Advertisment

இந்தியா- ஆஸ்திரேலியா கிரிக்கெட்; சென்னையில் ப்ளாக்கில் டிக்கெட் விற்ற 12 பேர் கைது

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்களை ப்ளாக்கில் விற்ற 12 பேர் கைது; 29 டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல்

author-image
WebDesk
New Update
express photo

சென்னையில் நடைபெற்ற இந்தியா- ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்களை பிளாக்கில் விற்ற 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisment

இந்தியாவில் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, தற்போது ஒருநாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. முதல் 2 ஒருநாள் போட்டிகளில் 2 அணிகளும் தலா ஒரு வெற்றிப்பெற்று, சமநிலையில் உள்ளன. இதனையடுத்து, தொடரை வெல்லப்போவது யார் என்ற 3 ஆவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னையில் நடைபெற்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் டிக்கெட்களை வாங்கினர்.

இதையும் படியுங்கள்: தமிழக பட்ஜெட்டில் திருச்சி மாவட்டம் புறக்கணிப்பு: வளர்ச்சி குழுமம் வேதனை

தொடர் யாருக்கு என்ற இறுதிப்போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றி முனைப்புடன் களமிறங்கின. மறுபுறம் இந்த விறுவிறுப்பான போட்டியைக் காண ரசிகர்களும் ஆர்வமுடன் இருந்தனர். இதனால், போட்டிக்கான டிக்கெட்கள் அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

இந்தநிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போட்டிக்கான டிக்கெட்களை ப்ளாக்கில் விற்ற 12 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 29 டிக்கெட்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chennai Tamilnadu Cricket
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment