சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் அம்ஸ்ராங் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த வழக்கின் விசாரணை நிலவரம் குறித்து சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் கூறியுள்ளார்.
சென்னைதிருவள்ளூர்காஞ்சிபுரம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் முக்கிய தலித் தலைவராக வலம் வந்தவர் தான் ஆம்ஸ்ராங். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ராங் சென்னை பெரம்பூர் பகுதியில் வசித்து வந்த வந்த நிலையில், நேற்று (ஜூலை 5) இரு சக்கர வாகனத்தில் வந்த பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இதனிடையே ஆம்ஸ்ராங் கொலை வழக்கில், 8 பேர் நீதிமன்றத்தில் சரணமடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் என்பவரின் சகோதரர் பாலு என்பவருடன் ராமு, திருமலை, செல்வராஜ், அருள் என 8 பேர் சரணடைந்துள்ளனர். இதனால் இந்த படுகொலை சம்பவம் ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழிக்கு பழி வாங்கும் கொலையாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது குறித்து பேசியுள்ள சென்னை வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் அஸ்ரா கர்க் பல்வேறு தகவல்களை கூறியுள்ளார்.
ஆம்ஸ்ராங் கொலை வழக்கில் முதற்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 8 பேரை கைது செய்துள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த விசாரணை முடிந்தவுடன் அடுத்தக்கட்ட விசாரணை தொடங்கும். இந்த விசாரணையில், கொலைக்கான காரணம், இதில் சம்பந்தப்பட்டவர்கள் யார்? கொலைக்கான பின்னணி என்ன என்பது குறித்து தெரியவரும். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசார் சரியான கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொலை நடந்து 4 மணி நேரத்தில் 8 பேரை கைது செய்துள்ளோம். இதற்காக தனிப்படை அமைத்து விசாரித்து வருகிறோம். கொலை சம்பவத்தின்போது கொலையாளிகள் துப்பாக்கி பயன்படுத்தவில்லை. கத்தியால் வெட்டித்தான் படுகொலை செய்துள்ளனர் என்று அஸ்ரா கர்க் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“