சென்னை மாநகரில் நான்கு சக்கர வாகனங்கள், மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய வேக வரம்புகளை பெருநகர சென்னை போக்குவரத்து காவல் துறை புதன்கிழமை அறிவித்தது.
ஆங்கிலத்தில் படிக்க: Chennai police set 60 km/hr speed limit for cars, 50 km/hr for bikes to curb accidents
சென்னை போக்குவரத்து காவல்துறையின் கூற்றுப்படி, LMV களின் (இலகுரக மோட்டார் வாகனங்கள்) வேக வரம்பு 60 km/hr ஆகவும், HMV (கனரக மோட்டார் வாகனங்கள்) 50 km/hr ஆகவும் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல, இரு சக்கர வாகனங்கள் வேக வரம்பு மணிக்கு 50 கிமீ ஆகவும், ஆட்டோ ரிக்ஷாக்கள் வேக வரம்பு மணிக்கு 40 கிமீ ஆகவும் உள்ளது.
அறிவோம்,
— Greater Chennai Traffic Police (@ChennaiTraffic) November 1, 2023
போக்குவரத்து விதிகளை.
சாலை விதிகளை பின்பற்றுவோம்,
பாதுகாப்பாக பயணிப்போம்.
விபத்தில்லா சென்னை நம்கையில் ! #Chennai #Traffic @R_Sudhakar_Ips @tnpoliceoffl pic.twitter.com/vvmxVnzk4l
குடியிருப்பு பகுதிகளில், அனைத்து வகையான வாகனங்களுக்கும் 30 கி.மீ., வேக வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்ட ஒரு அறிக்கையான, ‘இந்தியாவில் சாலை விபத்துகள் 2022’ என்ற அறிக்கையில், 2022 ஆம் ஆண்டில் சாலை விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைத்த மில்லியனுக்கும் அதிகமான மக்கள் தொகைக் கொண்ட நகரங்களில் சென்னை முதலிடத்தில் உள்ளது.
2021ல் 5,034 சாலை விபத்துகள் நடந்துள்ளன, 2022ல் இந்த எண்ணிக்கை 3,452 ஆகக் குறைந்துள்ளது. சாலை விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவடைந்த நகரங்களின் பட்டியலிலும் தமிழகத்தின் தலைநகரமான சென்னை முதலிடத்தில் உள்ளது.
அறிக்கையின்படி, 68 சதவீத சாலை விபத்துகள் அதிக வேகத்தால் ஏற்படுகின்றன. சாலை விபத்து இறப்புகளில் 65 சதவீதத்திற்கும் அதிக வேகம் தான் காரணம்.
இதற்கிடையில், 2018 முதல் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக விபத்துகள் நடக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது, இது நாட்டின் மொத்த விபத்துகளில் 12.5 சதவீதத்திற்கு பங்களிக்கிறது.
ஜூன் மாதத்தில், போக்குவரத்து விதிமீறல்களை குறைக்கவும், குறிப்பாக அதிவேகமாகச் செல்பவர்களைத் தடுக்கவும், சென்னை நகரப் போக்குவரத்து போலீஸார் பல்வேறு முயற்சிகளைக் கொண்டு வந்தனர். வாகன ஓட்டிகள் அனுமதிக்கப்பட்ட வேக வரம்பை மீறினால், உடனடி சலான்களை வழங்குவதற்காக, முக்கிய சந்திப்புகளில் வேக ரேடார் கருவிகளை போலீசார் பொருத்தியுள்ளனர்.
360 டிகிரியில் சுழலும் திறன் கொண்ட ஆட்டோமேட்டிக் நம்பர் பிளேட் ரெகக்னிஷன் (ANPR) கேமராக்கள் பொருத்தப்பட்ட இரண்டு இன்டர்செப்டர் வாகனங்களையும் போலீசார் வாங்கியுள்ளனர், இதன்மூலம் ஹெல்மெட் இல்லாமல் சவாரி செய்வது, இருசக்கர வாகனங்களில் 3 பேர் பயணிப்பது (டிரிபிள் ரைடிங்), ஃபோனைப் பயன்படுத்தியவாறு வாகனம் ஓட்டிச் செல்வது, அதிவேகமாகச் செல்வது போன்ற அனைத்து வகையான மீறல்களையும் படம்பிடிக்க முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.