Chennai Power Cut, 02nd February: சென்னையில் 02.02.2023 (வியாழக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக அண்ணாநகர், ஐடி காரிடர், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும்.

அண்ணாநகர் பகுதி: ஆர்.வீ நகர் கஜபதி தெரு மற்றும் காலனி, லட்சுமி திரையரங்கம் சாலை, திரு.வி.க பூங்கா, செங்கல்வராயன் தெரு, கதிரவன் காலனி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
ஐடி காரிடர் பகுதி : எல் & டி சிறுசேரி, சபரி குடியிருப்புகள், வேல்ஸ் கல்லூரி ரோடு, கரணை கிராமம், காஸ்மோ சிட்டி, புதுப்பாக்கம் அரசு சட்ட கல்லூரி மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
பெரம்பூர் பகுதி : காந்திநகர் முத்தமிழ் நகர் 2வது பிளாக், பாரதிதாசன் தெரு, அம்பேத்கர் தெரு, கருணாநிதி தெரு, சி.எஸ்.ஐ பள்ளி ரோடு.