/indian-express-tamil/media/media_files/Rai2Rmi4fdv5hdxoTeBG.jpg)
Chennai police arrest 5 men of a musical troupe over ‘obscene’ dance show
சென்னையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை ஆபாச நடனம் ஆட வற்புறுத்தியதாக இசைக் குழுவைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
செவ்வாய்கிழமை ஹோட்டலில் நடந்த நிகழ்ச்சி குறித்த ரகசிய தகவல் கிடைத்ததும் அந்த நபர்களை கைது செய்தோம்.அவர்களில் ஒருவர் அண்ணாசாலை வூட்ஸ் சாலையில் உள்ள ஸ்ருதி பேலஸ் மேலாளர், என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்படுவதற்கு முன்பு பெண் இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீஸ் குழு ஹோட்டலில் கண்காணிப்பு நடத்தியது.
டிசம்பர் 31, 2023 அன்று மட்டும் இசை நிகழ்ச்சியை நடத்த குழு அனுமதி பெற்றதாக அண்ணாசாலை போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஸ்ருதி பேலஸ் மேலாளரும் இசைக்குழு உறுப்பினருமான ஆலந்தூரைச் சேர்ந்த ஆர் சிவா, வியாசர்பாடியைச் சேர்ந்த கீபோர்டு பிளேயர் எம்.பிரதாப், பெரம்பூரைச் சேர்ந்த டிரம்மர் ஜே.கலைசெல்வன் என்கிற பாபு, பாடகர்கள் புளியந்தோப்பைச் சேர்ந்த ஜி.முத்துசாமி, வியாசர்பாடியைச் சேர்ந்த எம்.அப்துல் கபூர், என அடையாளம் காணப்பட்டனர்.
மேலும் குற்றவாளிகளிடம் இருந்து ரூ.23ஆயிரம் மற்றும் செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள்.
Read in English: Chennai police arrest 5 men of a musical troupe over ‘obscene’ dance show
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.