இனி லீவ்னா QueensLand பக்கலாம் போக முடியாது.. மூட சொல்லி போலீஸ் உத்தரவு போட்டாச்சி!

குயின்ஸ் லேண்ட்-ல் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததன.

குயின்ஸ் லேண்ட்-ல் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai queensland accident

chennai queensland accident

chennai queensland accident : சென்னை பூந்தமல்லி அருகேயுள்ள பிரபல குயின்ஸ் லேண்ட் பொழுதுபோக்கு பூங்காவை, தற்காலிகமாக மூட காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

சென்னை பூந்தமல்லி அடுத்த பழஞ்சூர் பகுதியில் குயின்ஸ் லேண்ட் தனியார் பொழுதுபோக்கு பூங்கா அமைந்துள்ளது. இந்த பொழுதுபோக்கு பூங்காவில் free fall tower எனும் ராட்டினம் உள்ளது. கடந்த 18ம் தேதி இந்த ராட்ச ராட்டினத்தில் சுற்றுலாப் பயணிகள் சென்ற போது, அதன் ஒரு பகுதி திடீரென்று அறுந்து கீ​ழே விழுந்தது. ராட்டினத்தில் சென்ற அனைவரும் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

வயர் அறுந்து விழுந்து ராட்டினம் விபத்தாகும் வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. பலரும் இந்த வீடியோவை அதிகளவில் பகிர்ந்து வந்தனர். குயின்ஸ் லேண்ட்-ல் ராட்சத ராட்டினம் அறுந்து விழுந்ததன் எதிரொலியால், அந்த பூங்காவை மூடுவதற்கு போலீசார் உத்தரவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வருவாய் துறையினரின் ஆய்வுக்கு பிறகே குயின்ஸ் லேட்ண்ட் பூங்காவை மீண்டும் திறக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisment
Advertisements

சில ஆண்டுகளுக்கு முன்பு இதே குயின்ஸ் லேண்டில் போட்டிங் சென்ற படகு தீடீரென்று ஏரியில் நிலைதடுமாறி விழுந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. விடுமுறை நாட்களில் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் பெரும்பாலானோர் கூட்ட கூட்டமாக குயின்ஸ் லேண்ட் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் தீடீரென்று பூங்கா மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது பொதுமக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

Poonamalle

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: