சென்னையில் துணை மின் நிலையம், மின்சார பாதை சீரமைப்பு, புதிய மின் கம்பம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காகவும், பராமரிப்பு பணிகாகவும் தினந்தோறும் ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படும். அந்த வகையில் இன்று (அக்.9) திங்கட்கிழமை ஒரு சில பகுதிகளில் மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கடபேரி, அன்னை இந்திரா நகர், நியூ காலனி 1வது மெயின் ரோடு முதல் 7வது மெயின் ரோடு, 3வது குறுக்குத் தெரு முதல் 8வது குறுக்குத் தெரு, ஜகதா அவென்யூ மற்றும் ஊமியாள்புரம் பகுதி ஆகிய பகுதிகளில் 5 மணி நேர தடை செய்யப்படவுள்ளது. காலை 9 முதல் மதியம் 2 மணி வரை இந்தப் பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். பணிகள் முன்கூட்டியே முடிவடைந்தால், மதியம் 2 மணிக்கு முன்பே மின்விநியோகம் வழங்கப்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“