Chennai Power Cut, 21st December: சென்னையில் 21.01.2023 (சனிக்கிழமை) இன்று காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை மின்வாரிய பராமரிப்பு பணி காரணமாக மயிலாப்பூர், அடையார், பெரம்பூர் பகுதிகளில் கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

மயிலாப்பூர் பகுதி: சி.ஐ.டி காலனி, சிவசாமி சாலை, பாலசுப்பிரமணியம் தெரு, அப்பாசாமி கோயில் தெரு, வீரபெருமாள் கோயில் தெரு, திருவீதியம்மன் தெரு, ஸ்ரீபுரம் எஸ்.எஸ்-I &II, கந்தசாமி கோயில் தெரு, பாலகிருஷ்ணா தெரு, ஜே.பி அவென்யூ, ஆர்.கே சாலை மெயின் ரோடு, கதீட்ரல் ரோடு ஒரு பகுதி, கோபாலபுரம் 1 முதல் 8வது தெருக்கள் மற்றும் மேற்காணும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகள்.
அடையார் பகுதி : ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் தெற்கு மற்றும் வடக்கு, சோழமண்டல் தேவி நகர், அனுமான் காலனி லிங்க் ரோடு, திருவள்ளுவர் சாலை.
பெரம்பூர் பகுதி : செம்பியம் ஆர்.வி நகர் பகுதி, ஆர்.வி டேங்க் மெயின் ரோடு, பூங்காவனம் நகர்.