Chennai News Highlights: உக்ரைனுடன் பேசத் தயார் - ரஷ்ய அதிபர் மாளிகை அறிவிப்பு

Tamil Nadu news live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu news live updates: இன்றைய செய்திகள் அனைத்தையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Putin Asks Russian Citizens To Have Sex At Work During Breaks Why Tamil News

Today Latest Live News Update in Tamil 15 July 2025: பெட்ரோல், டீசல் விலை நிலவரம்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல் டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.80-க்கும், டீசல் 92.39 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு (Compressed Natural Gas) ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

பூமியில் கால் பதித்த சுபான்ஷு சுக்லா

சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் டிராகன் விண்கலத்தின் மூலம் பூமியில் கால் பதித்தனர். இதைத் தொடர்ந்து, அவர்களுக்கு உரிய மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள் நடத்தப்பட இருக்கின்றன.

இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்

  • Jul 15, 2025 20:51 IST

    உக்ரைனுடன் பேச தயார் என்று ரஷ்யா அதிபர் மாளிகை அறிவிப்பு

    போரை நிறுத்துவது குறித்து உக்ரைனுடன் பேச தயார் என்று கூறியுள்ளது ரஷ்யா அதிபர் மாளிகை. மேலும் அமெரிக்க அதிபர் ட்ரப்பின் 100 சதவீத வரி விதிப்பு என்பது மிகவும் தீவிரமானது. அதை பற்றி கருத்து கூற அவகாசம் தேவை என்றும் தெரிவித்துள்ளது. 



  • Jul 15, 2025 20:37 IST

    காக்கா திருடிய நகை - மீண்டும் கிடைத்த அதிசயம்

    3 ஆண்டுகளுக்கு முன்பு காக்கா தூக்கி சென்ற தங்க வளையல் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  மரம் ஏறும் தொழிலாளியான அன்வர் என்பவர் காகத்தின் கூட்டில் தங்க வளையலை கண்டெடுத்துள்ளார். இது குறித்து உள்ளூர் நூலகத்தில் அறிவிப்பு பலகை வைத்தார். அதனை கண்ட ஹரிதா என்ற பெண் வளையல் வாங்கிய பில்லையும் அதை அணிந்திருந்த போட்டோவையும் காட்டி வளையலை பெற்றுச் சென்றார்.



  • Advertisment
    Advertisements
  • Jul 15, 2025 20:07 IST

    உக்ரைன் பிரதமர் திடீர் ராஜினாமா

    ரஷ்யாவுடன் போர் நீடித்து வரும் நிலையில் உக்ரைன் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால் திடீர் ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் டெனிஸ் ஷிம்ஹால் வழங்கினார். பிரதமர் ராஜினாமாவை அடுத்து புதிய அமைச்சரவையில் பெரிய மாற்றங்கள் நிகழும் என கூறப்படுகிறது. புதிய பிரதமராக யூலியா ஸ்வைரிடென்கோவின் பெயரை உக்ரைன் அதிபர் பரிந்துரைத்துள்ளார்.



  • Jul 15, 2025 19:52 IST

    மாஸ்கோவை தாக்க தயார் – டிரம்பிடம் ஜெலன்ஸ்கி உறுதி

    நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணையை அமெரிக்கா தந்தால் மாஸ்கோவை தாக்கத் தயார் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரோமில் கடந்த வாரம் ஜெலன்ஸ்கியுடன் நடந்த சந்திப்பில் 14 ஆயுதப் பட்டியலை அமெரிக்க அதிகாரிகள் தந்தனர். ஜெலன்ஸ்கியை டிரம்ப் சந்தித்தபோது மாஸ்கோவை தாக்க முடியுமா? என கேட்டதாக தகவல் கசிந்துள்ளது. அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகள் தந்தால் மாஸ்கோ மீது வீசத் தயார் என்று ஜெலன்ஸ்கி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெலன்ஸ்கி, டிரம்ப் பேச்சு விவரங்களை அமெரிக்காவின் பைனான்ஷிய டைம்ஸ் வெளியிட்டுள்ளது.



