சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து மாமல்லபுரம் வரையிலான உள்வட்ட சுற்றுச்சாலை பணிகளுக்காக இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும், 6 வழிச்சாலை பணிகளை, ரூ.5,700 கோடி மதிப்பீட்டில், 3 ஆண்டுகளுக்குள் முடிக்க திட்டமிட்டுள்ளது.
சிங்கபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவயல், காட்டுபள்ளி உள்ளிட்ட பகுதிகளில் இந்த சாலைத்திட்டத்தை செயல்படுத்த சுற்றுச்சூழல் அனுமதியை, கடந்த ஆகஸ்ட் மாதம், சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
133.381 கி.ளமீ. தொலைவிலான இந்த திட்டத்திற்கு நிலங்களை கையகப்படுத்தும் பொருட்டு, தமிழ்நாடு சாலை கட்டமைப்பு மேம்பாட்டு கழகம், 6 தாசில்தார்களை தலைமையாக கொண்டு 100 அதிகாரிகளை கொண்ட குழு அமைத்துள்ளது.
முதற்கட்டமாக, தச்சூர் - சென்னை வெளிப்புற சுற்றுச்சாலை - சென்னை உள்வட்ட சுற்றுச்சாலை என 25.31 கி.மீ தொலைவில் 4 வழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த திட்டத்திற்கான நிதி JICA அமைப்பிடம் இருந்து கடனுதவியாக பெறப்பட்டுள்ளது.
இரண்டாவது கட்டமாக, தச்சூர் - ஸ்ரீபெரும்புதூர் இடையே, 56.80 கி,மீ. தொலைவிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்காக தமிழக அரசு, ஏசியன் இன்ப்ராஸ்ட்ரெக்சர் இன்வெஸ்ட்மெண்ட் வங்கியிடமிருந்து ரூ.3,346 கோடி கடனாக பெற உள்ளது.
இறுதி கட்டமாக வண்டலூர் - மாமல்லபுரத்தை அடுத்த பூஞ்சேரி பகுதியில் இத்திட்ட பணிகள் நடைபெற உள்ளன.
ஸ்ரீபெரும்புதூர் - வண்டலூர் இடையேயான 4ம் கட்ட பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் கனரக வாகனங்கள் சென்னை நகருக்குள் வராமல், சுற்றுச்சாலை வழியாகவே சென்னையை கடந்து செல்ல வழிவகை ஏற்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் தொழில் வளர்ச்சி மற்றும் ரியல் எஸ்டேட் துறை மேலும் வளர்ச்சி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.