இந்த வாரம் முதல் சென்னை வெளிவட்டச் சாலையில் நான்கு இடங்களில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (TNRDC) முடிவு செய்துள்ளது.
பழைய மகாபலிபுரம் சாலை கட்டணம் இல்லாததாக மாறிய சில மாதங்களுக்குப் பிறகு, இந்த வாரம் முதல் சென்னை வெளிவட்டச் சாலையில் நான்கு இடங்களில் கட்டணம் வசூலிக்க தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் முடிவு செய்துள்ளது. இதனால் சென்னையிலிருந்து வெளியே பயணிப்பவர்களுக்கு அதிகச் செலவாகும் என்று தெரிகிறது.
இந்தநிலையில், வரதராஜபுரம், கொளப்பஞ்சேரி (நசரத்பேட்டை அருகே), நெமிலிச்சேரி, சின்னமுல்லைவயல் ஆகிய 4 இடங்களில் சுங்கவரி வசூலிக்கும் சோதனை வெள்ளிக்கிழமை தொடங்கியுள்ளது.
வண்டலூர் - நெமிலிச்சேரி இடையே 1,081 கோடி ரூபாய் செலவில் முதல் கட்ட சாலைப் பணிகள் முடிக்கப்பட்ட நிலையில், நெமிலிச்சேரி - மீஞ்சூர் இடையே இரண்டாம் கட்டப் பணிகள் நிறைவடைந்து பிப்ரவரியில் போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது.
இந்த இடங்களில் நிறுவப்பட்டுள்ள பூம் தடைகள், ஃபாஸ்டேக் ஸ்கேனர்கள், டோல் வசூல் அமைப்புகள் மற்றும் கேமராக்களின் செயல்பாட்டை நாங்கள் சரிபார்த்துள்ளோம். இந்த வாரம் முதல் கட்டணம் வசூலிக்க தனியார் ஏஜென்சி இணைக்கப்பட்டுள்ளது என்று TNRDC மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்க மதிப்பீடுகளின்படி, ஒவ்வொரு நாளும் 30,000 க்கும் மேற்பட்ட கட்டணம் வசூலிக்கக்கூடிய வாகனங்கள் இந்த சாலைகளைப் பயன்படுத்துகின்றன. TNRDC இன்னும் இறுதி கட்டண பட்டியலை வெளியிடவில்லை. ஒரு வாகனத்திற்கு ரூ.40 வசூலித்தாலும், ஒவ்வொரு ஆண்டும் ஏஜென்சிக்கு ரூ.43 கோடி வருவாய் கிடைக்கும்.
சாலையின் இருபுறமும் பல குடியிருப்புகள் உள்ளதால் வெளிவட்டச் சாலை வழியாக இரு சக்கர வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள நான்கு தொழில் மையங்களை இணைக்கும் நீட்சியில் லாரிகளின் இயக்கம் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாலை பாதுகாப்பில் அரசு கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் பராமரிப்பு பொதுவாக மோசமாக உள்ளது, என்று அப்பகுதி குடியிருப்புவாசி ஒருவர் தெரிவித்தார்.
நெடுஞ்சாலை ரோந்து, ஆம்புலன்ஸ்கள் மற்றும் மீட்பு பணிகளுக்கு கூடுதலாக ஒரு மேம்பட்ட போக்குவரத்து மேலாண்மை அமைப்பு நிறுவப்படும். சிறந்த வெளிச்ச வசதியை உறுதி செய்வதற்காக அனைத்து நுழைவு மற்றும் வெளியேறும் சரிவுகளிலும் போதுமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது, என்று TNRDC அதிகாரி கூறினார்.
அரசு - தனியார் கூட்டமைப்பு (PPP) முறையில் வடிவமைப்பு, உருவாக்கம், நிதி, இயக்குதல் மற்றும் இடமாற்றம் ஆகியவற்றின் அடிப்படையில் 10 ஆண்டுகளுக்கு முன்பு இத்திட்டத்தின் கட்டுமானம் தொடங்கப்பட்டது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil