Advertisment

சென்னை பாரிமுனை கோயிலில் பெட்ரோல் குண்டு வீச்சு: ஐகோர்ட் நீதிபதி நேரில் ஆய்வு

சென்னை பாரிமுனையில் உள்ள வீரபத்ர சுவாமி கோயிலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில், குண்டு வீசப்பட்ட இடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

author-image
WebDesk
New Update
Chennai parrys corner Temple Petrol Bombing High Court Judge Inspects In Person Tamil News

வீரபத்ர சுவாமி கோயில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் உள்ளது.

chennai-high-court: சென்னை பாரிமுனை கோவிந்தப்ப நாயக்கன் தெரு ஜங்ஷனில் உள்ள வீரபத்ர சுவாமி தேவஸ்தானத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை வீசிய முரளி கிருஷ்ணா என்பவர் கோவில் அருகே ஜி.கே டிரேடர்ஸ் என்ற கடை நடத்தி வருகிறார். விசாரணையில், சாமி தனக்கு எதுவும் செய்யவில்லை என்ற கோபத்தில் பீர் பாட்டிலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கோவிலில் வீசியுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

Advertisment

இதையடுத்து, பெட்ரோல் குண்டு வீசிய முரளி கிருஷ்ணாவை கொத்தவால் சாவடி போலீசார் கைது செய்தனர். மேலும் முரளி கிருஷ்ணா மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தை உயர்நீதிமன்ற நீதிபதி நிரஞ்சன் நேரில் ஆய்வு செய்தனர். உடன் தடவியல் நிபுணர்களும் ஆய்வு செய்தனர். வீரபத்ர சுவாமி கோயில் உயர் நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறையின் கீழ் செயல்படும் டிரஸ்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Chennai High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment