போதைப்பொருட்களுக்கு எதிரான இயக்கம் (டிஏடி) மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலை தயாரிப்புகளுக்கு எதிரான இயக்கம் (டிஏபிடிஓபி) ஆகியவற்றின் கீழ் போதைப் பொருள் கடத்தலுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைது நடவடிக்கை மேற்கொண்டு பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
மேலும் இதன் தொடர்ச்சியாக, போதைப் பொருள் கடத்தல் மற்றும் கள்ளச் சாராயம் விற்பனை குறித்த தகவல்களை மக்கள் தெரிவிக்கும் வகையில் சென்னை காவல்துறை மொபைல் எண்களை அறிவித்துள்ளது.
கடத்தல், பதுக்கல், விற்பனை ஆகியவற்றை தடுக்க நகரில் ரோந்து மற்றும் வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.
8072864204, 9042380581, 9042475097 மற்றும் 6382318480 ஆகிய எண்களில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு மதுவிலக்கு ஆயத்தீர்வு துறை காவலரிடம் சட்டவிரோத போதைப் பொருள், மதுபான விற்பனை குறித்து புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil