/tamil-ie/media/media_files/uploads/2023/02/train-7-1-1-4-2.jpg)
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், ரயில்வே துறை ஏ.டி.ஜி.பி., வனிதா செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, "ரயில்வே சேவையை பயன்படுத்தும் பொழுது, எங்கேயாவது தப்பு நடக்கும் பட்சத்தில், மக்கள் தங்களது குறைகளை டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை மூலம் எங்களுக்கு கூறலாம். அல்லது பாதுகாப்பு சம்மந்தப்பட்ட எந்த குறையாக இருந்தாலும் 1512 என்ற எண்ணின் மூலம் எங்களிடம் புகார் அளிக்கலாம்.
சமீபத்தில் வடமாநிலத்தவர் தாக்குதல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பகிர தொடங்கியது. பலர் 1512 எண்ணை உபயோகித்து புகார் அளித்தனர். தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க உதவிய மக்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும்.
பொது இடங்களில் தனிப்பட்ட, மொழிவாரியான, அரசியல் ரீதியான கருத்துக்களை சொல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட வீடியோவை ஷேர் செய்தவர்களுக்கு சம்மன் கொடுத்து விசாரணை நடத்தினோம். இவ்வாறான செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்", என்று வட மாநில இளைஞர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து ரயில்வே ஏ.டி.ஜி.பி., விளக்கம் அளித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.