New Update
/tamil-ie/media/media_files/uploads/2022/04/highway-1.jpg)
Chennai NHAI will soon resume work on expanding to four lanes the 105km stretch of the ECR
கிழக்கு கடற்கரை சாலை பாதையை விரிவுபடுத்தும் திட்டத்தை ரத்து செய்வதாகத் தமிழக தலைமைச் செயலாளர் இறையன்புக்கு’ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியது.
Chennai NHAI will soon resume work on expanding to four lanes the 105km stretch of the ECR
மகாபலிபுரம் மற்றும் புதுச்சேரி இடையே கிழக்கு கடற்கரை சாலையின் (ECR) 105 கிமீ பாதையை’ நான்கு வழிச்சாலையாக விரிவுபடுத்தும் பணியை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) விரைவில் மீண்டும் தொடங்கவுள்ளது.
ஒவ்வொரு நாளும் 14,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் பயன்படுத்தும் இருவழிச் சாலையை விரிவாக்கம் செய்யும் திட்டத்தை கைவிடுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அச்சுறுத்தியதை அடுத்து, மாநில அரசு இறுதியாக ஏப்ரல் 8 ஆம் தேதி தடையில்லாச் சான்றிதழை (என்ஓசி) வழங்கிய பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய பிராந்திய அதிகாரி எஸ்பி சோமசேகர் வியாழன் அன்று டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழுக்கு அளித்த பேட்டியில், வேலை விரைவில் தொடங்கும். இசிஆரை பராமரிக்கும் ஏஜென்சியான தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம், தேவையான நிலத்தை ஒப்படைத்ததற்காக ரூ.222 கோடி இழப்பீடு கேட்டது.
மேலும் பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் ரூ.3,000 கோடி அனுமதிக்கப்பட்டிருந்தும், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணம் தர மறுத்ததால், சாலைப் பணிகள் தொடங்கப்படவில்லை. இசிஆரை கட்டுவதற்கும், பராமரிப்பதற்கும் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த, தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகத்துக்கு பணம் தேவை.
மேலும் இந்த பாதையில் உள்ள சுங்கச்சாவடி தேசிய நெடுஞ்சாலை ஆணையத்துக்கு ஒப்படைக்கப்பட்டதால் இழந்த வருவாய்க்கு அது இழப்பீடு கோரியது.
இதனால்’ இந்தத் திட்டத்தை ரத்து செய்வதாகத் தமிழக தலைமைச் செயலாளர் வி.இறையன்புவுக்கு’ தேசிய நெடுஞ்சாலை ஆணையம் கடிதம் எழுதியதையடுத்து, அவர் இந்த விஷயத்தை மாநில நெடுஞ்சாலைத் துறைச் செயலாளர் தீரஜ் குமாருக்கு அனுப்பினார்.
இதையடுத்து ஏப்ரல் 8 ஆம் தேதி தடையில்லா சான்றிதழ் வழங்கப்பட்டதாகவும், தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி சோமசேகர் இதை உறுதிப்படுத்தியதாகவும் தீரஜ் குமார் கூறினார்.
பொறுப்புகளை கையாள்வதில் அவர்களுக்கு உதவ மாநில அரசு ஒப்புக்கொண்டதாக’ தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழக அதிகாரிகள் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.