  • Jul 15, 2025 19:44 IST

    ஆபத்தான உணவு பட்டியலில் சமோசா, ஜிலேபி? - மத்திய அரசு மறுப்பு

    சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. உடல் பருமனை குறைக்க, எண்ணெய், சர்க்கரை அளவு தொடர்பாக, எச்சரிக்கை வாசகம் வெளியிடவே திட்டமிட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளது. 



  • Jul 15, 2025 19:13 IST

    பதவியை ராஜினாமா செய்த உக்ரைன் பிரதமர்

    உக்ரைன் நாட்டின் பிரதமர் டெனிஸ் ஷிம்ஹால், தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்படி, தனது ராஜினாமா கடிதத்தை நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியிடம் அவர் கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 15, 2025 18:54 IST

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜூலை 31 ஆம் தேதி வரை www.tngasa.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 15, 2025 18:24 IST

    சமோசா, ஜிலேபி ஆகிய உணவுகள் குறித்து விளக்கம்

    சமோசா, ஜிலேபி போன்ற உணவுகளை, உயிருக்கு ஆபத்தானவை என எச்சரிக்கை கொடுக்கப்பட வேண்டிய பட்டியலில், மத்திய அரசு சேர்க்கப் போவதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது போன்ற ஒரு தகவலை சுகாதார அமைச்சகம் வெளியிடவில்லை என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.



  • Jul 15, 2025 18:10 IST

    ராமதாஸ் வீட்டில் ஒட்டுக் கேட்பு கருவி வைத்த நபரை கண்டுபிடிக்க கோரி புகார் மனு

    தைலாபுரத்தில் உள்ள பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இல்லத்தில் ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டதாக வெளியான தகவல் அரசியல் களத்தில் பேசுபொருளானது. இந்நிலையில், அந்தக் கருவியை அவரது வீட்டில் வைத்தது யாரென்று கண்டறிய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்து, அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார்.



  • Jul 15, 2025 17:54 IST

    த.வெ.க விருது வழங்கும் விழா குறித்து சர்ச்சை பேச்சு - வேல்முருகன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை

    த.வெ.க சார்பாக நடத்தப்பட்ட விருது வழங்கும் விழாவில் பங்கேற்றவர்கள் குறித்து சர்ச்சையாக பேசியதாக வேல்முருகன் மீது புகார் எழுந்தது. இந்நிலையில், அவர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு தேர்தல் ஆணையருக்கு, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் பரிந்துரைத்துள்ளது.



  • Jul 15, 2025 17:21 IST

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவழகன் காலமானார்

    அதிமுக முன்னாள் எம்எல்ஏ அறிவழகன் காலமானார். குளித்தலை காவேரி நகரில் உள்ள வீட்டில் மாரடைப்பு காரணமாக அறிவழகன் நேற்று உயிரிழந்தார். 



  • Jul 15, 2025 17:16 IST

    சைபர் கிரைம் போலீஸில் அன்பழகன் புகார்

    பாமக நிறுவனர் ராமதாஸ் வீட்டில் மேலும் ஒரு ஒட்டுக் கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளதா என்பதைச் சோதனை செய்து முழுமையாக விசாரிக்க, விழுப்புரம் மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் அக்கட்சியின் தலைமை நிலைய செயலாளர் அன்பழகன் புகார் அளித்துள்ளார். 



  • Jul 15, 2025 17:15 IST

    வருமான வரி செலுத்துவதில் போலி ஆவணங்கள் கொடுத்து மோசடி - 18 இடங்களில் சோதனை

    ஆடிட்டர் உதவியுடன் போலி ஆவணங்கள் சமர்ப்பித்து வரி செலுத்துதல் மற்றும் ரீபண்ட் மோசடி. தமிழ்நாட்டில் 18 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். 22,500 பேர் போலி ஆவணங்கள் மூலம் ரூ.550 கோடி வரை வரி முறைகேடு செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.120 கோடி அளவுக்கு மோசடியாக ரீபண்ட் பெற்றுள்ளனர். 



  • Jul 15, 2025 16:41 IST

    தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா புகார்

    தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெகவின் ஆதவ் அர்ஜுனா புகார் அளித்துள்ளார். கடந்த 10 ம் தேதி மர்ம நபர்கள் ஆட்டோ, காரில் ஆயுதங்களுடன் தன்னை நோட்டமிட்டதாக ஆதவ் அர்ஜுனா புகர் தெரிவித்துள்ளார்.



  • Jul 15, 2025 16:39 IST

    அரசு மரியாதையுடன் சரோஜா தேவி உடல் நல்லடக்கம்

    வயது மூப்பால் காலமான பழம்பெரும் நடிகை சரோஜா தேவி உடல் சென்னப்பட்டினம் பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சரோஜா தேவிக்கு கண்ணீருடன்  உறவினர்கள், மக்கள் பிரியா விடை அளித்தனர்.



  • Jul 15, 2025 16:36 IST

    தாம்பரம் பகுதியில் மழை பெய்து வருகிறது

    தாம்பரம், சானடோரியம், குரோம்பேட்டை, சேலையூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.



  • Jul 15, 2025 16:35 IST

    சரோஜா தேவி உடல் நல்லடக்கம்

    மறைந்த பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அவரது சொந்த கிராமத்தில், கர்நாடக அரசின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.



  • Jul 15, 2025 16:09 IST

    விஜய் தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தார்

    நான் விஜய்க்கு வாய்ப்பு தரவில்லை, விஜய் தான் எனக்கு லைஃப் கொடுத்தார். ஒன்று அல்ல இரண்டு லைஃப் கொடுத்தார் அதற்கு நன்றி என இயக்குநர் பேரரசு கூறியுள்ளார்.



  • Jul 15, 2025 16:08 IST

    பூமியில் கால் பதித்த சுபான்ஷு சுக்லா

    சிரித்தபடியே டிராகன் விண்கலத்தில் இருந்து சுபான்ஷு சுக்லா வெளியே வந்தார். அவருடன் சென்றிருந்த நால்வரும் தரையிருங்கினர்.



  • Jul 15, 2025 16:04 IST

    காற்றில் கலந்த கன்னடத்து பைங்கிளி... அரசு மரியாதையுடன் நல்லடக்கம்!

    பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. 



  • Jul 15, 2025 15:47 IST

    ராகுல் காந்திக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்

    பாரத் ஜோடோ யாத்திரையில் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கில், ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் பிணை வழங்கியது.



  • Jul 15, 2025 15:36 IST

    பாகிஸ்தானில் அரங்கேற்றப்பட்ட ராமாயணம்!

    மௌஜ் எனும் நாடகக்குழு கராச்சி கலை மன்றத்தில் ஏஐ பயன்பாடுகளுடன் கூடிய ராமாயணம் அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகம் மக்களிடையே வரவேற்பப் பெற்றிருக்கும் நிலையில் விமர்சகர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்திருக்கின்றனர்.  



  • Jul 15, 2025 15:14 IST

    ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்கும் ரவி மோகன்

    படத்தில் நடிப்பதற்காக பெற்ற ரூ.6 கோடி முன்பணத்தை திரும்ப தரக்கோரி நடிகர் ரவி மோகனுக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாபி டச் கோல்டு யுனிவர்சல் நிறுவனம். இதுகுறித்து பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், கால்ஷீட் கொடுத்தும் பணிகளை தொடங்காததால் நஷ்டஈடாக ரூ.10 கோடி வழங்க வேண்டும் என ரவி மோகன் தரப்பு வாதம் கூறியுள்ளனர். 



  • Jul 15, 2025 15:13 IST

    22 மணி நேர பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக கடலில் தரையிறங்கியது டிராகன் விண்கலம்

    மணி நேர பயணத்துக்குப் பின் வெற்றிகரமாக டிராகன் விண்கலம் கடலில் தரையிறங்கியது. சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேருடன் புறப்பட்ட டிராகன் கடலில் இறக்கப்பட்டது. கலிபோர்னியா மாகாணம் சாண்டியாகோ கடலில் டிராகன் விண்கலம் இறங்கியது. அமெரிக்காவின் நேரப்படி அதிகாலை 5.30 மணி அளவில் டிராகன் விண்கலம் கடலில் இறங்கியது



