Chennai Port Trust moves Madras HC wants bank to repay Rs 100-cr : இந்தியன் வங்கி ரூ. 100.67 கோடி வைப்பு நிதியை உடனே திருப்பி தர வேண்டும் என்று சென்னை துறைமுகம் சார்பில் வியாழக்கிழமை அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த பணத்தை கடந்த ஆண்டு போலி ஆவணங்களை தயாரித்து ஒரு கும்பல் திருடிச் சென்றது குறிப்பிடத்தக்கது.
சி.பி.ஐ. இந்த வழக்கை விசாரித்து வருகின்ற நிலையில், இதனால் தொகையை செலுத்துவதில் பிரச்சனை ஏதும் இல்லை என்றும் வங்கி மட்டத்தில் நடந்த மோசடி என்பதால் பொறுப்பு கூறலில் இருந்து விலகிக் கொள்ள முடியாது என்றும் சென்னை துறைமுகம் சார்பில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஐந்து தவணைகளாக இந்த பணத்தை கோயம்பேடு இந்தியன் வங்கிக் கிளையில் சென்னை துறைமுகம் ஆன்லைன் பேங்கிங் மூலம் செலுத்தியது.
இந்த வைப்பு நிதியை “non-callable” பிரிவில் செலுத்தியது. இந்த பிரிவில் வைப்படும் பணத்தை, முதலீட்டாளர் முன்கூட்டியே எடுக்க முடியாது. அதற்கான அபராதத் தொகை செலுத்திய பிறகு தான் எடுக்க இயலும்.
மே 14ம் தேதி அன்று வங்கியில் இருந்து, ரூ. 62.08 கோடிக்கான வைப்பு தொகை மே 8ம் தேதி முடிவுக்கு வந்தது என்று மின்னஞ்சல் துறைமுகத்திற்கு வந்ததன் பிறகு தான் பிரச்சனைகள் அதிகரித்தது. சென்னை போர்ட் டிரஸ்ட் பொது காப்பீட்டு நிதியத்தின் பெயரில் மே 15 அன்று அவர்கள் வங்கியில் இருந்து ஒரு காசோலை புத்தகம் அனுப்பப்பட்டுள்ளது.
ஜூன் 9ம் தேதி அன்று, சென்னை துறைமுகத்திடம் அறிவிக்காமல் வைப்பு நிதி மாற்றப்பட்ட வங்கிக் கணக்கு மார்ச் 10, 2020 அன்று, கோயம்பேடு கிளையில் துவங்கப்பட்டது என்று வங்கி அறிவித்தது. இது சென்னை துறைமுகத்தின் பொது காப்பீட்டு நிதியத்தின் பெயரில் துணை இயக்குநர் நிதி (சிபிடி) அங்கீகரிக்கப்பட்ட கையொப்பமிட்டவராக பிரதிநிதித்துவப்படுத்திய போலி கணக்காகும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil