சென்னையில் இன்று (செப்டம்பர் 30) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக தாம்பரம், கிண்டி, போரூர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
தாம்பரம்
கடப்பெரி மெப்ஸ், செம்பாக்கம், சிட்லப்பாக்கம், அற்புதம் நகர், பர்மா காலனி, திருநீர்மலை, கஸ்தூரிபாய் நகர், அமர் நகர், வி.வி.கோவில் தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
கிண்டி
தில்லை கங்கா நகர் வாணுவம்பேட்டை சாந்தி நகர், நிலமங்கை நகர், வள்ளலார் தெரு, கம்பர் தெரு, திலகர் தெரு, தொழில்வரி காலனி 1 முதல் 4வது தெரு, லட்சுமி நகர், ஆண்டாள் நகர் 3 முதல் 5வது குறுக்கு தெரு மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
போரூர்: மங்காடு நண்பர்கள் நகர், ராஜேஸ்வரி நகர், மலையம்பாக்கம், ரஹ்மத் நகர், சக்தி நகர், ருக்மணி நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
பெரம்பூர்
கீழ்பாக்கம் வாட்டர் ஒர்க்ஸ் அயனாவரம், தாகூர் நகர், அண்ணா நகர் ‘ஓ’ மற்றும் ‘எல்’ பிளாக், ஐ.சி.எப் பகுதி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“