தீபாவளி பண்டிகைக்காக ‘ஷாப்பிங்’ செய்ய மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் பெண்கள் செயின் பறிப்பை தவிர்க்க கழுத்தில் ‘ஸ்கார்ஃப்’ அணிந்து செல்ல வேண்டும் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குச் செல்லும் பெண்கள், செயின் பறிப்பு சம்பவங்களை தவிர்க்க, கழுத்தில் தாவணி அணிந்து செல்லுமாறு சென்னை போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
தீபாவளி பண்டிகைக்காக ஷாப்பிங் செய்ய மக்கள் அதிகம் கூடும் தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம், பூக்கடை ஆகிய நான்கு இடங்களிலும் மொத்தம் 17 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தி.நகரில் குறைந்தது ஏழு கண்காணிப்பு கோபுரங்களும், வண்ணாரப்பேட்டை மற்றும் கீழ்பாக்கத்தில் தலா மூன்று கோபுரங்களும், பூக்கடை பகுதியில் நான்கு கோபுரங்களும் நிறுவப்பட்டுள்ளன.
சென்னையில் மக்கள் கூட்டம் அதிகம் கூடும் இடங்களில் குற்றவாளிகளை கண்காணிக்க 18,000 போலீசார் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போலீசார் மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
தி.நகர், வண்ணாரப்பேட்டை, புரசைவாக்கம் மற்றும் பூக்கடை பகுதிகளில் 5 தற்காலிக கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் 10 தற்காலிக உதவி மையங்களை மாநகர காவல்துறை அமைத்துள்ளது. குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க சிசிடிவி கேமரா காட்சிகளை கண்காணிப்பார்கள். இது தவிர, காணாமல் போன குழந்தைகளை பெற்றோரிடம் ஒப்படைக்க போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“