/tamil-ie/media/media_files/uploads/2019/08/shot.jpg)
chennai, pallavaram, havildar, rifleman, shot dead, suicide, சென்னை, பல்லாவரம், ஹவில்தார், ரைபிள்மேன், சுட்டுக்கொலை, தற்கொலை
சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பு பகுதியில் ஹவில்தாரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற ரைபிள்மேனும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணுவத்தில் ஹவில்தாராக பணியாற்றி வருபவர் பிரவீன் குமார் ஜோஷி. ரைபிள் மேனாக உள்ள ஜக்ஸிர் என்பவர், ஒழுங்காக பணிக்கு வரவில்லை எனக்கூறப்படுகிறது. இதனை, பிரவீன்குமார் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, நேற்று (ஆக.,26) இரவு தூங்கி கொண்டிருந்த பிரவீன்குமாரை, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விட்டு, ஜக்ஸிரும், அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, பல்லாவரம் ராணுவ குடியிருப்பு பகுதியில் போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us