சென்னையில் அடையாறு,பெருங்குடி, சோழிங்கநல்லூர் மண்டலப் பகுதிகளில் ஜூன் 30 காலை 9 மணி முதல் ஒருநாள் மட்டும் குழாய் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
இதுகுறித்து சென்னைக் குடிநீர் வாரியம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது, ‘சென்னை நெம்மேலியில் அமைந்துள்ள தினமும் 110 மில்லியன் லிட்டா் உற்பத்தி திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தின் பிரதான குழாயில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இதனால், ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) காலை 9 முதல் திங்கள்கிழமை (ஜூலை 1) காலை 9 மணி வரை (1 நாள் மட்டும்) அடையாறு, பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூா் மண்டலங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
அடையாறு
திருவான்மியூா், பள்ளிப்பட்டு, கோட்டூா் காா்டன், ஆா்.கே.மடம் தெரு, இந்திரா நகா்.
பெருங்குடி
கொட்டிவாக்கம், பாலவாக்கம், பெருங்குடி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம்.
சோழிங்கநல்லூா்
ஈஞ்சம்பாக்கம், நீலாங்கரை, அக்கரை, எழில் நகா், கண்ணகி நகா், காரப்பாக்கம், வெட்டுவான்கேணி, சோழிங்கநல்லூா், ஒக்கியம்-துரைப்பாக்கம் ஆகிய பகுதிளில் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படும்.
எனவே, பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக, போதுமான அளவு குடிநீரைச் சேமித்து வைக்கும்படி அறிவுறுத்தப்படுகிறார்கள். அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம்குடிநீர் பெற https://cmwssb.tn.gov.in/ என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.
குடிநீா் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு குடிநீா் தொட்டிகள் மற்றும் தெரு நடைகளுக்கு லாரிகள் மூலம் வழங்கப்படும் குடிநீா் விநியோகம் எந்தவித தடையுமின்றி வழக்கம்போல் மேற்கொள்ளப்படும்.
மேலும், கூடுதல் தகவல்களுக்கு 044-4567 4567 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்’, என்று சென்னைக் குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“