங்களை பற்றி ஹமாஸ் அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனவா? என்று கேட்கப்பட்டதற்கு, இல்லை என டிரம்ப் கூறினார்.

    ஹமாஸ் அமைப்பு அதனை ஏற்குமோ அல்லது இல்லையோ, இல்லையென்றால், வருத்தம் தரும் முடிவாக இருக்கும். இந்த திட்டத்திற்கு 3 அல்லது 4 நாட்களில் அவர்கள் பதிலளிக்க வேண்டும் என காலக்கெடுவும் விதித்துள்ளார். அல்லது நரகத்திற்கான விலையை அவர்கள் கொடுக்க வேண்டி இருக்கும் என எச்சரிக்கும் வகையில் பேசினார். காசா திட்டத்தின்படி, காசா முனை பகுதியில் உடனடி போர் நிறுத்தம், இஸ்ரேல் பணய கைதிகள் விடுவிப்பு, காசாவில் இருந்து இஸ்ரேல் படைகள் வாபஸ், ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை கீழே போட வேண்டும் உள்ளிட்ட விசயங்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.



Chennai Live News Tamilnadu Live News Udpate

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: