இலங்கையிலிருந்து விமான நிலையத்தில் வந்திறங்கிய பயங்கரவாத சந்தேக நபர் ஒருவரை சென்னை போலீசார் சனிக்கிழமையன்று கைது செய்தனர்.
நான் மனிதர் கட்சி என்ற அரசியல் கட்சியை தொடங்கியவர் தௌபீக். 2020 ஆகஸ்ட் 27 அன்று, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து மண்ணடி தொழிலதிபர் திவான் அக்பரிடம் இருந்து ரூ.3 கோடியை மிரட்டி பணம் பறித்ததற்காக தௌபீக் சென்னை போலீஸாரால் முதலில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் வங்கதேசத்தைச் சேர்ந்த தௌபீக்கின் மனைவி சல்மா மற்றும் 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படியுங்கள்: அரியலூரில் எஸ்.சி. சமூகத்தைச் சேர்ந்தவரை காலில் விழ சொல்லி ஆதிக்க சாதியினர் கட்டாயம்- 6 பேர் மீது வழக்குப் பதிவு
தௌபீக் 2021 இல் ஜாமீனில் வெளியே வந்தார். பின்னர் தௌபீக் பங்களாதேஷ், நேபாளம் மற்றும் இலங்கைக்கு பயணம் செய்ததாக என்.ஐ.ஏ வட்டாரங்கள் தெரிவித்தன. தௌபீக் ஜாமீனில் வெளியே வந்ததையடுத்து, அனைத்து விமான நிலையங்களுக்கும் போலீசார் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பினர்.
இந்தநிலையில், சனிக்கிழமையன்று இலங்கையில் இருந்து சென்னை வந்த தௌபீக்கை விமான நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். தௌபீக் கைது செய்யப்பட்டவுடன், பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் அவருக்கு இருக்கும் சந்தேகத்திற்குரிய தொடர்புகளை விசாரிக்க தமிழக காவல்துறையும் தேசிய புலனாய்வு முகமையும் திட்டமிட்டுள்ளன. இதற்கிடையில், சென்னை நீதிமன்றம் அவரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil