சென்னை – தாம்பரம் – ஆவடி ஆணையரகங்களின் காவல் நிலையங்கள் பட்டியல் வெளியீடு!

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 20 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு 25 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

chennai police trifurcation, chennai police, சென்னை காவல் துறை, சென்னை காவல் நிலையங்கள் 3ஆக பிரிப்பு, தாம்பரம், ஆவடி, தாம்பரம் மாநகர காவல் நிலையங்கள், ஆவடி காவல் நிலையங்கள், சென்னை காவல் நிலையங்கள், police station allotted to Tambaram, police station allotted to avadi, chennai, tambaram, avadi

சென்னை பெருநகர மாநகராட்சியில் இருந்த பகுதிகளான ஆவடி, தாம்பரம் இரண்டையும் தனி மாநகராட்சிகளாக அறிவிக்கப்பட்டதையடுத்து, தனி காவல் ஆணையரகங்கள் உருவாக்கப்பட்டு ஆணையர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், காவல் நிலையங்கள் ஒதுக்கப்பட்டு பட்டியல் வெளியாகி உள்ளன.

சென்னையில் பெருநகர மாநகராட்சியில் உள்ள தாம்பரம், ஆவடி பகுதிகள் மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்படும் என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, சென்னை பெருநகர காவல்துறையை மூன்றாகப் பிரித்து தாம்பரம், ஆவடியில் புதிய காவல்துறை ஆணையரகங்கள் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 13ம் தேதி அறிவித்தார்.

இதையடுத்து, தாம்பரம், ஆவடி காவல் ஆணையரகங்களுக்கு ஏடிஜிபி அந்தஸ்தில் உள்ள ஐபிஎஸ் அடிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக அக்டோபர் 1ம் தேதி நியமிக்கப்பட்டனர். தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக எம்.ரவி நியமனம் செய்யப்பட்டார். ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம் செய்யப்பட்டார்.

இதையடுத்து, சென்னை பெருநகர மாநகர காவல் எல்லையில் இருந்த 137 காவல் நிலையங்களை தாம்பரம், ஆவடி மாநகர காவல் எல்லைகளுக்கு பிரிக்கின்ற பணிகள் நடந்து வந்தது. இதையடுத்து, தாம்பரம், ஆவடி மாநகர காவல் ஆணையரகத்திற்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன. தற்போது சென்னை பெருநகர காவல் ஆணையகரத்திற்கு கீழ் 104 காவல்நிலையங்கள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர காவல் ஆணையகரத்தின் கீழ் வரும் காவல் நிலையங்கள் பட்டியல்:

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு 20 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு 25 காவல் நிலையங்கள் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு கீழ் சென்னை மாநகராட்சியில் இருந்த 13 காவல்நிலையங்களும், காஞ்சிபுரத்தில் இருந்த 2 காவல்நிலையங்களும், செங்கல்பட்டில் இருந்த 5 காவல்நிலையங்களும் என மொத்தம் 20 காவல்நிலையங்கள் இனி செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் மாநகர காவல் ஆணையகத்தின் கீழ் வரும் காவல் நிலையங்களின் பட்டியல்:

ஆவடி காவல் ஆணையரகத்துக்கு கீழ் சென்னை பெருநகர காவல் எல்லையில் இருந்த 20 காவல்நிலையங்களும், திருவள்ளூரில் இருந்து 5 காவல்நிலையங்களும் என மொத்தம் 25 காவல்நிலையங்கள் இனி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆவடி மாநகர காவல் ஆணையரகத்தின் கீழ் வரும் காவல் நிலையங்களின் பட்டியல்:

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai police trifurcation police station allotted to tambaram and avadi commissionarates

Next Story
IRCTC Tour: ரயில்வே சார்பில் ராமாயண ரத யாத்திரை… கட்டணம் இவ்ளோதான்!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X