தமிழகத்தில் முதன்முறையாக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) கிளாம்பாக்கத்தில் உள்ள பேருந்து நிலையத்தை இயக்கவும் பராமரிக்கவும் தனியாரை நியமிக்க உள்ளது.
இந்த நடவடிக்கை பயணிகளுக்கு தரமான சேவையை வழங்குவதையும், சிறந்த வளாகத்தை பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
நாங்கள் விமான நிலைய மாதிரியை ஏற்றுக்கொள்கிறோம். வளாகம் 24 மணிநேரமும் சுத்தமாக வைக்கப்படும். நிறுவனத்திடம் ஒப்படைக்கப்படும் இயந்திரங்களை நாங்கள் வாங்கியுள்ளோம், என்று CMDA அதிகாரி ஒருவர் கூறினார்.
ஒப்பந்ததாரரை தேர்வு செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், டெண்டர் கோரியுள்ளது.
தேர்ந்தெடுக்கப்பட்ட நிறுவனம் வளாகத்தை இயக்கி பராமரிக்கும். 105 கடைகள், பார்க்கிங், நுழைவு கட்டணம் மற்றும் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயைப் பயன்படுத்தி, பேருந்து நிலையம் நாட்டிலேயே சிறந்ததாகப் பராமரிக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.
இருப்பினும், நகர்ப்புற திட்டமிடல் வல்லுநர்கள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அவற்றின் நன்மைகள் மற்றும் குறைபாடுகள் உள்ளன என்கின்றனர்.
பராமரிப்பு கண்காணிக்கப்பட வேண்டும், தனியார் நிறுவனம் அதிக வாகன நிறுத்தம்/ நுழைவு கட்டணம் வசூலித்து பொதுமக்களை கொள்ளையடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஹோட்டல்களில் உணவுக்கான விலையும் கட்டுப்படியாக வேண்டும், என்று முன்னாள் அண்ணா பல்கலைக்கழக நகர்ப்புற பொறியியல் பேராசிரியர் கேபி சுப்பிரமணியன் டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளுதழுக்கு அளித்த பேட்டியில் கூறினார்.
பேருந்து நிலையத்தின் உட்புறம் தயாராக உள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர். பளபளப்பான ஓடுகள், நேர்த்தியான கழிப்பறைகள், ஆடம்பரமான லிஃப்ட் பயணிகளுக்காக காத்திருக்கின்றன. இருப்பினும், ஜிஎஸ்டி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்பதால், பகுதிவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கவலையடைந்துள்ளனர்.
வெள்ளப்பெருக்கை தடுக்க முனையத்தின் குறுக்கே கால்வாய் அமைக்கப்படும் என சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்தனர்.
குடியிருப்பு வாசிகளும் பேருந்து நிலையத்தை விரைவில் திறக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். பண்டிகை சீசன் நெருங்கி வருகிறது. பேருந்து நிலையம் திறந்தால் நன்றாக இருக்கும், என்று சென்னைவாசிகள் கூறுகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.