  • Jul 15, 2025 15:09 IST

    டிராகன் விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் புறப்பட்டது

    விண்கலம் 58 பவுண்டு சரக்குகள், 60க்கும் மேற்பட்ட சோதனை தரவுகளுடன் புறப்பட்டது. டிராகன் விண்கலத்தில் 22 மணி நேரம் 30 நிமிடங்கள் பயணித்து சற்றுநேரத்தில் பூமிக்கு வந்தடைகின்றனர். சுபான்ஷு சுக்லா, பெக்கி விட்சன், ஸ்லாவோஸ், திபோர் கபு ஆகியோருடன் விண்கலம் பூமியை நெருங்கியது. சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷசுக்லா ஆவார். 41 ஆண்டுகளுக்குப் பிற்கு விண்வெளி சென்ற 2வது இந்தியர் என்ற பெருமையையும் சுபான்ஷசுக்லா பெற்றார்.



  • Jul 15, 2025 14:46 IST

    மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆஜர்

    பாரத் ஜோடோ யாத்திரையில் இந்திய ராணுவம் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த‌தாக ராகுல் காந்தி மீது தொடரப்பட்ட வழக்கு. உத்தரப்பிரதேசம் லக்னோவில் உள்ள நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி ஆஜரானார். 



  • Jul 15, 2025 14:16 IST

    கேரள பெண்ணின் மரண தண்டனை ஒத்திவைப்பு - ஏமன் அரசு அறிவிப்பு

    ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படுவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அரசு மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை கைகொடுக்காத நிலையில் மத தலைவர்கள் மூலம் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்தியாவைச் சேர்ந்த மூத்த இஸ்லாமிய மத தலைவரான அபுபக்கர் முக்தியால் மூலம் நடந்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்.



  • Jul 15, 2025 13:32 IST

    சிதம்பரத்தின் சீர்திருத்தப் பிள்ளையாக விளங்குகிறார் திருமாவளவன் - ஸ்டாலின் புகழாரம்

    சிதம்பரத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமில்லாமல், சிதம்பரத்தின் சீர்திருத்தப் பிள்ளையாக விளங்குகிறார் திருமாவளவன் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.



  • Jul 15, 2025 13:14 IST

    டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்வுக்கான தேதி அறிவிப்பு

    டி.என்.பி.எஸ்.சி 645 பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல்நிலைத் தேர்வு செப்டம்பர்  28-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இன்று முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். சார் பதிவாளர் முதுநிலை வருவாய் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், வணிகவரித்துறை உதவியாளர் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வு நடைபெறும்.



  • Jul 15, 2025 13:11 IST

    ‘டெல்லி அணியின் காவி திட்டங்கள் நிறைவேறாது’ - ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்,  “உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் மூலம் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெற உள்ளது, `உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்கள் நடைபெறும் இடத்தில் மருத்துவ முகாம்களும் நடைபெறும், தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிருக்கு, மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்; மக்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவதே திமுக அரசின் நோக்கம். திராவிட மாடல் அரசின் அனைத்து திட்டங்களுக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள் உறுதுணையாக உள்ளனர்; தமிழகம் ஓரணியில் உள்ள நிலையில், டெல்லி அணியின் காவி திட்டங்கள் நிறைவேறாது” என்று கூறியுள்ளார்.



  • Jul 15, 2025 12:56 IST

    உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் கொடுங்கள்; நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் - ஸ்டாலின்

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “உங்களுடன் ஸ்டாலின் முகாமில் விண்ணப்பம் கொடுங்கள்; நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 15, 2025 12:19 IST

    செந்தில் பாலாஜி சகோதரர் வழக்கு: இ.டி. பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

    மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார் தாக்கல் செய்த வழக்கில், அமலாக்கத்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமெரிக்கா செல்ல அனுமதியளித்தால் பாஸ்போர்ட்டை இந்திய தூதரகத்தில் தாக்கல் செய்ய நேரிடும் என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.



  • Jul 15, 2025 12:14 IST

    சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழப்பு - இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல்

    சண்டைக் கலைஞர் மோகன் ராஜ் உயிரிழந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், “ஜூலை 13 ஆம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த “வேட்டுவம்” படப்பிடிப்பு தளத்தில்,  திறமையான சண்டைக் கலைஞரும்,  எங்களுடன் நீண்ட காலம்  பணியாற்றியவருமான  திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம். அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. 

    எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள்,  எங்களின் வேண்டுதல்கள்,   வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன. சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்; தவறாமல் பின்பற்றினோம். 

    ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ்  உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா  அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர்.

    செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர். எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். 

    இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.



  • Jul 15, 2025 12:10 IST

    சீமான் பாஸ்போர்ட் மாயம்; புதிய பாஸ்போர் வழங்க உத்தரவிடக் கோரி ஐகோர்ட்டில் மனு

    நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் பாஸ்போர்ட் மாயம்; புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



  • Jul 15, 2025 12:03 IST

    ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சரோஜா தேவி உடல்

    மல்லேஸ்வரம் வீட்டில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும் சரோஜா தேவி உடல்



  • Jul 15, 2025 11:49 IST

    கொடிக்கம்பம் வழக்கு - சிபிஎம் அவசர முறையீடு

    பொது இடங்களில் உள்ள கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர வழக்கை நாளை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல்

    நீதிமன்ற உத்தரவை மீறி வருவாய்த்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளதால், அவசர வழக்காக விசாரிக்க முறையீடு



  • Jul 15, 2025 11:26 IST

    மனு கொடுத்ததும் நிறைவேறிடுச்சு- பயனடைந்தவர்கள் பேட்டி

    Video: Sun News 



  • Jul 15, 2025 11:07 IST

    உயிரிழந்த சண்டைப் பயிற்சியாளர் மோகன்ராஜ் உடலுக்கு `வேட்டுவம்' படக்குழுவினர் அஞ்சலி

    Credit: Thanthi Tv



  • Jul 15, 2025 11:06 IST

    சரோஜா தேவி உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு

    தாயார் நினைவிடம் அருகே நல்லடக்கம் செய்யப்படும் சரோஜா தேவி உடல், கண்ணீர் மல்க பிரியா விடை அளிக்கும் சரோஜா தேவி உறவினர்கள் - சரோஜா தேவி உடலுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி 



  • Jul 15, 2025 10:48 IST

    குரூப் 2 தேர்வுக்கான தேதியை அறிவித்தது TNPSC

    645 காலிப் பணியிடக்களை நிரப்புவதற்கான குரூப் 2, 2ஏ முதல் நிலைத் தேர்வு செப். 28ஆம் தேதி நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. இன்று முதல் வரும் ஆக. 8 வரை விண்ணப்பிக்கலாம்.



  • Jul 15, 2025 10:44 IST

    இந்தியாவின் முதல் டெஸ்லா ஷோரூம்

    இந்தியாவில் எலான் மஸ்க்கின் டெஸ்லா கார் விற்பனைக்கான முதல் ஷோரூம். மும்பை குர்லா பகுதியில், ஆப்பிள் ஸ்டோர் அருகே 4,000 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது.



  • Jul 15, 2025 10:20 IST

    சிதம்பரத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை தொடங்கி வைத்தார் மு.க.ஸ்டாலின்

    Video: Sun News 



  • Jul 15, 2025 09:45 IST

    பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்: பிரதமர் மோடி மரியாதை

    பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தி பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவிட்டுள்ளார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்த அவர், சுதந்திரத்திற்குப் பிந்தைய நமது பயணத்தின் வளர்ச்சிக்குரிய ஆண்டுகளில் விலைமதிப்பற்ற தலைமைத்துவத்தை வழங்கினார். அவரது உயரிய சிந்தனைகளும், சமூக நீதி குறித்த உறுதிப்பாடும் நம் அனைவருக்கும் மகத்தான ஊக்கமளிக்கும் என பிரதமர் தெரிவித்திருந்தார்.



  • Jul 15, 2025 09:11 IST

    'காமராசர் மறக்கப்பட்டால் மழையே தண்ணீரை மறந்துவிட்டதாக பொருள்'

    தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராசரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. அரசியல் தலைவர்கள், காமராசரின் புகழை போற்றி வருகின்றனர். இந்நிலையில், காமராசரின் பிறந்தநாளையொட்டி, கவிஞர் வைரமுத்து தனது X தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;

    ''படிக்காத காமராசர், பள்ளிகள் செய்தார். வீடுகட்டாத காமராசர், அணை கட்டினார். புத்தகம் எழுதாத காமராசர், நூலகம் திறந்தார். கையில் காசுவைத்துக்கொள்ளாத காமராசர், ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார் என்று குறிப்பிட்டுள்ளார்.



  • Jul 15, 2025 09:09 IST

    மிக வயதான மாரத்தான் வீரர் பவுஜா சிங் சாலை விபத்தில் பலி

    பஞ்சாபைச் சேர்ந்த 114 வயது மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் பவுஜா சிங் ஜலந்தர்-பதான் கோட் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பியாஸ் கிராமத்தில் தனது வீட்டிற்கு வெளியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர், படுகாயங்களுடன் அவரை உடனடியாக மீட்டு தனியார் மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர். 'தலைப்பாகை சூறாவளி' என அழைக்கப்படும் பவுஜா சிங் மறைவு பல்வேறு தரப்பினரை சோகத்தில் ஆழ்த்தியது.



  • Jul 15, 2025 08:51 IST

    நாடாளுமன்றத்தில் கமல் ஹாசன் ஜூலை 25ல் பதவியேற்பு

    மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கடந்த  ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த  நிலையில் கமல்ஹாசன் வருகிற ஜூலை 25-ம் தேதி அன்று நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார்.



  • Jul 15, 2025 08:50 IST

    எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் - ஜுலை 21ல் மருத்துவக் கலந்தாய்வு

    எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜுலை 21ல் மருத்துவக் கலந்தாய்வு தொடங்கப்படுகிறது. முதல் சுற்று கலந்தாய்வு www.mcc.nic.in இணையதளத்தில் ஜூலை 21ல் ஆன்லைனில் தொடக்கம். நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்கள் ஜூலை 21 முதல் 28 வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். தரவரிசைப் பட்டியல் அடிப்படையில் ஜூலை 29, 30ல் மாணவர்களுக்கு கல்லூரிகளில் இடங்கள் ஒதுக்கப்படும். ஜூலை 31ல் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்பட்டு, ஆகஸ்ட் 1 -6க்குள் மாணவர்கள் கல்லூரியில் சேர வேண்டும். 2ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 12ம் தேதியும் 3ம் சுற்று கலந்தாய்வு செப்டம்பர் 22ல் தொடங்குகிறது.



  • Jul 15, 2025 08:50 IST

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,845 கன அடியாக சரிவு

    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 19,760 கன அடியில் இருந்து 17,845 கன அடியாக சரிந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.66 அடி; நீர் இருப்பு 92.93 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு 18,500 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. மேட்டூர் அணையில் இருந்து கிழக்கு, மேற்கு கால்வாய் வழியாக 500 கனஅடி நீர் வெளியேற்றம்.



  • Jul 15, 2025 08:49 IST

    பா.ம.க.வில் உள்ள குழப்பங்கள் விரைவில் தீரும் - ராமதாஸ்

    பாமகவில் உள்ள குழப்பங்கள் விரைவில் தீரும் என ராமதாஸ் சென்னையில் பேட்டியளித்துள்ளார். “வீட்டில் ஒட்டுக் கேட்கும் கருவி வைத்தவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் பணி நடைபெற்று வருகிறது”. அன்புமணியுடனான பிரச்சனைக்கு எப்போது தீர்வு என்ற கேள்விக்கு போக போக தெரியும் என பாடல் பாடினார். சென்னையில் 2 நாட்கள் தங்கியிருந்த ராமதாஸ் தைலாபுரம் இல்லத்துக்கு புறப்பட்டுச் சென்றார்.



  • Jul 15, 2025 08:31 IST

    கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பறிமுதல்

    கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் ரூ.1.05 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் நடத்திய சோதனையில் கணக்கில் வராத பணம் பறிமுதல்



Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: