சென்னையில் இன்று (மே 22) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
ஆவடி
ஆவடி சோதனைச் சாவடி, என்.எம். சாலை, நந்தவன மேட்டூர், கன்னிகாபுரம், திருமலைராஜபுரம் மற்றும் நேரு நகர்
திருச்சியில் இன்று (மே.22) எங்கெல்லாம் மின்தடை?
தென்னூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் (22/05/2025) வியாழக்கிழமை அன்று காலை 9:45 முதல் மதியம் 2:00 மணி வரை இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
திருச்சி மாநகரில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் பின் வருமாறு; தில்லைநகர் கிழக்கு, மற்றும் மேற்கு விஸ்தரிப்பு அனைத்து பகுதிகள், காந்திபுரம், அண்ணாமலை நகர், கரூர் பைபாஸ் ரோடு, தேவர் காலனி, தென்னூர் ஹை ரோடு, அண்ணாநகர் கிழக்கு,மேற்கு பகுதிகள், புது மாரியம்மன் கோவில் தெரு, சாஸ்திரி ரோடு, ராக்மானியபுரம், சேஷாபுரம், ராமராயர் அக்ரஹாரம், வடவூர், விநாயகபுரம்,வாமடம், ஜீவா நகர்,மதுரை ரோடு, கல்யாணசுந்தரபுரம், வள்ளுவர் நகர்,நத்தர்ஷா பள்ளிவாசல்,பழையகுட்செட் ரோடு,மேல புள்ளிவாரோடு, ஜாலல்,பக்கிரி தெரு, ஜாலர் குதிரை தெரு, குப்பங்குளம்,ஜாபர் தெரு, பெரிய கடைவீதி, சூப்பர் பஜார், சிங்காரத்தோப்பு,பாபு ரோடு,மதுரம் மைதானம், பாரதியார்தெரு,சுண்ணாம்புக்காரதெரு, சந்துக்கடை, கள்ளத்தெரு, அல்லிமால் தெருகிழதார்தெரு, சப் ஜெயில் ரோடு, பாரதிநகர், இதயா நகர், காயிதே மில்லத் சாலை, பெரிய செட்டி தெரு, சின்ன செட்டி தெரு, பெரிய கம்மாலத் தெரு, சின்ன கம்மாலத்தெரு, மரக்கடை, பழைய பாஸ்போர்ட் ஆபீஸ், வெல்லமண்டி, காந்தி மார்க்கெட், தஞ்சை ரோடு,கல் மந்தை, கூனி பஜார் உள்ளிட்ட பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கே.ஏ. முத்துராமன் தெரிவித்துள்ளார்.
க.சண்முகவடிவேல்