சென்னையில் சனிக்கிழமை எங்கெல்லாம் பவர் கட் தெரியுமா?
சென்னையில் சில துணை மின் பகிர்மான நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் எந்தெந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
சென்னையில் சில துணை மின் பகிர்மான நிலையங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சென்னையில் எந்தப் பகுதிகளில் மின்சார விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று டான்ஜெட்கோ தெரிவித்துள்ளது.
Advertisment
சென்னையில் துணை மின் பகிர்மான நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று அறிவித்துள்ளது.
சென்னை சிட்கோ அம்பத்தூர் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் பகுதியில் இருந்து மின்சாரம் பெறுகிற பட்டரவாக்கம், மங்களபுரம், சிட்கோ வடக்குப் பகுதி, யாதவர் தெரு, கட்சனக்குப்பம், டாஸ் எஸ்டேட் பகுதிகள், பி.எஸ்.என்.எல் டெலிபோன் எக்சேஞ்ச் ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல, சென்னை பெருங்குடி பகுதிகளான, கஜுராஅ கார்டன், ரெங்கா ரெட்டி, எம்.ஜி.ஆர் சாலை, சிங்காரவேலன் சாலை, நீலாங்கரை குப்பம், சின்ன நீலாங்கரை, பாலவாக்கம் பகுதிகளான கால்வாய் புரம், கோவிந்தன் நகர், கோலவிழியம்மன் நகர், கந்தசாமி நகர் பெரியார் சாலை, எம்.ஜி.ஆர் நகர், மற்றும் கிருஷ்ணா நகர் ஆகிய பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சார விநியோகம் முழுவதுமாக நிறுத்தப்படும் என்று டான்ஜெட்கோ அறிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"