Advertisment

வெப்பச் சலனம் காரணமாக கோவை, தேனி உள்ளிட்ட இடங்களில் மழைக்கு வாய்ப்பு

நேற்று அதிகபட்சமாக நீலகிரியின் தேவலா பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
weather Chennai news live Chennai weather forecast Tamil Nadu heavy rain details, சென்னை வானிலை அறிக்கை

Tamilnadu weather live updates:

Chennai News Weather Update Southwest Monsoon Mumbai Rains  : தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த மாதம் தீவிரமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் ஓரளவிற்கு மழை இன்று மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன. நீலகிரி, கோவை, தேனி, சென்னை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நேற்று அதிகபட்சமாக நீலகிரியின் தேவலா பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

Advertisment

சென்னை வானிலை

சென்னை வானிலையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையான 38 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்ச வெப்பநிலையாக 30 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகலாம்.

மேலும்  படிக்க : தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மழை பெய்யும் – வானிலை அறிக்கை

மும்பையில் கனமழை

மகராஷ்ட்ரா மாநிலத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது தென்மேற்கு பருவமழை. நான்கு நாட்களாக கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் கனமழை புகுந்துவிட்டது. இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில், மக்கள் திண்டாடி வருகின்றனர். தொடர் மழையின் காரணமாக மும்பையில் இருக்கும் பள்ளிகள், கல்லூரிகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் என அனைத்திற்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மும்பை தெருக்களில் வெள்ளமாக ஓடும் மழை நீர். நேற்று ஒரு நாள் மட்டும் 400 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கடந்த நான்கு நாட்களாக மும்பையில் கொட்டிய மழையின் அளவு

29.06.2019 - 235 மி.மீ

30.06.2019 - 93 மி.மீ

01.07.2019 - 92 மி.மீ

02.07.2019 - 375 மி.மீ ( இன்று காலை 5.30 மணி வரை)

காலை இரண்டு மணி நேரம் மழையின் அளவு சற்று குறைந்துள்ளது. இருப்பினும் மழை இன்று மீண்டும் அதிகமாக பெய்யத்துவங்கி இன்று மாலை சற்று நிதானமாகும். ஆனாலும் நாளை மற்றும் நாளை மறுநாள் அங்கு கனமழை பெய்வதற்கு வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளன.

மேலும் படிக்க : mumbai city rain : வெள்ளத்தில் மிதக்கும் மும்பை நகரம்.. கனமழையின் கோரத்தை விவரிக்கும் படங்கள்!

Chennai Water Scarcity

சென்னையில் நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாட்டினை சரி செய்யும் பொருட்டு, ஜோலார்பேட்டையில் இருந்து 7ம் தேதி முதல் தண்ணீர் பெற்று, சென்னையில் விநியோகிக்க மாநில அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

Chennai Mumbai Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment