/tamil-ie/media/media_files/uploads/2020/02/chennai-6.jpg)
Chennai Port Maduravoyal expressway
Chennai Port Maduravoyal expressway : கப்பற்படையினருக்கு தேவையான வீடுகளை கட்ட நிலம் அடையாளம் காணப்பட்டத்தைத் தொடர்ந்து 20.2 கி.மீ நீளம் கொண்ட சென்னை துறைமுகம் - மதுரவாயில் இடையேயான விரைவு சாலை திட்டம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது. சென்னை துறைமுக அறக்கட்டளை வழங்கிய நிலத்தில் 64 வீடுகள் கடற்படையினருக்காக கட்டப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம், பெங்களூரு செல்லும் சாலையில் கோயம்பேடுக்கு அப்பால் சென்னை துறைமுகத்தை மதுரவாயலுடன் இணைக்கும் வளைவுக்கு கடற்படையின் நிலம் தேவை என்று கோரியது. அதனைத் தொடர்ந்து அவர்களுக்கு புதிய இடம் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறt.me/ietamilஇந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
நேப்பியர் பாலம் அருகே இந்த வளைவு வரும். இங்கு தான் துறைமுகத்தின் 10வது படித்துறை அமைந்துள்ளது. துறைமுக நுழைவு மற்றும் வெளியேற்றத்திற்கு 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2 கோயம்பேடு அருகிலும், மதுரவாயல், சேத்துப்பட்டின் ஸ்பர்டாங் சாலை, மற்றும் சேப்பாக்கத்தின் சிவானந்தா சாலையிலும் இந்த நுழைவு இடங்கள் கட்டப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : குடியாத்தம் தி.மு.க. எம்.எல்.ஏ காத்தவராயன் மரணம்… திமுகவில் தொடரும் சோகம்
2010ம் ஆண்டு ரூ. 1,815 கோடி நிதியில் இந்த திட்டம் துவங்கப்பட்டது. ஆனால் சில ஆட்சேபனைகள் காரணமாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஏற்கனவே 20% கட்டுமானங்கள் முடிவுற்ற நிலையில், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய திட்டம் மற்றும் ஏல அறிவிப்புகளுடன் இந்த பணியை துவங்க உள்ளது. இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் இருக்கும் 1700க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு கட்டிடங்களில் 1500 வரை நீக்க மாநில அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.
நிலத்தேவை
எங்களின் ஒரே பிரச்சனை திட்டத்திற்கு தேவையான நிலத்தினை பெறுவது தான். சரியான நேரத்தில் அது எப்போதும் முடிந்ததே இல்லை. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகள் கட்டும் பணியும் தொடர்ந்து நடைபெறும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. முன்பு நான்கு வழிச்சாலையாக அறிவிக்கப்பட்ட இந்த திட்டம் தற்போது 6 வழிச் சாலையாக மாற்றப்பட உள்ளது. இது ஸ்ரீபெரும்புதூரில் உள்ள பூந்தமல்லி ஹைரோடில் பெங்களூர் - சென்னை எக்ஸ்பிரஸ்வேயுடன் இணைக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறt.me/ietamilஇந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.