எழும்பூர், பெரம்பூர், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணியின் காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.
சென்னையின் சில பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எழும்பூர்: பூந்தமல்லி உயர் சாலையின் கீழ்ப்பாக்கம் காவல் நிலையக் குடியிருப்பு பகுதி, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மற்றும் நேரு பூங்கா.
பெரம்பூர்: ஆசிரியர் காலனி, வில்லிவாக்கம் ரோடு, சாரதி நகர், சரஸ்வதி நகர், கலைமகள் நகர், கடப்பா ரோடு.
தாம்பரம்: டிஎன்எஸ்சிபி பெரும்பாக்கம் வரதாபுரம் பிரதான சாலை, நேசமணி நகர், செட்டிநாடுவில்லா, ஆர்சி ப்ளாசம், படிக்கல், சௌமியா நகர் பகுதி முழுவதும், அம்பேத்கர் தெரு, பசும்பொன் நகர், வனத்துறை குடியெருப்பு, பாலாஜி நகர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“