/indian-express-tamil/media/media_files/2025/06/19/private-mini-buses-2025-06-19-08-10-58.jpg)
சென்னைவாசிகள் ஹேப்பி... 11 வழித் தடங்களில் தனியார் மினிபஸ் சேவை தொடக்கம்!
நகர்ப்புற பகுதிகளின் போக்குவரத்து இணைப்பை வலுப்படுத்தும் மாநில அரசின் மேம்படுத்தப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாக, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திங்கள்கிழமை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையர் அலுவலகத்தில் 11 தனியார் மினிபஸ் சேவைகளைத் தொடங்கி வைத்தார்.
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,சென்னையில் 72 புதிய விரிவான “MINI BUS” திட்டம் தொடங்கிவைக்கப்பட்டது…. @mkstalin#Masubramanian#TNHealthminister#DMK4TNpic.twitter.com/wC6LH5zEIz
— Subramanian.Ma (@Subramanian_ma) June 16, 2025
தற்போது மினி பேருந்து சேவை 72 வழித்தடங்களில் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக 11 வழித்தடங்களுக்கு மட்டுமே தற்போது பேருந்து சேவை இயக்கப்பட்டுள்ளது.
சென்னையில் தனியார் மினிபஸ்கள் இயக்கப்படும் வழித்தடங்கள்:
நொளம்பூர் பேருந்து நிலையம் முதல் பருத்திப்பட்டு செக்போஸ்ட் வரையும், கோவிலம்பாக்கம் முதல் காமாக்ஷி மருத்துவமனை வழித்தடத்திலும், போரூர் சுங்கக்சாவடி முதல் ராமாபுரம் டிஎல்எஃப் வழித்தடத்திலும், கைவேலி பாலம் முதல் மடிப்பாக்கம் கூட் சாலை வரை, ஈச்சங்காடு முதல் மடிப்பாக்கம் பேருந்து நிலையம் வழித்தடத்திலும், ஆதம்பாக்கம் ரயில் நிலையம் முதல் ஈச்சங்காடு சந்திப்பு வழித்தடத்திலும் மினி பேருந்து சேவை இயக்கப்படுகிறது.
மேலும், வளசரவாக்கத்தில் உள்ள லாமேச் பள்ளி முதல் மதுரவாயலில் உள்ள மீனாட்சி அரசு மருத்துவமனை வரையும், ஓஎம்ஆர் சர்வீஸ் சாலை, காரப்பாக்கம் முதல் துரைப்பாக்கம் 200 அடி சாலை வரையும், சோழிங்கநல்லூர் முதல் தொரைப்பாக்கம் வரையும், அம்பத்தூர் டன்லப் பேருந்து நிலையம் முதல் பம்மத்துக்குளம் வரையும், ஆழ்வார் திருநகர் முதல் அகரம் மெயின் ரோடு வரையும் மினி பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.
சென்னை மட்டுமின்றி, கிருஷ்ணிகிரியில் 13 வழித்தடங்களிலும், மதுரையில் 32 வழித்தடங்களில், தஞ்சயில் 15 வழித்தடங்களிலும், திருப்பத்தூரில் 10 வழித்தடங்களிலும், ஓசூரில் 15 வழித்தடங்களிலும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 15 வழித்தடங்களிலும் உள்ளிட்ட 3,103 வழித்தடங்களில் மினி பேருந்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. இது பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக, கிராமப்புற மாவட்டங்களில் மினி பேருந்து சேவை இயக்கப்பட்டது அப்பகுதி மக்களுக்கு பெரிதும் உதவுகிறது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.