சென்னை வேளச்சேரியில் உள்ளது குருநானக் கல்லூரி. நகரின் பிரபலமான கல்லூரிகளில் ஒன்றாக இருந்து வரும் இந்தக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்குள் யார் பெரியவர்? என்கிற ரீதியில் மோதல் நீடித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
Advertisment
இரு வேறு பாடப்பிரிவுகளில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே அடிக்கடி சண்டை நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் தான், நேற்று கல்லூரி வளாகத்திற்குள் இரு தரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஒரு தரப்பு மாணவர்கள் திருவிழாக்களில் வெடிக்கும் வெடியை வெடியை வீசி வெடிக்க செய்துள்ளனர். வெடி பலத்த சத்தத்துடன் வெடித்த நிலையில் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக கல்லூரி நிர்வாகம் கிண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தது. இந்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், வெடி குறித்து ஆய்வு செய்தனர். மேலும், வெடித்தது நாட்டு வெடிகுண்டா அல்லது தீபாவளி பட்டாசா என்கிற கோணத்தில் ஆய்வும், விசாரணையும் நடந்தது. இதனிடையே, மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் 18 பேரை நீக்கம் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் மோதலில் ஈடுபட்ட வழக்குல் 8 மாணவர்கள் கைது செய்தனர். இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்புடைய மேலும் 10 மாணவர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil