அலாவுதீனும் அற்புத விளக்கும்,முத்து, மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கேரளத்தை சேர்ந்த நடிகை ஜெயபாரதி. ஜெயபாரதிக்கு சென்னை நுங்கபாக்கம் பகுதியில் வீடு ஒன்று உள்ளது. பூர்வீகம் கேரளா என்பதால் அடிக்கடி இவர் சென்னை வருவதில்லை. வீட்டின் பாதுகாப்பு கருதி, உறவினர்கள், தெரிந்தவர்களின் பரிந்துரையின் பேரில் காவலாளி மற்றும் கார் ஓட்டுநரை வேலைக்கு வைத்துள்ளார். நேபாளத்தை சேர்ந்த ஹரிக்குமார் இவ்வீட்டில் காவலாளியாக பணியாற்றி வந்தார். கார் ஓட்டுநர் இப்ராஹிமும் இவரும் சேர்ந்து ஜெயபாரதியின் 31 சவரன் தங்க நகைகளை திருடியுள்ளனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"
நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக சென்னை வந்த ஜெயபாரதி நகைகளை எடுப்பதற்காக லாக்கரை திறந்த போது நகைகள் இல்லாதது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். நுங்கபாக்கம் காவல்நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறை விசாரணை நடத்தியது.
4 நாட்களுக்கு முன்பு தன்னுடைய சகோதரருக்கு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துக் கொண்டு ஹரிக்குமார் சொந்த ஊர் சென்றதாக கூறப்பட்டது. ஆனால் அவர் நேபாளம் செல்லவில்லை. தனக்கு ரூ. 1000 வேண்டுமென தன்னுடைய வீட்டில் இருந்த மற்றொரு நபருக்கு போன் செய்துள்ளார். இதனை சாமர்த்தியமாக பயன்படுத்தி ஓட்டுநர் உதவியுடன் ஹரிக்குமாரை சுற்றி வளைத்து கைது செய்தது காவல்துறை. ஹரிக்குமாரை தொடர்ந்து இப்ராஹிமும் கைது செய்யப்பட்டார். அடகுக் கடையில் விற்கப்பட்ட நகைகளை காவல்துறையினர் பறிமுதல் செய்து ஜெயபாரதியிடம் ஒப்படைத்தனர். நுங்கபாக்கம் காவல்துறையினருக்கு ஜெயபாரதி நன்றி செலுத்தியுள்ளார்.
மேலும் படிக்க : திருச்சி நகைக் கொள்ளையர்கள் வாக்குமூலம் – பீதியில் தமிழ், தெலுங்கு நடிகைகள்