பெண் குரலில் பேசி ஆண்களிடம் மோசடி : எப்படியெல்லாம் ஏமாத்துறாங்க பாருங்க...

Man blackmails over 300 people over sex chats : ஆண் ஒருவர், பெண் குரலில், ஆண்களிடம் பாலியல் ரீதியான ஆசை காட்டி, சென்னையில்...

ஆண் ஒருவர், பெண் குரலில், ஆண்களிடம் பாலியல் ரீதியான ஆசை காட்டி, சென்னையில் மட்டும் 319 பேரிடம் பணேமாசடி செய்துள்ள சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தன்னிடம் பாலியல் ரீதியாக பேசி, தொந்தரவு செய்வதாக, சென்னை போலீசாருக்கு, ‘ஆன்லைன்’ வாயிலாக, தொடர்ந்து புகார்கள் வந்தன.மிரட்டல்புகாரில் குறிப்பிட்டு வரும் எண்ணில் தொடர்பு கொண்டு, போலீசார் விசாரிப்பதும், அந்த எண்ணில், ஆண்கள் பேசுவதும், அப்படி எதுவும் புகார் அளிக்க வில்லை என கூறுவதும், வாடிக்கையாக இருந்தது.மயிலாப்பூர் காவல் மாவட்டத்தில் மட்டும், இதுபோன்று, 170 புகார்கள் வந்தன.

இதனால், இந்த விவகாரம் தொடர்பாக, போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்தனர்.ஒரு புகாரில் குறிப்பிட்டிருந்த எண்ணில் தொடர்பு கொண்டு, போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அதில் பேசிய ஆண் ஒருவர் போலீசாரிடம் கூறியதாவது:ஆன்லைனில் பணம் கட்டி, பெண்களிடம் பேசும் இணையதளம் வாயிலாக, பிரியா என்ற பெண் எனக்கு பழக்கமானார். அவரை பார்க்காமலேயே, அவரது புகைப்படத்தை பார்த்து மயங்கி, தொடர்ந்து அவரிடம் பேசி வந்தேன்.திடீரென, பிரியா என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டதால், போனில் சண்டையிட்டேன். அப்போது, ‘பாலியல் தொந்தரவு செய்வதாக, போலீசில் புகார் அளிப்பேன்’ என, பிரியா என்னை மிரட்டினார்.அவர் தான், எண் மொபைல் எண்ணை, புகார்தாரர் எண்ணாக பதிவு செய்து, புகார் அளித்துள்ளார். மேலும், ‘புகாரை வாபஸ் பெற வேண்டுமானால், எனக்கு பணம் அனுப்ப வேண்டும். இல்லாவிட்டால், நீ என்னிடம் ஆபாசமாக பேசிய ஆடியோவை, போலீசுக்கு அனுப்பி விடுவேன்’ என மிரட்டி, பலமுறை பணம் பறித்துள்ளார்.இவ்வாறு, அவர் கூறினார்.

இதையடுத்து, அந்த பெண்ணின் மொபைல் எண்ணை பெற்று, போலீசார் பேசிய போது, தன்னை பிரியா என அறிமுகம் செய்து, பெண் ஒருவர் பேசி உள்ளார்.ஆசை வார்த்தைகுறிப்பிட்ட அந்த மொபைல் எண் இயக்கம் குறித்து போலீசார் விசாரித்த போது, நெல்லை மாவட்டம், பணங்குடியில் இருப்பது தெரியவந்தது.மயிலாப்பூர் போலீசார், நேற்று முன்தினம் பணங்குடி சென்று விசாரித்தனர். இதில், பெண் குரலில் பேசியது, ஒரு ஆண் என்பதும், அவர், பணங்குடி, முத்தாரம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வள்ளல் ராஜ்குமார் ரீகன், 24, என்ற பொறியியல் பட்டதாரி என்பதும் தெரியவந்தது.ராஜ்குமாரை சென்னை அழைத்து வந்து போலீசார் விசாரித்தனர்.

அவர் அளித்த வாக்குமூலம்:படிப்பு முடித்து, சென்னையில் சில மாதங்கள் பணி செய்தேன். அப்போது, ‘லொகான்டே’ என்ற இணையதளத்தில், பணம் செலுத்தி, பெண்களிடம் பேசுவதை வழக்கமாக கொண்டிருந்தேன்.இந்த இணையதளத்தில், குறிப்பிட்ட காலத்திற்கு பெண்களுடன் போனில் ஆபாசமாக பேசுவதற்கு, 1,000 ரூபாயும், ‘வீடியோ சாட்’ செய்ய, 1,500 ரூபாயும் செலுத்த வேண்டும். ஒருமுறை, அந்த இணையதளத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டனர். அவர்கள், ‘உன் குரல், பெண் குரல் போல உள்ளது, நீயும் பெண் குரலில், ஆண்களிடம் ஆபாசமாக பேசினால், கமிஷன் தருவோம்’ என, ஆசை வார்த்தை கூறினர்.நானும் சம்மதித்தேன். எனக்கு ஏராளமான ஆண்கள் போன் செய்து பேசினர். அவர்களிடம், பெண் குரலில், ஆபாசமாக பேசி உற்சாகப்படுத்தினேன்.

அவர்களை பயமுறுத்த, ‘நீ என்னிடம் ஆபாசமாக பேசி, பாலியல் தொந்தரவு செய்வதாக, போலீசில் புகார் அளிப்பேன்’ என, மிரட்டினேன்.மேலும், ஆன்லைனில், அவர்களின் எண்ணையே பதிவு செய்து, போலீசில் புகார் அளித்தேன். போலீசாரும், புகாரில் குறிப்பிட்ட எண்ணுக்கு போன் செய்து விசாரிப்பர். பின், பதறியடித்து, என்னிடம், ‘ஏன் புகார் அளித்தாய்?’ என, பேசியவர்கள் கேட்பர்.அதை எனக்கு சாதகமாக பயன்படுத்தி, ‘புகாரை வாபஸ் பெற வேண்டு மானால், பணம் தர வேண்டும்’ என கேட்டு, முடிந்த வரை பணம் கறப்பேன்.இதுபோன்று, 300க்கும் மேற்பட்ட ஆண்களை ஏமாற்றி பணம் பறித்துஉள்ளேன். அந்த பணத்தை வைத்து, 6 லட்சம் ரூபாய் செலவில், ஊரில், வீட்டை புதுப்பித்து கட்டினேன். புதிதாக கார் வாங்கினேன். பெற்றோரிடம், வீட்டில் இருந்து, ஐ.டி., நிறுவனத்திற்காக பணிபுரிவதாகவும், கை நிறைய சம்பளம் என்றும் கூறி சமாளித்து வந்தேன்.இவ்வாறு, ராஜ்குமார் வாக்குமூலம் அளித்தார்.இதைத் தொடர்ந்து, அவரை கைது செய்த போலீசார், லேப்டாப் மற்றும் மொபைல் போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

ராஜ்குமார் மீது, போலீசார் இபிகோ சட்டப்பிரிவு 384 ( பணம் பறித்தல்), 506 (i) பிரிவின் கீழ் மிரட்டல் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெண்குரலில் பேசி ஆண்களிடம் மோசடி – ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close