Advertisment

மறைந்த தொழிலதிபர் மனைவி புகார்: சென்னை மாநகராட்சி துணை மேயர் மீது வழக்குப் பதிவு

மறைந்த தொழிலதிபரின் மனைவி அளித்த புகாரின் பேரில், துணை மேயர் மகேஷ் குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai police file cheating case against citys deputy mayor Magesh Kumar

சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார்.

சென்னை மாநகர காவல்துறையின் மத்திய குற்றப்பிரிவு (சிசிபி) சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ் குமார் மீது, இறந்த தொழிலதிபரின் மனைவியின் மோசடி புகாரின் அடிப்படையில், ஆகஸ்ட் 28, 2023 திங்கள் அன்று வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Advertisment

இந்தப் புகாரை மறைந்த தொழிலதிபர் மோகன் என்பவரின் மனைவி இசக்கியம்மாள் என்பவர் அளித்துள்ளார். அந்தப் புகாரின் கணவரின் மறைவுக்கு பின்னர் சொத்துக்களை அபகரித்துக் கொண்டார் எனக் கூறப்பட்டுள்ளது.

இதனை மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவரின் கூற்றுப்படி, “தொழிலதிபர் மோகன் மறைவுக்கு பின்னர், அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, குணசேகரன், பாலமுருகன் ஆகிய இருவர் துணை மேயர் மகேஷ்குமாரை வணிக இயக்குனராகக் கொண்டு வந்து, மோகனின் மனைவிக்கு இழப்பீடு வழங்காமல், குவாரி தொழிலை முழுவதுமாக அபகரித்துள்ளார்கள்” என்றார்.

மோகன் உடல் நலக்குறைவு காரணமாக 2021ஆம் ஆண்டு உயிரிழந்தார். இவர் தாம்பரம் அருகே குவாரி உள்ளிட்ட கனிம வள தொழில் நடத்திவந்தார்.

இந்த நிலையில், மறைந்த தொழிலதிபரின் மனைவி அளித்த புகாரின் பேரில், துணை மேயர் மகேஷ் குமார் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Dmk Greater Chennai Corporation
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment