chennai | police: ஆங்கிலப் புத்தாண்டு, 2024ஐ வரவேற்க பலரும் தயாராகி வருகின்றனர். புத்தாண்டு தினத்தை ஒட்டி வருகிற 31ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பொதுமக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் கொண்டாடிட சென்னையில் 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என என காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் பேசுகையில், சென்னையில் 420 இடங்களில் வாகன தணிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. 25 சாலை பாதுகாப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாளை இரவு 7 மணி முதல் போலீசார் தங்களது பணிகளுக்கு சென்று விடுவார்கள். 9 மணிக்குப் பிறகு சென்னை மாநகரமே போலீசாரின் கட்டுப்பாட்டுக்கு வந்தது விடும்.
100 முக்கிய கோவில்கள், தேவாலயங்களில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குதிரைப்படைகள் கடற்கரை ஓரங்களில் பாதுகாப்பிற்காக நிறுத்தப்படும். குடியிருப்புகளில் போலீசார் அனுமதி பெற்றே ஒலிபெருக்கிகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் புத்தாண்டு கொண்டாடத்திற்காக 18,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். அத்துடன் 1500 ஊர்காவலர் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குறிப்பாக மயிலாப்பூர், கீழ்பாக்கம், திருவல்லிக்கேணி, தி.நகர், அடையாறு, புதிய தோமையார் மலை, பூக்கடை, வண்ணாரப்பேட்டை, புளியந்தோப்பு உள்ளிட்ட முக்கிய இடங்களில் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
பொது இடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. முக்கிய இடங்கள் ட்ரோன்கள் மூலம் கண்காணிக்கப்படும். அனுமதி பெற்ற பின்னரே நிகழ்ச்சி நடத்த வேண்டும். மீறுவோர் மீது கடும் நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிண்டி, அடையாறு, தரமணி, நீலாங்கரை உள்ளிட்ட இடங்களில் வாகன பந்தயம் தடுப்பு நடவடிக்கைக்காக 25 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. புத்தாண்டு தினத்தன்று கடலில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் ரோந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கண்காணிப்பு கோபுரங்கள் மூலமாகவும் கண்காணிக்கப்படும்' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“