சென்னை காவல்துறை ரூ.3.60 கோடி செலவில் 9 சிறப்பு கண்காணிப்பு ட்ரோன் காவல் பிரிவை உருவாக்க உள்ளது. முதற்கட்டமாக காந்தி சிலையை ஒட்டிய மெரினா கடற்கரை அல்லது எலியட்ஸ் கடற்கரை அல்லது பாண்டி பஜாரில் ட்ரோன் காவல் பிரிவுகள் அமைக்கப்படுகிறது.
9 ட்ரோன்களைக் கொண்ட ஒவ்வொரு மொபைல் காவல் பிரிவையும் கன்டெய்னர் கேபின்களைப் (சுமார் 40 அடி நீளம் மற்றும் 10 அடி உயரம்) பயன்படுத்தி ஒரு தற்காலிக கட்டமைப்பில் வைக்கப்படுகிறது. அது தரை தளத்துடன் ட்ரோன் இயக்கத்திற்கான கட்டுப்பாட்டு அறையாகவும் மேல் தளமாகவும் பயன்படுத்தப்படும்.
சென்னை பெருநகர காவல்துறைக்காக சிறப்பு ட்ரோன் காவல் பிரிவை உருவாக்க தமிழக அரசு புதன்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒன்பது ட்ரோன்கள் - ஆறு விரைவாக பதிலளிக்கும் பேலோட் ட்ரோன்கள், இரண்டு நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன்கள் மற்றும் ஒரு உயிர்காக்கும் ட்ரோன்கள் என ரூ 3.60 கோடி செலவில் புதிய சிறப்பு ட்ரோன் காவல் பிரிவு உருவாக்கப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவுப்படி, பேரிடர் அழைப்புகளுக்கு பதிலளிக்கும் நேரத்தைக் குறைக்கவும், விஐபி வழித்தடங்கள் மற்றும் குற்றச் சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் கண்காணிக்கவும் மற்றும் பேரிடரில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்பதற்காகவும், தீ விபத்துகளின் போது மீட்பு நடவடிக்கைகளை மேற்க்கொள்ளவும், காவல் அதிகாரிகளுக்கு உதவவும், உதவி செய்யவும், ட்ரோன் காவல் பிரிவுகள் சென்னையில் கடற்கரை பகுதிகள் மற்றும் உயரமான கட்டிடங்களில் நிறுத்தி வைக்கப்படும்.
முதற்கட்டமாக காந்தி சிலையை ஒட்டிய மெரினா கடற்கரை அல்லது எலியட்ஸ் கடற்கரை அல்லது பாண்டி பஜாரில் ட்ரோன் காவல் பிரிவுகள் அமைக்கப்படுகிறது.
விரைவாக செயல்படும் பேலோட் ட்ரோன் என்பது பல ஃபேன்கள் கொண்ட ட்ரோனாக இருக்கும். இதில் தெர்மல் மற்றும் நைட் விஷன் கொண்ட இரவு நேரத்தில் படம் பிடிக்கும் HD கேமரா உள்ளது. 2.5 கிலோ எடையுள்ள இந்த ட்ரோன் 2 கி.மீ தொடர்ச்சியாக பறக்கும், 30 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும்.
நீண்ட தூர கண்காணிப்பு ட்ரோன் செங்குத்தாக புறப்படுவதற்கும் தரையிறங்குவதற்குமான ஒரு ஹைபிரிட் ட்ரோனாக இருக்கும். 5 கிலோ எடை கொண்ட இந்த ட்ரோன் 100 நிமிடங்கள் தொடர்ந்து பறக்கும். தொடர்ச்சியாக 30 கி.மீ வரை பறக்கும்.
உயிர்காக்கும் ட்ரொன் என்பது 12 கிலோ எடை கொண்டது. அதிக எடை கொண்டதாக இந்த ட்ரோன் 15 நிமிட தொடர்ச்சியாக பறாக்கும். இயக்கும் இடத்தில் இருந்து தொடர்ச்சியாக 1 கி.மீ பறக்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"