சென்னையில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை பூட்டிவிட்டு வெளியூர் செல்கிறார்கள் என்றால், அதன் விவரங்களை இணையதளத்தில் பதிவு செய்தால், அந்த பகுதி போலீஸார் தினமும் இரவு நேரத்தில் 3 முறை கண்காணிக்கும் புதிய திட்டத்தை சென்னை காவல்துறை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
சென்னையில் திருடப்பட்டு மீட்கப்பட்ட தங்க நகைகளை காவல்துறை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை(பிப்ரவரி 04) சனிக்கிழமை நடைபெற்றது.
சென்னை சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், கூடுதல் காவல் ஆணையர்கள் டி.எஸ். அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா ஆகியோர் சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த மீட்கப்பட்ட தங்க நகைகள், செல்போன்கள் மற்றும் பொருட்களைப் பார்வையிட்டனர்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், மீட்கப்பட்ட நகைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார். குற்றவாளிகளிடம் இருந்து மீட்கப்பட்ட 6,643 சவரன் தங்க நகைகள், 1,487 மொபைல் போன்கள், ரூ.2.70 கோடி ரொக்கம், 425 இருசக்கர வாகனங்கள், 31 ஆட்டோரிக்ஷாக்கள், 18 நான்கு சக்கர வாகனங்கள் ஆகியவற்றை போலீசார் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னையில் பூட்டி கிடக்கும் வீடுகளை கண்காணிக்கும் புதிய திட்டத்தை தொடங்க சென்னை பெருநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதன்படி, வீட்டில் வசிப்பர்கள் தங்கள் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னையை விட்டு வெளியூர்களுக்கு செல்கிறார்கள் என்றால், ஆன்லைனில் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால், திருட்டு சம்பவங்களைத் தடுக்க போலீசார் இரவு நேரத்தில் 3 முறை சென்று வீட்டைக் கண்காணிப்பார்கள் என்று கூறினார்.
மேலும், காவல்துறையின் ரோந்து பணியை தீவிரப்படுத்த ஸ்மார்ட் காவலர் செயலியைப் பயன்படுத்தி போலீஸாருக்கு புதிய மின்னணு பிரிவு அமைப்பை அறிமுகப்படுத்தி ரோந்துப் பணியை பலப்படுத்தியுள்ளோம். பூட்டிய வீடுகளை அந்த பகுதியில் உள்ள போலீஸார் மூலமாக தானியங்கி முறையில் கண்காணிக்கும் வகையில், புதிய திட்டத்தை தொடங்க உள்ளோம், மாநில குற்ற ஆவண காப்பகத்துடன் ஆலோசித்து வருகிறோம். மாநில குற்ற ஆவண காப்பகம் ஒரு மாதத்தில் இந்த முறையை வெளியிட உள்ளது என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின்படி, சென்னையில் வசிப்பவர் வீட்டை பூட்டிவிட்டு வெளியூருக்கு செல்கிறார்கள் என்றால், இணையதளத்தில் பூட்டிய வீட்டைப் பற்றிய விவரங்களை காவல்துறை இணையதளத்தில் பதிவு செய்தால், அந்தந்த பகுதியில் உள்ள போலீஸார் மற்றும் ரோந்து வாகனத்திற்கு தகவல் தெரிவிக்கப்படும். போலீசார் இரவு நேரத்தில் அந்த வீட்டை 3 முறை வந்து கண்காணித்துச் செல்வார்கள். இது குற்றங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கை இது. குற்ற சம்பவங்களின் எண்ணிக்கயைக் குறைப்பதற்கான அனைத்து வழிகளையும் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு, திருட்டு, கொலை, கொள்ளை, செயின் பறிப்பு, வாகனங்களைத் திருடுதல் போன்ற குற்றங்களுக்காக 4,100 வழக்குகளில் 3,500 வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்து அவர்களிடம் இருந்து பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்களின் மதிப்பு ரூ. 19 கோடி என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இந்த வழக்குகளில் கைது செய்யப்பட்ட 117 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.
குற்றவாளிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறை தொடங்கியுள்ளது. அதில் குற்றவாளிகளின் விவரங்கள் மற்றும் அவர்களுக்கு எதிரான குற்ற வரலாறு அளிக்கப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்தந்த காவல் நிலைய எல்லையில் உள்ள குற்றப் புலனாய்வுக் குழுக்களின் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு அவர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன என்று சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“