scorecardresearch

விடுதலை புலிகள் இயக்கத்திற்காக சென்னையில் நிதி திரட்டிய ஐவர்; என்.ஐ.ஏ. வழக்கு

எல்.பி.ஜி. இணைப்பு மற்றும் வாடகை பத்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர் இந்திய பாஸ்போர்ட்டையும் வாக்காளர்கள் அடையாள அட்டையையும் கூட பெற்றுள்ளார். ஆனால் சென்னையில் இருந்து அவர் பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் சென்ற போது, குடியேற்ற அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களை வைத்து அவர் உடனே கைது செய்யப்பட்டார்

Chennai and six airports identified the Centre monetisation plan, chennai, சென்னை விமான நிலையம், தேசிய பணமாக்கல் திட்டம், தமிழ்நாடு, தமிழ்நாட்டில் 6 விமான நிலையங்கள், National monetisation pipeline, tamilnadu, india, chennai, madurai, coimbatore

Chennai News : தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக, தவறான ஆவணங்களை கொடுத்து பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்ட ஐந்து நபர்கள் மீது தேசிய விசாரணை முகமை வழக்கு பதிவு செய்துள்ளது.

வழக்கு பதிவு செய்யப்பட்ட ஐந்து நபர்களில், கடந்த ஆண்டு போலி இந்திய பாஸ்போர்ட்டை வைத்திருந்த காரணத்திற்காக சென்னையில் கைது செய்யப்பட்ட 50 வயது மதிக்க லெட்சுமணன் மேரி ஃப்ரான்சிஸ்கா என்பவரும் அடக்கம்.

ஃப்ரானிஸ்கா கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் டூரிட்ஸ்ட் விசாவில் இந்தியா வந்துள்ளார். அதன் வேலிடிட்டி 1 வருடம் மட்டுமே. ஆனால் அவர் மேற்கொண்டு கொரோனா காரணங்களை சுட்டிக்காட்டி இங்கேயே இருந்துள்ளார் என்று தமிழக போலீசார் பதிவு செய்துள்ள வழக்கில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அண்ணா நகர் சக்தி காலனியில் தான் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை கூறாமல் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளார். தன்னுடைய வீட்டு வாடகை பத்திரத்தை ஆதாரமாக கொண்டு அவர் எல்.பி.ஜி. இணைப்பை பெற்றுள்ளார்.

இந்த எல்.பி.ஜி. இணைப்பு மற்றும் வாடகை பத்திரம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர் இந்திய பாஸ்போர்ட்டையும் வாக்காளர்கள் அடையாள அட்டையையும் கூட பெற்றுள்ளார். ஆனால் சென்னையில் இருந்து அவர் பெங்களூருக்கு செல்ல விமான நிலையம் சென்ற போது, குடியேற்ற அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல்களை வைத்து அவர் உடனே கைது செய்யப்பட்டார்.

பிறகு அவர் சென்னையில் உள்ள க்யூ ப்ராஞ்ச் சி.ஐ.டியிடம் இவர் ஒப்படைக்கப்பட்டார். தற்போது செயல்பாட்டில் இருக்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்தினருடன் தொடர்பில் இருக்கிறார் என்பதை விசாரணையில் ஒப்புக் கொண்டார். இதனை தொடர்ந்து வழக்கு தேசிய விசாரணை முகமைக்கு மாற்றப்பட்டது. அவருடன் சேர்த்து கென்னிஸ்டன் ஃபெர்னாண்டோ, கே. பாஸ்கரன், ஜான்சன் சாமுவேல், எல்.செல்லமுத்து ஆகியோரும் என்.ஐ.ஏவின் கண்காணிப்பின் கீழ் வந்தனர்.

தேசிய விசாரணை முகமை பதிவு செய்துள்ள முதன்மை தகவல் அறிக்கையின் படி நான்கு நபர்களும் மும்பையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலியான ஆவணங்களை சமர்பித்து பணத்தை “வித்ட்ரா” செய்து எல்.டி.டி.இ. செயல்பாடுகளுக்காக செலவு செய்துள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது. உபா, பாஸ்போர்ட் சட்டம் போன்றவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai news nia books 5 for funding ltte