பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் அவர்களின் செல்போன்களை பறிமுதல் செய்து வரும் சிறப்பு புலனாய்வுக் குழுவின் நடவடிக்கையை கண்டித்து சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அண்ணா பல்கழைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கின் முதல் தகவல் அறிக்கை வெளியான வழக்கில், விசாரணை என்ற பெயரில், பத்திரிகையாளர்களை மிரட்டும் வகையிலும் சட்டத்திற்கு புறம்பாக அவர்களின் செல்போன்களை சிறப்பு புலனாய்வுக் குழு பறிமுதல் செய்துள்ளனர். இதனை கண்டித்து பிப்ரவரி 1 ஆம் தேதி சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பாக மன்ற வளாகத்தில் ஆர்பாட்டம் நடைபெறும் என்று சென்னை பத்திரிகையாளர் மன்றம் அறிவித்தது.
/indian-express-tamil/media/post_attachments/5e120fd6-824.jpg)
முன்னதாக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நிர்வாகிகள், சிறப்பு புலனாய்வுக் குழுவின் இந்த நடவடிக்கை குறித்து தமிழக காவல்துறைத் தலைவர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இந்தநிலையில், இன்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் சிறப்பு புலனாய்வுக் குழுவைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பத்திரிக்கையாளர்கள் கலந்துக் கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.