/tamil-ie/media/media_files/uploads/2022/01/coronavirus-1-2-2-3.jpg)
141 student tests positive for corona virus in Chennai Mit College
Chennai Pothys 13 employees and Christian college 30 students tested positive to corona: சென்னை குரோம்பேட்டை போத்தீஸ் துணிக்கடையில் 13 ஊழியர்களுக்கும், தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 8981 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. நேற்று, 984 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனிடையே, சென்னையில் மட்டும் 4,531 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது தமிழகத்தில், மொத்தமாக 30 ஆயிரத்து 817 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை குரோம்பேட்டையில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையான போத்தீஸில் 13 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. போத்தீஸ் நிறுவனத்தில் 240 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், 13 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதையடுத்து மாவட்ட நிர்வாகத்தின் அறிவுறுத்தலின் பேரில் போத்தீஸ் கடை மூடப்பட்டுள்ளது.
இதேபோல், கிழக்கு தாம்பரம் கிறிஸ்தவ கல்லூரியில் 30 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே 22 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது மேலும் 30 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து கல்லூரியில் பாதிப்பு எண்ணிக்கை 52 ஆக அதிகரித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.