அரசு கேபிளில் புதிய தலைமுறை நீக்கம்; கருத்து சுதந்திர ஒடுக்குமுறை: சென்னை பிரஸ் கிளப் கண்டனம்

அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கைக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
chennai press club and nainar

மேலும், “ஊடக சுதந்திரத்தை முடக்குகிறது பாசிச தி.மு.க அரசு” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள தகவல் வெளியானதைத் தொடர்ந்து, சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. 

Advertisment

இது தொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றம் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து புதியதலைமுறை தொலைக்காட்சி நீக்கப்பட்டுள்ள நடவடிக்கையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டிக்கிறது.

தனியார் மற்றும் அரசு கேபிள் நிறுவனங்கள் மற்றும் டிடிஎச் சேவை வழங்கும் நிறுவனங்கள் மூலம், செய்தி தொலைக்காட்சிகள் உட்பட அனைத்து தொலைக்காட்சிகளும் மக்களின் பார்வைக்கு சென்றடைகின்றன. தகுதி இருந்தும் செய்தி தொலைக்காட்சிகளுக்கு இந்த சேவையை வழங்க மறுப்பது அல்லது முன்னறிப்பின்றி ஒளிபரப்பை நிறுத்துவது கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். 

Advertisment
Advertisements

புதியதலைமுறை தொலைக்காட்சி கடந்த இரண்டு தினங்களுக்கு முன், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி அரசு கேபிள் சேவையிலிருந்து நீக்கப்படுள்ளதாக தெரிகிறது.

இது உண்மை எனும் பட்சத்தில், அப்பட்டமான கருத்து சுதந்திர ஒடுக்குமுறையாகும். இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிப்பதுடன் நிறுத்தப்பட்ட ஒளிபரப்பை  உடனே தொடங்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சி அரசு கேபிள் நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து,  “ஊடக சுதந்திரத்தை முடக்குகிறது பாசிச தி.மு.க அரசு” என்று பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “அரசு கேபிள் இணைப்பில் புதியதலைமுறை சேனலைத் தமிழ் சேனல்களின் வரிசையுடன் இடம்பெறச்செய்யாமல் பிற மொழி சேனலாகப் பட்டியலிட்டு தி.மு.க அரசு முடக்கியிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் கடும் அதிர்ச்சியளிக்கிறது. அதே போல, கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ் ஜனம் நியூஸ் சேனலையும் அரசு கேபிள் இணைப்பில் இடம்பெறச் செய்யாமல் தடுத்து வருவது கடும் கண்டனத்திற்குரியது.

தேர்தல் நெருங்கும் வேளையில், தங்கள் ஆட்சியின் தவறுகளை வெளிப்படுத்தும் நபர்கள் மீது வழக்கு பதிந்து முடக்கப்பார்க்கும் திமுக அரசு, தற்போது ஒரு படி மேலே சென்று, தனக்கு எதிரான செய்திகள் வெளியே வரக்கூடாது எனத் தொலைக்காட்சி சேனல்களின் இணைப்பையும் முடக்கிவருவது திராவிட மாடலின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டுகிறது.

“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடும்” என்று சர்வாதிகார அரசு நினைப்பது சிறுபிள்ளைத்தனமானது. எத்தனை திரையிட்டு மறைத்தாலும், திசைதிருப்பு நாடகங்களை நடத்தினாலும் மக்கள் மேடையில் தி.மு.க அரசின் அனைத்துத் தவறுகளும் பட்டியலிடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் பாசிச தி.மு.க-வுக்குத் தக்க தண்டனை வழங்கப்படும்.” என்று கூறினார்.

Chennai

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: