2015-ம் ஆண்டு நடைபெற்ற கொலைக்கு, காரணமானவரை கண்டுபிடிக்க, இன்டர்போல் காவல்துறையின் உதவியை சென்னை காவல்துறை நாட உள்ளது.
கே. தினேஷ் குமார் என்பவர் டெலி காலிங் நிறுவனத்தில் வேலை செய்துள்ளார். இந்நிலையில் இவர் கடந்த 8 ஆண்டுகளாக காணவில்லை. 22 வயதான இவரது காதலி அருணாவை இவர் கொலை செய்துள்ளார். அருணாவின் உடல் அவரது கார் டிக்கியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 2015ம் ஆண்டு மார்ச் மாதம் 9ம் தேதி அருணாவின் உடல், தினேஷ்குமாரின் காரின் டிக்கில் கண்டெக்கப்படுகிறது.
காவல்துறை தகவலின் படி, தினேஷ் குமார் மற்றும் அருணா சென்னையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாம் தளத்தில் வசித்து வந்தனர். அருணாவின், தலையில் பூந் தொட்டியை வைத்து தினேஷ் குமார் அடித்ததால் அவர் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவரது உடலை பழைய துணியால் கட்டி, கீழ் தளத்திற்கு தினேஷ் குமார் கொண்டு சென்றுள்ளார். இந்நிலையில் அவரது காரின் டிக்கியில், உடலை வைக்க முயற்சித்துள்ளார். அடுக்குமாடி குடியிருப்பின் பாதுகாவலர் இதற்கு உதவு செய்துள்ளார். அருணாவின் உடலை மூடியிருந்த துணி கிழே விழுந்ததும் பயத்தில் உடலை அங்கேயே விட்டு சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து அவர் காணவில்லை.
இந்நிலையில் சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், சென்னையில் நடைபெற்ற 8 முக்கியமான கொலைகள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு படை அமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது அருணாவின் கொலை தொடர்பாக சிறப்பு படை விசாரணை செய்கிறது.
தினேஷ் குமார் அமெரிக்கா அல்லது கனடாவில் இருப்பதாக காவல்துறை சிறப்பு படைக்கு தகவல் வந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறப்பு படை, இன்டர்போல் உதவியை நாடியுள்ளது. மேலும் சிறப்பு படை காவல்துறை , சில நாடுகளில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்பு கொண்டு, குற்றவாளியின் இடத்தை கண்டறிந்து, அங்குள்ள அதிகாரிகளால் குற்றவாளிகள் விசாரணை செய்யப்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil